என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, நவம்பர் 16, 2012

31 துப்பாக்கியின் கர்த்தா ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு மடல்.....



பிராப்ள பிரபல இயக்குநர் நண்பர் முருகதாஸ் அவர்களுக்கு,
ஒரு சராசரி சினிமா ரசிகன் எழுதிக்கொள்வது....... நலம்.நலமா?

என்னடா இவன் நமக்கு கடிதம் எழுதியிருக்கானே என்று நினைக்கிறீர்களா? துப்பாக்கியின் கர்த்தா நீங்கள்தான். விஜய் வெறும் கருவி, அதுதான் கருவியை விட்டுவிட்டு கர்த்தாவிற்கு மடல் எழுதுகிறேன்.

இந்தியாவின் மிகப்பெரிய பலமே வேற்றுமையில் ஒற்றுமைதான். அந்த ஒற்றுமைக்கே வேட்டு வைப்பது போல் சில காட்சியமைப்புகள் துப்பாக்கியில் இருக்கிறது. சினிமா என்பது மிகப்பெரிய ஊடகம். மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்று. அப்படிப்பட்ட சாதனத்தில் சமூக கருத்துக்களை திணிக்கும்போது கத்தி மேல் நடப்பது போல்தான் காட்சியமைப்புக்கள் இருக்க வேண்டும். அதை விடுத்து ஒரு சமூகத்தை தொடர்ந்து தீவிரவாதியாக சித்தரிக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கு?

விஜயகாந்த், அர்ஜூனெல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும் குற்றம் சொல்வது நியாயமா என்று கேட்பது புரிகிறது. மணிரத்னத்தின் ரோஜா காலத்திலிருந்தே இப்படிப்பட்ட சர்ச்சைகள் எழுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் இப்போதுள்ளதுபோல் மீடியாவோ, சமூக வலைத்தளங்களோ இல்லை. அதனால் அந்த போராட்டங்களெல்லாம் பெரிய கவனத்தை பெறவில்லை. அதைப்போல் விஜயகாந்த், அர்ஜூனெல்லாம் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு உங்கள் சிந்தனை இருக்கிறது. அவர்களாவது வெளி நாட்டிலிருந்துதான் தீவிரவாதிகளை இறக்குமதி செய்தார்கள். ஆனால்,நீங்களோ உள்நாட்டிலேயே அவர்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதுதான் கொடுமை.

இந்தப்படத்திற்கு பிறகு பக்கத்து வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் என்று எல்லோரையும் சிலிப்பர் செல்லாக பார்க்க ஆரம்பித்து விட்டால் போச்சு. நேற்றுவரை ஒண்ணுக்கு ஒண்ணாக பழகியவர்கள் இன்று சந்தேக கண்ணோடு பார்த்தால் ஒற்றுமேயே காலியாக விடும். நானெல்லாம் எல்லாருடனும் நட்பு பாராட்டுபவன். என்னையும் அப்படி பார்த்தால் என் நிலை என்னாவது?வேற்றுமையின் ஒற்றுமை என்ற இந்தியாவின் கட்டமைப்பே நொறுங்கிவிடுமே....



மனவேதனையுடன் இன்று காலை இனையத்தை மேய்ந்த போது
துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜயின் சார்பில் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும் இப்படிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றதற்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மூவரும் நேற்று அறிவித்துள்ளனர்.
நேற்று இரவு கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் 24 முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் மூவரும் நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது கூறுகையில், "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.
முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர் என்ற செய்தியும், ஒரு யூடியூப் வீடியோவும் கண்ணில் பட்டது. அதை பார்த்ததும் ஓரளவு மனப்புண்ணுக்கு மருந்திட்டது போல் இருந்தது.






அதற்காக, உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். சர்ச்சைக்குரிய சில காட்சியமைப்புக்களை நீக்க முடிவு செய்ததன் மூலம் முஸ்லீம் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாகவே நான் உணர்கிறேன். இனிமேல் இப்படிப்பட்ட எந்த ஒரு மத, மன உணர்வுகளை புண் படுத்தும் காட்சியமைப்புகளை எப்போதும் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் இந்த முடிவெடுக்க காரணமான (எந்தவித அசம்பாவிதமும் இன்றி கவனத்தை ஈர்ப்பதற்காக போராடிய) இஸ்லாமிய அமைப்புக்களுக்கு நன்றியும்,பாராட்டுக்களும் உங்களுக்கு எழுதிய கடிதம் மூலமாகவே தெரிவித்து கொள்கிறேன். நன்றி




Post Comment

இதையும் படிக்கலாமே:


31 கருத்துகள்:

  1. நல்லது நடந்த வரைக்கும் சந்தோசமே..

