என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மார்ச் 20, 2014

7 ஜெயலலிதாவும் கலைஞரும் இப்படி பேசினால்- ஒரு காமெடி கலாட்டா (தேர்தல் ஸ்பெஷல்)




இந்தக் கட்சி வரனும்னு ஓட்டுப் போடுற பட்டனுக்கு பதிலா..
இந்தக் கட்சி வரக்கூடாதுன்னு ஓட்டுப் போடுற பட்டனை வச்சா..

எல்லாக் கட்சிகாரனும்...மத்தகட்சிக் காரனுக்கு ஓட்டுப் போடச் சொல்லி கேட்பானுகதானே??

இப்படி ஒரு ஸ்டேட்டசை என் நண்பர் ஒருவர் முகநூல் பக்கத்தில் போட்டிருந்தார். அதை படித்ததும் நம்ம கற்பனை குதிரை சிறகை விரித்து பறக்க ஆரம்பித்தது......

ஒருவேளை மேலே இருக்கும் ஸ்டேட்டஸ் உண்மையானால் நம்ம தலைவர்கள் எப்படி பேசுவார்கள்.....வாங்க கேட்போம்.....


ஜெயலலிதா: திமுக,வும் காங்கிரசும் மக்களுக்கு தீங்கு செய்த கட்சிகள்....எனவே உங்கள் பொன்னான வாக்குகளை திமுகவிற்கு செலுத்தி உங்கள் அதிருப்திகளை அதிகமதிகம் தெரிவித்து கொள்ளுங்கள். எங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல் டெபாசிட் இழக்க செய்து அவரை வெற்றி பெற செய்வீர்கள் என்று மனதார நம்புகிறேன்.... நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

கலைஞர்: அம்மையாரின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்க ஆதரிக்க வேண்டிய சின்னம் இரட்டை இலை. அருமை நண்பர் எம்.ஜி.ஆரின் சின்னத்தில் உங்க வாக்குகளை வழங்குவீர்.

மு.க.ஸ்டாலின்: கைவிடுவீர் உதய சூரியனை, ஆதரிப்பீர் இரட்டை இலையை

வைகோ: நான் போட்டியிடும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை எனக்கு செலுத்தி அதிருப்தி தெரிவித்து எங்கள் கட்சியினரை தோற்கடிக்கிறீர்கள். இம்முறையாவது எங்கள் வேட்பாளருக்கு வாக்களிக்காமல் விட்டு எங்களுக்கு ஒரு வாய்ப்புதாருங்கள்.

நாஞ்சில் சம்பத்: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.,காலத்தில் எங்கள் கட்சிக்கு 17 லட்சம் வாக்குகள் கிடைத்தது. அதை குறைத்து வெறும் ஏழு லட்சம் வாக்குகளாக ஆக்கியது புரட்சித்தலைவி அம்மா தான். இது மிகப்பெரிய சாதனை. இப்படிப்பட்ட அம்மாவை முதல்வராக்கினால் விமானம் காணாமல் போகாது. நீர் மூழ்கி கப்பல் நெருப்பு பிடிக்காது

ஈவிகேஸ்.இளங்கோவன்: ஒவ்வொரு தொகுதியிலும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் ஒரு பத்தாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் மட்டுமே எங்களுக்கு வாக்களிப்பார்கள். மற்ற தமிழர்கள் எல்லாம் எங்க கட்சிக்கு வாக்களிக்காமல் இருந்து எங்களை வெற்றி பெற செய்து ஆச்சர்யப்படுத்துவார்கள்.

ராமதாஸ்: கடந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு 4 சதவீத வாக்குகள் கிடைத்தது. அதை குறைத்து 2 சதவீத வாக்குகள் ஆக்கி எங்கள் பலத்தை நிரூபிப்போம்.

எனக்கு ஓட்டு போடாதீங்கன்னு பணம் கொடுத்த வேட்பாளர்.... வீடியோ ஆதாரம் சிக்கியது- செய்தி

எதிர்கட்சிக்காரர்கள் எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டு போட சொல்லி வீட்டுக்கு வீடு பணம், நகை கொடுக்கிறார்கள்- தேர்தல் கமிஷனிடம் கே.கி.மு. கட்சி புகார்

ரிசல்டிற்கு பின்: 


ஜெயலலிதா: உதய சூரியனுக்கு பட்டனை அழுத்தினால் அந்த ஓட்டு இரட்டை இலைக்கு போகுமாறு தவறாக ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்ததால் எங்கள் கட்சிக்கு அதிகம் வாக்கு விழுந்துள்ளது. அது அப்பட்டமான மோசடி.....

கலைஞர்: மற்றவர்கள் எல்லாம் பிரதமரை அறிவித்துவிட்டு மக்களை சந்தித்தார்கள். ஆனால், எங்கள் கூட்டணியோ பிரதமரை அறிவிக்காமல் பிரச்சாரம் செய்ததால் ஒருவேளை கனிமொழிதான் பிரதமர் வேட்பாளரோ என்று பயந்து மக்கள் எங்கள் கட்சிக்கு அதிகம் வாக்களித்து தோல்வியை கொடுத்திருக்கிறார்கள்.

விஜயகாந்த்: எங்கள் முரசு சின்னம் போல் கூடை சின்னமும் இந்த தேர்தலில் இருந்ததால் கூடை சின்னம் என்று நினைத்து முரசு சின்னத்திற்கு மக்கள் அதிகமதிகம் வாக்களித்ததால் எங்கள் கட்சி தோல்வியை சந்தித்தது.

எங்களுக்கு கம்மியான வாக்குகள்தான் கிடைத்தது. எதிர்கட்சிக்குத்தான் அதிகமான வாக்குகள் விழுந்தது.ஆனால், எங்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்துபோல மாற்றிவிட்டார்கள்.  எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த் வேண்டும்- அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் தேர்தல் கமிஷனிடம்  க.மு.க., கோரிக்கை


Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா நல்ல கற்பனை... அருமை

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹா நல்லாவே இருக்குப்பா.

    பதிலளிநீக்கு
  3. //விமானம் காணாமல் போகாது. நீர் மூழ்கி கப்பல் நெருப்பு பிடிக்காது//
    ஸெம பன்ச் பாஸூ!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... இன்னும் இருக்குது அரசியல் கலாட்டா!

    பதிலளிநீக்கு
  5. இது நல்லா இருக்கே அப்படின்னா நான் நின்னா கூட ஜெயிச்சிடுவேண் ஏன்னா நானே எனக்கு ஓட்டு போடமாட்டேண் என்னை யாருக்கும் தெறியாது அதுனால அவங்களும் யாரும் எனக்கு ஓட்டுபோடமாட்டாங்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.