என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

6 சுதந்திர தின சிந்தனைகள்...........


முன்பு வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்தோம். இன்று அரசியல்வாதிகளுக்கு அடிமையாய் இருக்கிறோம். நம்மை அடிமைப்படுத்திய ஆள்தான் மாறியிருக்கிறார்களே தவிர, இன்னும் நம் அடிமைத்தனம் மாறவேயில்லை.

இரவில் சுதந்திரம் வாங்கினோம். அதனால்தான் இன்னும் விடியவே இல்லையாம். பகலில் வாங்கியிருந்தால் மட்டும் என்ன விடிந்திருக்கவா போகிறது ஏழைகளுக்கு?

வெள்ளைக்காரன் கொடுத்த சுதந்திரத்தை அரசியல்வாதிகளே அனுபவிக்கிறார்கள். மக்களோ வழக்கம் போல் அடிமையாகவே இருக்கிறார்கள்.

இந்திய சுதந்திரத்துக்கு காந்தி மட்டும் காரணமில்லை. காந்தியும் ஒரு காரணம்....

ஏப்பா நான் சரியா பேசறேனா?

அய்யா அரசியல்வாதிகளே...
இந்தியாவை வல்லரசாக்குவது அப்புறம் பார்த்துக்கலாம். முதலில் நல்லரசாக்க முயற்சி செய்யுங்க.

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில், எந்த டி.வி.க்காரனாவது ஒரு சுதந்திர போராட்ட தியாகியை தேடிப்பிடித்து பேட்டி எடுக்கிறானானு பார்த்தால் ஒரு பயலும் அதை பண்ணல. மாறாக, சுதந்திரம் வாங்கி பல வருஷத்துக்கு பின்னாடி பிறந்த நடிகர்களையும், சுதந்திரம்னு சொல்ல சொன்னா ஸுத்அந்த்ரெம் என்று சொல்லும் நடிகைகளையும் பேட்டி எடுத்து போட்டு கல்லாக்கட்டிடறாங்க. எல்லா எளவையும் காசாக்கும் வித்தையை இந்த டிவி.க்காரன் கிட்டதான் தெரிஞ்சுக்கனும்.




Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. இறைவா... எங்கள் நாட்டை சுபிட்சமாக்கு... நல்ல ஆட்சியாளர்களைத் தா... எல்லா மக்களுக்கும் எல்லா வளங்களையும் கொடுத்து மன நிறைவாக வாழ அருள் செய்....

    பதிலளிநீக்கு
  2. இனிய சுதந்திர நல வாழ்த்துக்கள்,கஸாலி!////சுதந்திரம் பெற்ற பின்னர் 'காங்கிரசை' க் கலைத்து விட வேண்டும் என்று அண்ணல் விரும்பினார்.///இன்று 'அனுபவிக்கிறோம்' ஹூம்!

    பதிலளிநீக்கு
  3. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சுதந்திர நாட்டில் உங்களை மாதிரி சுதந்திரமா கருத்துக்கள் சொல்ல முடியுதே பல நாடுகளில் இதுக்கு கூட சுதந்திரம் இல்லை சகோ.

    இந்த சுதந்திரமாவது நீடித்து இருக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //Avargal Unmaigal16-Aug-2013 4:35:00 am

    சுதந்திர நாட்டில் உங்களை மாதிரி சுதந்திரமா கருத்துக்கள் சொல்ல முடியுதே பல நாடுகளில் இதுக்கு கூட சுதந்திரம் இல்லை சகோ.

    இந்த சுதந்திரமாவது நீடித்து இருக்க வாழ்த்துக்கள்//

    நச்சுன்னு சொன்னாரு நம்மாளு!.........இருக்கிறவரைக்கும் அதோட அருமை தெரியாது கஸாலி.

    பதிலளிநீக்கு
  6. சுதந்திரத்தை நான் கிண்டல் செய்யல செங்க்ஸ்.....சுதந்திரம் தவறானவர் கையில் சிக்கியுள்ளது என்றுதான் சொல்லிருக்கேன்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.