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிக அழகாக தெளிவாக சொல்லிவிட்டீர்கள் கஸாலி அண்ணே. இந்த சம்பவத்தை பாடமாக கொண்டு இனிவரும் படங்கள் இதுப்போன்ற விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். இது தொடராமல் இருக்க தயாரிப்பாளர், இயக்குனர் சங்கங்களிடம் இதுக்குறித்த புரிதலை கொண்டுவரவும், சென்சார் போர்ட் ரூல்களை ஆவண செய்ய கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    இந்த பிரச்சனையில் தோளோடு தோல் நின்ற முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கும், சமுதாய இயக்கங்களுக்கும், காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்ட துப்பாக்கி குழுவினருக்கும், ஊடகங்களுக்கும், பத்திரிக்கை மற்றும் வலையுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  3. // காட்சியமைப்புக்களை நீக்க முடிவு செய்ததன் மூலம் முஸ்லீம் உணர்வுகளுக்கு மதிப்பளித்ததாகவே நான் உணர்கிறேன் //

    ம்ம்... இந்த கோணத்தில் யோசிக்காமல் படம் எடுத்தாலும்... சுட்டிக்காட்டியவுடன் திருத்திக் கொண்டது நல்ல விஷயமே... மனம் திறந்து பாராட்டுவோம்....

    பதிலளிநீக்கு
  4. கருத்தை ஏற்று மன்னிப்பு கேட்டமைக்கு மகிழ்ச்சிதான் பாராட்டுக்கள். எப்படியோ அவர்கள் போராட்டத்துக்கு முடிவு கிடைத்துவிட்டது

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு கஸாலி.. எப்படியோ எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. இஸ்லாமிய உணர்வுகளை மதித்து மன்னிப்பு கோரியதைப் பார்க்கும்பொழுது.... அவர்களிடம் உள்நோக்கம் இல்லை என்பது புரிகிறது.... பாராட்டுக்கள்.

    மேலும் இஸ்லாமிய துவேஷத்தோடு கதைக்களங்கள் அமைக்கும் கலையுலக தீவிரவாதிகளுக்கு இந்த மன்னிப்பின் மூலம் செருப்படி கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  7. பரிகாரமாக விஜய் வேறொரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்தார். :(

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு ...பெரிய கலாட்டா எதுவும் இல்லாமல் சுமூகமாக
    மேட்டர் முடிஞ்சிபோச்சி ...மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  9. muslim madayankaluku vera velaiye illayaa? padathai paarthomaa veeduku ponoma illamaa ... ithellam veendaatha velai.. unmailye muslim teevera kaaran taane.. unmaya sonna ethuku kovam. seirathu theevara seiyal..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sivaje36 nee mudhalla nalla mananoi doctor ra poi parthu unnoda paithiyathukku vaithiyam parththu vittu apparam ithu pondra pothu perachchanaikku karuththu Sollava da mental.

      நீக்கு
    2. Admin Ku oru Anbana vayndokol sivaje36 pondra paithiyakarargal karuththukkalai vudaney neekki vidavum.

      நீக்கு
  10. இந்த மாதிரி எல்லா பிரச்சினைகளும் சுமுகமா முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்.

    ரஹீம் கஸாலி உங்களின் இந்த கடிதப் பதிவு வாசகங்கள் உங்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. மகிழ்ச்சியும் நன்றியும் :-)))).

    எதிர்ப்பு வந்தவுடன் அதை உணர்ந்து சில காட்சிகளை நீக்க முடிவெடுத்த திரை பிரமுகர்களும் பாராட்டப்படவேண்டியவர்களே.

    :-)))

    #படம் பொங்கலுக்கு டி.வில் போடுவங்களா..... படம் பார்க்க ஆவலுடன் :-)))

    பதிலளிநீக்கு
  11. #படம் பொங்கலுக்கு டி.வில் போடுவங்களா..... படம் பார்க்க ஆவலுடன் :-)))

    என்னா குசும்பு..

    பதிலளிநீக்கு
  12. நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  13. எந்த அசம்பாவிதமும் இன்றி கவனத்தை ஈர்ப்பதற்காக போராடிய/// இதானே முக்கியம்...!! :)

    பதிலளிநீக்கு
  14. கஸாலி... நீங்களுமா ?

    இதுல ஓவர் ரியாக்ட் பண்றதுக்கு ஒண்ணுமே இல்லை...

    முதலில் இது சினிமா... இதை நிஜவாழ்க்கையோடு ஒப்பிடுவதே தவறு... இரண்டாவது, ஒவ்வொரு சினிமாவிலுமே கெட்டவர்களாக சில கதாப்பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன... அவர்கள் கண்டிப்பாக தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள்...

    தென்னாடுடுடைய சிவனே போற்றி என்று சொல்லிக்கொண்டே வில்லத்தனம் செய்யும் அன்பே சிவம் நாசர், சோட்டானிக்கரை அம்மன் விபூதி வைத்துக்கொண்டு வைரம் கடத்தும் பீட்சா வில்லன் இப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன...

    ஏன் அப்பாசியை கெட்டவராக சித்தரித்த அதே படத்தில் டேவிட் பில்லா, டிமித்ரி என்ற இரு கிறிஸ்தவர்களையும் தவறாக சித்தரித்திருந்தார்கள்...

    எல்லாரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்லும் போது நீங்கள் மட்டும் ஏன் தொட்டதிற்க்கெல்லாம் பொங்கல் வைக்கிறீர்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அய்யா பிரபாகரன் அவர்களே .....இது சினிமாதான் இல்லை என்று சொல்லவில்லை ....இன்று நம் தமிழ் நாட்டை கடந்த 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்வது சினிமாகாரர்கள்தான் .....எம்ஜியார் இன்னும் சாகவில்லை என நினைக்கும் மக்கள் உள்ள பூமி .....
      தனிநபர் வில்லனை எந்த மதமாக காட்டினாலும் ஒரு பிரச்சனையும் இல்லை...உதாரணம்
      வெற்றி விழா " சிந்தா ".....தலைநகரம் வில்லன் ,...பல படங்களில் பொன்னம்பலம் "முஸ்லிம் கேரக்டரில் வில்லன் அடியாளாக வருவார் ...
      அதே நேரம் நீங்கள் உன்ரை புரிந்து கொள்ள வேண்டும் கதாநாயகன் எப்பொழுதும் இஸ்லாமிய வேடங்களில் வருவது அபூர்வம் (விதிவிலக்காக ...எம்ஜியார் -சிரித்து வாழ வேண்டும் , சிவாஜி - பாவ மன்னிப்பு (இறுதியில் சிவாஜி முஸ்லிம் இல்லை தெரிய வரும் )சமீபத்தில் விஜயின் -சந்திரலேகா .விஜயகாந்தின் கள்ளழகர் ..போன்றவை தோல்வி படங்கள் )....சினிமாவை பொறுத்தவரை பெருன்பான்மை சமூத்தை சார்ந்தவர்கள்தான் கதாநாயகனாக இருக்கணும்...எனவே அதே சமுகத்தை சேர்ந்தவரைத்தான் (தனிநபர் ) வில்லனாக காட்டுவார்கள் ......இதுவரை எந்த படத்திலேயாவது காவி தீவிரவாதத்தை காட்டியது உண்டா ?....அப்படி என்றால் ....கீழே உள்ள நிகழ்வுகளை யார் செய்தனர் ..............


      சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

      சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

      மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?


      அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

      கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

      மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

      நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

      குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

      நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

      நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

      விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

      பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

      கார்க்ரேவை கொன்றவன் யார் ?
      ஆந்திராவில் மாட்டு தலையை வெட்டி போட்டு கலவரத்தை தூண்டியவன் யார்?

      பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தவன் யார் ?


      .இப்படி சொல்வதால் தீவிரவாத சிந்தனை கொண்ட இஸ்லாமியர்களை ஆதரிப்பபதாக அர்த்தம் கிடையாது ...தீவிரவாதம் தவிர்க்க, தடை செய்ய வேண்டியது அது எந்த மதத்தினர் செய்தாலும் ....இங்கு ஒருதலைபட்சமாக மீடியாக்கள் செயல்படுகிறது ....அதுதான் கோபம் வருகிறது


      நீக்கு
    2. இந்த நாட்டின் இறையாண்மையை இல்லாமல் ஆக்குபவன் யார் ?
      2003 மார்ச் 13:- மும்பை ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலி.
      2003 ஆக 25:- மும்பையில் 2 கார் குண்டுகள் வெடித்து 60 பேர் பலி.
      2005 அக் 29:- டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் பலி.
      2006 மார்ச் 7:- காசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி.
      2006 ஜூலை 11:- மும்பை ரெயில்களில் 7 குண்டுகள் வெடித்தன. 180 பேர் பலி.
      2006 செப் 8:- மலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் பலி.
      2007 பிப் 19:- பாகிஸ்தானுக்கு சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் பலி.
      2007 மே 18:- ஐதராபாத் மசூதியில் குண்டு வெடித்து 11 பேர் பலி.
      2007 ஆக 25:- ஐதராபாத்தில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
      2008 மே 13:- ஜெய்ப்பூரில் 7 இடங்களில் குண்டு வெடித்தது. 63 பேர் பலி.
      2008 ஜூலை 25:- பெங்களூரில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. 1 பெண் பலி.
      2008 ஜூலை 26:- ஆமதாபாத்தில் 16 இடங்களில் குண்டு வெடித்தது. 45 பேர் பலி.
      2008 செப் 13:- டெல்லியில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடித்தது. 23 பேர் பலி.அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.
      இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
      இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.
      மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.
      இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.பாகல்பூர் கலவரம்: பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.
      இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின. ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.
      இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
      தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல் விஜய் மணிரத்னம் முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?

      நீக்கு
  15. பெயரில்லா17 நவ., 2012, 2:07:00 AM

    @Philosophy Prabhakaran

    பில்லா, பீட்சா, அன்பே சிவம் போன்ற சில படங்களில் வில்லனாக வருபவர் இந்தியாவை குண்டு வைத்து தகர்ப்பவராக காட்டப்படவில்லை. விதிவிலக்குகளை விட்டு விடுங்கள். ஆனால் இஸ்லாமியர்களை மட்டும் பல ஆண்டுகளாக அதே கேரக்டரில் சித்தரிப்பது நெருடத்தான் செய்கிறது.

    பிரபாகர்...கேரள டீக்கடை பெண்கள் வரும் காட்சிகள் மற்றும் முஸ்லிம்களை தீவிரவாதியாக தொடர்ந்து சித்தரிக்கும் தமிழ் சினிமா படைப்பாளிகள் ஏன் தருமபுரி சம்பவத்தை தட்டிக்கேட்டு அதே ஜாதிப்பெயருடன் படமெடுக்க கூடாது? படத்தை விடுங்கள். தலைப்பு வைத்தாலே டப்பா டான்ஸ் ஆடி விடும் என்பது கோடம்பாக்க மேதைகளுக்கு தெரியும். உதாரணம்: சண்டியர்.

    கேரளத்தில் சமீபத்தில் நான் பார்த்தவரை கடைகளில் வியாபாரம் செய்யும் பெண்கள் ரவிக்கைக்கு மேலே துண்டு ஒன்றை அணிந்துள்ளனரே தவிர தமிழ் படங்களில் வருவது போல கவர்ச்சியாக மார்பகத்தை காட்டுவது இல்லை.

    அஜ்மல் கசாப் போன்றோர் செய்யும் செயல்களுக்கு இஸ்லாமியர்களும் கண்டனம் தெரிவித்தனர் என்பதை மறுக்க இயலாது. இஸ்லாமியர்கள் என்றாலே இப்படித்தான் என்று அடுத்த தலைமுறை மனதிலும் ஒரு தவறான பிம்பம் வருவது சரியல்ல. ஷாருக் படம் 'மை நேம் இஸ் கான்' நேர்மையான முஸ்லிம்களின் மன உளைச்சலை எடுத்து சொல்லி இருக்கும். அவர்களின் மன நிலையில் இருந்து சற்று யோசித்தால் அதன் வலி புரியும்.


    'நான் படைப்பாளி. இப்படித்தான் எடுப்பேன்' என்று சொல்பவர்கள் உரிமை மீது எனக்கு எந்த எதிர்கருத்தும் இல்லை. நடிப்பதோடு வாயை மூடிக்கொண்டு இருந்தால் நன்று. ஆனால் மேடைகளில், ஊடக பேட்டிகளில் 'எல்லா மதமும் என் மதம். இஸ்லாமியர்கள் என் ரத்தம்' என்று பேசிவிட்டு படத்தில் இன்னொரு முகத்தை காட்டுவது சரியா?

    'என் மகன் அனைத்து மத தாய்மார்களுக்கும் நல்ல பிள்ளை. அடுத்த படத்தில் முஸ்லீமாக நடிப்பான்' என்று சட்டென சொன்ன எஸ்.ஏ.சி. படத்தின் ப்ரிவ்யூ பார்க்கையில் இதை யோசித்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சொல்லி இருக்கலாமே?

    ஒன்று கமல் போல 'என் படம் இப்படித்தான்' என்று எடுக்க வேண்டும். இல்லை என்றால் சமத்துவ எண்ணத்துடன் படம் எடுக்க வேண்டும். நாளைய முதல்வர் ஆசையில் 'எல்லா மத மக்களும் என் சொந்தங்கள்' என்று பொது இடத்தில் நெஞ்சுருக பேசிவிட்டு வணிகம் என்று வரும்போது அதை மறப்பது ஏற்புடையது அல்ல.

    இறுதியாக...

    சினிமாவை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடமால் இருப்பது இங்கு சாத்தியமா? நேற்றைய, இன்றைய, நாளைய முதல்வர்களை சினிமாவில் தேடும் மக்கள் உள்ளபோது ஒப்பிடாமல் இருப்பதுதான் தவறு.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா17 நவ., 2012, 2:17:00 AM

    @பிரபாகரன்

    //எல்லாரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்துசெல்லும் போது நீங்கள் மட்டும் ஏன் தொட்டதிற்க்கெல்லாம் பொங்கல் வைக்கிறீர்கள்...!//

    என்னது எல்லாருமா????????????????????

    இந்து கட்சிகள் திரைப்படங்கள் குறித்து இதுவரை ஒரு போராட்டம் கூட செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? ஜாதிக்கட்சி தலைவர்கள் கமல் போன்ற நடிகனுக்கு தராத இம்சையா? பால் தாக்கரே 'மை நேம் இஸ் கான்' படத்திற்கு குடுக்காத தொந்தரவா? வரவிருக்கும் நீர்ப்பறவை படத்தின் பாடல் வரிகளுக்கு கூட கிறிஸ்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வரிகள் மாற்றி அமைக்கப்பட்டது என்று செய்திகள் வருகின்றன.

    அப்படி இருக்கையில் தொடர்ந்து தேசவிரோதிகள் போல இஸ்லாமியர்களை சித்தரித்து வருவதை எதிர்த்து வன்முறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவது தவறே அல்ல என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா17 நவ., 2012, 2:24:00 AM

    @பிரபாகரன்

    காதல் செய்த ஒரே குற்றத்திற்கு ஊரை எரித்த செய்தி சமீபத்தில் படித்தோம். அதை மையமாக வைத்து ஒரு படைப்பை எடுத்தால் அந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதா? அப்படியே வந்தாலும் அதில் சாதிப்பெயர்கள் வசனமாக வரும் இடமெல்லாம் 'beep' சத்தத்துடன்தான் இருக்கும். அப்போது கூட சாதிக்கட்சி தலைவர்கள்/வெறியர்கள் வன்முறையின்றி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா??? அவர்களை விட 'துப்பாக் கிக்காக' வன்முறையற்ற போராட்டம் எவ்வளவோ மேல்.

    படைப்பாளிக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அது போல அதை எதிர்த்து குரல் கொடுக்க பிறருக்கும் உரிமை உண்டு.

    பதிலளிநீக்கு
  18. மறுபடி, மறுபடி ஒரே கேள்வியை வெவ்வேறு ஆங்கிளில் கேட்கிறீர்கள்... ஏன் அதைப்பத்தியெல்லாம் சினிமா எடுக்க மாட்டாங்களா'ன்னு கேட்கிற உரிமை யாருக்கும் கிடையாது... அது அவருடைய சாய்ஸ்... ஏன் இப்படி எடுத்திருக்கிறார்கள், அது சரியா தவறா என்பது மட்டுமே இங்கே வாதம்...

    அப்படியே பார்த்தாலும் கல்லூரி படத்தில் தருமபுரி சம்பவம், நீங்கள் சொன்ன அதே படத்தில் கொத்தாளத்தேவன் கொள்ளை பேரை கொல்லுவது, தேவர் மகன் படத்தில் மிக மிக பகிரங்கமாக தேவர்களின் அழிச்சாட்டியத்தை காட்டியிருக்கிறார்கள்... எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஏன் அதைப்பற்றி எல்லாம் படமெடுக்க மாட்டார்களா என்று கேட்பது அபத்தம்... ஒருவேளை முருகதாஸ், சாதி கலவரத்தை மையமாக வைத்து படமெடுத்திருந்தால் ஏன் முஸ்லிம்கள் டவுசரை எல்லாம் அவுக்க மாட்டாரான்னு நீங்களே தான் கேட்டிருப்பீங்க...

    அதாவது, லெக் சைடில் பந்து போட்டால் நீ ஏன் ஹாப் சைடு போட மாட்டேங்குற என்பது, ஹாப் சைடில் போட்டால் நீ ஏன் லெக் சைடு போட மாட்டேங்குற என்பது... இதைத்தான் நட்டநடு சென்டர் என்று சொல்கிறோம்...

    இன்னொரு விஷயம், தேவர்களையோ அல்லது மற்ற சாதியினரையோ கடிந்துக்கொள்ளும் படங்களில் பகிரங்கமாக சாதிப்பெயர் சொல்லி கிழிக்க தைரியமிருக்கா'ன்னு கேட்பீங்க... துப்பாக்கி படத்தில் எந்த இடத்திலும் 'முஸ்லீம்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டவில்லை... இதை மட்டும் குறிப்பால் உணர்ந்துக்கொள்பவர்கள் ஏன் மற்றவற்றையும் குறிப்பால் உணர்ந்துக்கொள்வதில்லை...

    தமிழ் படங்களில் மலையாளிகள், மலையாள படங்களில் தமிழர்கள், ஹிந்தி படத்தில் தமிழன் நூடுல்ஸில் தயிர் சாதம் ஊற்றி சாப்பிடுவது இதெல்லாம் தவறான விஷயம் தான்... ஆனால் நண்பர்களுக்குள் கிண்டலடித்துக் கொள்வதை போலவே பெரும்பான்மையினர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயம்...

    துப்பாக்கியை பார்த்துவிட்டு இஸ்லாமியர்கள் என்றாலே இப்படித்தான் என்று அடுத்த தலைமுறையினர் புரிந்துக்கொள்வார்களானால், ஏன் மை நேம் இஸ் கான் படத்தை பார்த்து அப்படியெல்லாம் இல்லை என்று தெளிவுற மாட்டார்கள்... அடுத்த தலைமுறையினர் நம்மை விட மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள்...

    இறுதியாக, விஜய்க்கு சொம்படிப்பது என் வேலை இல்லை... இதுபோன்ற சம்பவங்களில் விஜய் மற்றும் அவருடைய தந்தையின் இரட்டைவேட முகமூடிகள் கிழிவதில் எனக்கு மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா18 நவ., 2012, 10:28:00 AM

      //ஏன் அதைப்பத்தியெல்லாம் சினிமா எடுக்க மாட்டாங்களா'ன்னு கேட்கிற உரிமை யாருக்கும் கிடையாது.//

      எதைப்பற்றி வேண்டுமானாலும் படம் எடுக்கும் உரிமை சினிமாக்காரர்களுக்கு இருக்கும்போது கேள்வி கேட்கும் உரிமை பணம் குடுத்து படம் பார்ப்பவனுக்கு இருப்பதில் என்ன தவறு??


      //ஒருவேளை முருகதாஸ், சாதி கலவரத்தை மையமாக வைத்து படமெடுத்திருந்தால் ஏன் முஸ்லிம்கள் டவுசரை எல்லாம் அவுக்க மாட்டாரான்னு நீங்களே தான் கேட்டிருப்பீங்க... //

      இது உங்கள் அவதானிப்பு.


      //அதாவது, லெக் சைடில் பந்து போட்டால் நீ ஏன் ஹாப் சைடு போட மாட்டேங்குற என்பது, ஹாப் சைடில் போட்டால் நீ ஏன் லெக் சைடு போட மாட்டேங்குற என்பது... இதைத்தான் நட்டநடு சென்டர் என்று சொல்கிறோம்//

      நான் தெளிவாக சொன்னதை மீண்டும் படிக்க. கட்சி ஆரம்பித்து நாட்டை ஆளும் எண்ணம் கொண்ட யூத் தளபதி போன்றோர் இவ்வாறு இரட்டை வேடம் போடலாமா என்பதே என் கேள்வி. 'தான் செய்தது தவறு. சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம். அடுத்த படத்தில் முஸ்லீமாக நடிக்கிறேன்' என்று ஏன் பல்டி அடிக்க வேண்டும்????

      //துப்பாக்கி படத்தில் எந்த இடத்திலும் 'முஸ்லீம்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டவில்லை... இதை மட்டும் குறிப்பால் உணர்ந்துக்கொள்பவர்கள் ஏன் மற்றவற்றையும் குறிப்பால் உணர்ந்துக்கொள்வதில்லை//

      அந்த கேரக்டர்களின் பெயரை வைத்து கூட அவர்கள் முஸ்லிம் என்று அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாள்களா?


      //தமிழ் படங்களில் மலையாளிகள், மலையாள படங்களில் தமிழர்கள், ஹிந்தி படத்தில் தமிழன் நூடுல்ஸில் தயிர் சாதம் ஊற்றி சாப்பிடுவது இதெல்லாம் தவறான விஷயம் தான்... ஆனால் நண்பர்களுக்குள் கிண்டலடித்துக் கொள்வதை போலவே பெரும்பான்மையினர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயம்.//

      இதற்கு பதில் உங்களிடமே உள்ளது. அது இதுதான்:

      //மறுபடி, மறுபடி ஒரே கேள்வியை வெவ்வேறு ஆங்கிளில் கேட்கிறீர்கள்... ஏன் அதைப்பத்தியெல்லாம் சினிமா எடுக்க மாட்டாங்களா'ன்னு கேட்கிற உரிமை யாருக்கும் கிடையாது... அது அவருடைய சாய்ஸ்... ஏன் இப்படி எடுத்திருக்கிறார்கள், அது சரியா தவறா என்பது மட்டுமே இங்கே வாதம்...//

      போராட்டம் செய்வது முஸ்லிம் சகோதரர்களின் சாய்ஸ். அதை கேட்கிற உரிமை பிறருக்கு எது? இந்து மக்கள் போராடவில்லை என்பதற்காக இஸ்லாம் மக்களும் போராட்டம் செய்யக்கூடாது என்பது என்ன லாஜிக்?

      //துப்பாக்கியை பார்த்துவிட்டு இஸ்லாமியர்கள் என்றாலே இப்படித்தான் என்று அடுத்த தலைமுறையினர் புரிந்துக்கொள்வார்களானால், ஏன் மை நேம் இஸ் கான் படத்தை பார்த்து அப்படியெல்லாம் இல்லை என்று தெளிவுற மாட்டார்கள்... அடுத்த தலைமுறையினர் நம்மை விட மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள்//

      பேஸ்புக்கில் முரளிகண்ணன் எழுதிய துப்பாக்கி விமர்சனத்தை அப்துல்லா பகிர்ந்து உள்ளார். படித்து பார்க்க. முஸ்லிம் அல்லாத சிறார்கள் மனதில் இது போன்ற படங்கள் எம்மாதிரி எண்ணத்தை விதைத்து உள்ளது என்பதை அறியலாம்.

      http://www.facebook.com/profile.php?id=1492154081

      துப்பாக்கி டீம் இப்போது பல்டி அடித்து விட்டதை பார்த்தீர்களா? அவர்களுக்கு சப்போர்ட் செய்து டைமை வேஸ்ட் பண்ணிட்டீங்க :))


      நீக்கு
  19. பெயரில்லா17 நவ., 2012, 1:39:00 PM

    என்மோ நடத்தது

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  21. எனக்கு விஜயை சுத்தமாக பிடிக்காது என்பதை இங்கே முதலில் சொல்லிகொள்கிறேன் , ஆனால் அதற்காக இங்கே முஸ்லிம்களுக்கு ஆதராவாக பேச வரவில்லை , தீவிரவாதிகளை எதிர்த்து படம் எடுக்கும் இயக்குனர்கள் , பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தராதவனயும் , சொந்த நாட்டு மக்களை நாயை போல கொன்று குவித்தவனையும் பற்றி படம் எடுக்க முடியுமா , அப்படி எடுத்தால் வில்லன் கும்பலை கர்நாடகாரர்களாகவும் , சிங்களவராகவும் தைரியமாக காட்ட முடியுமா? ஏன் இதே இயக்குனர் எடுத்த முந்தய படத்தில் இலங்கை போரை பற்றி மறைமுகமாக வசனம் எல்லாம் வருமே , ஏன் அந்த படத்தில் தமிழனை துரோகத்தால் வென்ற சிங்களவனே என்று நேரடியாக வசனம் எழுதியிருக்க வேண்டியதுதானே , அவ்வளவு ஏன் இதே இயக்குனர் ரமணா என்றொரு படம் ஊழல் செய்யும் அரசாங்க அதிகாரிகளையும் அரசாங்கத்தையும் பற்றி எடுத்தார் அதில் எந்த வில்லனையாவது திமுகா காரன் என்றோ அதிமுகா காரன் என்றோ வெளிப்படையாக காண்பித்தாரா? இப்படி எல்லா விசயத்திலும் பயந்து பம்மும் இயக்குனர்கள் தீவிரவாதிகள் என்றால் மட்டும் அவன் முஸ்லிம்தான் என்று தைரியமாக படம் பிடிக்கிறார்கள் , அது தப்பும் இல்லை என்று சில பேர் அவர்களுக்கு சொம்பும் அடிக்க வந்து விடுகிறார்கள் ...இவர்களுக்கு இதை போல எதிர்ப்பை பதிவு செய்வது சரிதான்.

    முருகதாஸ் இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க போகிறாராம் , முடிந்தால் அங்கெ ஆர்எஸ்எஸ் ஆட்களை வில்லன்களாக வெளிப்படையாக காட்டி படம் எடுக்க சொல்லுங்களேன் ...

    பதிலளிநீக்கு
  22. @ Philosophy Prabhakaran
    ஹிந்துக்களையும் கிருஸ்துவர்களையும் வில்லனாக முஸ்லிம்களல்ல ..முஸ்லிம் இயக்குனர்களா ஹிந்துக்களையும் கிருஸ்துவர்களையும் வில்லனாக சித்தரிக்கிறார்கள் ..அப்படி சித்தரித்தால் பால்தாக்கரே ராமகோபாலன் போன்ற பயங்கரவாதிகள் விட்டுவிடுவார்களா ? நீங்கள் எப்படி எடுத்தால் எங்களுக்கென்ன? இன்னும் எத்தனை நாளைக்கு குண்டுவைப்பவ னையு ம. தீவிரவாதியையும் முஸ்லிமாக காட்டுவீர்கள்? இதற்க்கு ஒரு முடிவு வேண்டாமா ? இது ஆரம்பம்தான்...

    பதிலளிநீக்கு
  23. இந்த படத்தில் சொல்லியிருக்கும் "ஸ்லீப்பர் செல்ஸ்" என்ற விஷயத்தை முஸ்லிம்கள் மேல் திணித்திருப்பதன் மூலம், அந்த சமூகத்தை மற்ற சமூகங்கள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த தீவிரவாத ஸ்லீப்பர் செல்கள் பார்க்கும் போதும் பழகும் போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள், மக்களோடு மக்களாக கலந்திருப்பர் என்றெல்லாம் காட்டியிருப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அவநம்பிக்கையோடு மற்றவர்கள் பார்க்க தூண்டுகிறது.

    இந்தப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நுட்பமாக ஒரு இழையை புத்திசாலித்தனமாக நுழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு ராணுவத்தில் சேவை புரியும் சக முஸ்லிம்களையும் சந்தேககண் கொண்டு "ஸ்லீப்பர் செல்களாக" பார்க்க மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா? இப்போது வரை ராணுவத்தின் உயரிய பதவிகளுக்கு முஸ்லிம்களை நியமிக்காமலும், இந்திய உளவு அமைப்புகளில் முஸ்லிம்களை நுழைய விடாமலும் பார்த்துக்கொண்டு துவேஷம் வளர்த்து வருபவர்களுக்கு இது போன்ற படங்கள் நிச்சயமாக துணை புரியும்.

    ஏற்கனவே இந்த நாட்டில், அதிகார அரசு எந்திரங்கள் நினைத்தால் எந்த முஸ்லிமையும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து தீவிரவாத பட்டம் சுமத்த இயலும். இந்தியாவே கேள்வி கேட்காமல் நம்பும் நிலைக்கு மீடியாக்கள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. இப்படத்திற்கு பிறகு, "ஸ்லீப்பர் செல்கள்" என்று சொல்லி விட்டு, சமூகத்தில் முஸ்லிம்கள் எவ்வளவு நல்ல நிலையிலும் அந்தஸ்திலும் உயர் பொறுப்பிலும் இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறுமைபடுத்த முடியும்.

    இந்தப் படம் முஸ்லிம்களின் எதிரிகளின் வாயில் அவலை திணித்து விட்டு போய் இருக்கிறது. வெறும் வாயை மென்றவர்கள் இனிமேல் வருவார்கள் பாருங்கள் கலவரங்களை கையில் எடுத்துக்கொண்டு.

    பதிலளிநீக்கு
  24. ஒவ்வொரு முறையும் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் கதை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது நாம் போராடி என்ன பயன் இதற்காக முசுலிம் நண்பர்கள் கலைதுறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, காட்சிகளை நீக்க சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவர்களுக்கு இலவச விளம்பரமாக அமைந்து அவர்கள் காசு பார்க்கிறார்கள்.

    “உண்மை வீட்டு வாசலை விட்டு இறங்கும் முன் பொய் ஊரை சுற்றி வந்துவிடும்” என்பார்கள் இப்படித்தான் இன்று NEGATIVE PUBLICITY பெற்று கொள்கிறார்கள்.

    இவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....
    மற்றவர்கள் சொல்வது பல நேரங்களில் உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை காரணம்... விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காக நீர் கேட்பதில்லை !
    மற்றவர்களுக்கு மறுமொழி சொல்வதற்காக கேட்பதனால் !!!

    மாறாக நாம் அப்படி பட்ட படங்களின் CD யை இலவசமாக DOOR DELIVERY செய்தால் அவர்கள் நம்மை தேடி கண்டிப்பாக வருவார்கள் அப்போது நாமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு கொள்ளலாம். அப்போது நாம் சொல்வதும் அவர்களின் காதில் விழும் இதை நாம் முன்னறிவிப்புடனே செய்யலாம்.

    இப்படி நாம் அதிரடியாக இறங்கும் வரை இது தொடரும்... தவிர அவர்கள் நட்டம் அடைவதால் இது போன்று இனி கனவிலும் நினைக்க மாட்டார்கள்.

    இங்கு சினிமாவும் அரசியலும் வேறு வேறு அல்ல ! ஏனினில் சினிமாகாரார்கள் நன்றாக அரசியல் பண்ணுகிறார்கள் அரசியல்வாதிகள் நன்றாக நடிக்கிறார்கள். பரிகாரமாக விஜய் வேறொரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்ததில் எந்த அரசியலும் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

    பதிலளிநீக்கு
  25. எங்கள் இஸ்லாமியர்கள் மீதும் தூசி விழுந்தாலும் !!
    நாங்கள் எல்லாம் தூண்களாக மாறி விடுவோம் !!
    என்று மிகவும் பனிவுடன் எச்சரிக்கின்றோம்---allahu akbar

    பதிலளிநீக்கு
  26. இயக்குனர் மன்னிப்பு கேட்டு சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கியதாக சொன்னார்.. நீக்க வேண்டுமானால் முழு படத்தையும் நீக்கி குப்பை தொட்டியில் போட வேண்டும்.படத்தின் மையக் கரு இந்தியாவில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் நம்ப கூடாது.. யார் வேண்டுமானாலும் குண்டு வைக்கும் தீவிரவாதியாக இருக்கலாம் என்பதுதான். சாதாரண வாழ்கை நடத்தும் முஸ்லிம்கள் கூட தீவிரவாதியாக இருக்க கூடும் என்ற வசனம் படத்தில் மூன்று முறை வருகிறது..பெயருக்கு கூட காவி பயங்கரவாதத்தை பற்றி ஒரு காட்சி இல்லை..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.