![]() |
இந்த பூவை நம்ம கட்சி தொண்டர்களின் காதில் வச்சுக்க சொல்லுன்னு ஜெயலலிதா சசிகலாவிடம் சொல்றாரோ? |
தொண்டர்கள் தான் பாவம். ஜெயலலிதாவின் இந்த முடிவை உண்மையென நம்பி மொட்டையெல்லாம் அடித்து வரவேற்றிருக்கிறார்கள்.
சசிகலா மீண்டும் கட்சியில் புகுந்துவிடுவார். அப்போதும் ஒருமுறை மொட்டையடித்துக்கொள்ள தயாராக இருங்கள். அந்த மொட்டையில் சந்தனத்தையும், நெற்றியில் நாமத்தையும் ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்தே பூசுவார்கள்.
இப்படித்தான் முடித்திருந்தேன் கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஜெயா-சசி பிரிந்தபோது நான் எழுதிய
ஜரூராய் அரங்கேறிய ஜெயா-சசி நாடகமும், மொட்டை போடப்பட்ட ரத்தத்தின் ரத்தங்களும்....என்ற கட்டுரையை....
இப்போது அது நிஜமாகியுள்ளது.
ஆம்... ஜெயாவின் கண்களும் பனித்து இதயம் இனித்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சசி ஒரு உருக்கமான அறிக்கையை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் மீண்டும் இருவரும் இணையும் அறிகுறிகள் தென்பட்டது. அதைப்பற்றி ஒரு கட்டுரையையும் நான் எழுதியிருந்தேன். சசியின் அந்த அறிக்கையை தொடர்ந்து சசி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்று ஜெயா அறிவித்து சசி வயிற்றில் பாலையும் தொண்டர்கள் வயிற்றில் ஆசிட்டையும் ஒரு சேர வார்த்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளுக்கு சசியே காரணம். இ(அ)ப்போது சசிகலாவை நீக்கியதன் மூலம் புனிதராகிவிட்டார் ஜெயலலிதா என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டியவர்கள் மீண்டும் இவர்கள் இணைந்ததற்கு ஏதாவது ஒரு காரணத்தை தேடி ஓட ஆரம்பித்துவிடுவார்கள். இந்த நாடகத்தை உண்மையென நம்பி வீர வசனம் பேசிய இரண்டாம் கட்ட தலைவர்கள்தான் பாவம்.... நம் மீது என்ன நடவடிக்கை பாயப்போகிறதோ என்று வெலவெலத்துப் போயிருப்பார்கள்.
சசிகலாவுடன் மீண்டும் சமாதானம் ஆகியதன்மூலம் ஜெயலலிதா ஒரு நாள் அவசரப்பட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். இந்த சமாதான அறிவிப்பை முட்டாள்கள் தினமான (ஏப்ரல் ஒன்று) நாளையன்று வெளியிட்டிருந்தால் எல்லோரையும் முட்டாளாக்கிய பெருமை ஜெயலலிதாவை வந்து சேர்ந்திருக்கும். அதுசரி... தொண்டர்களுக்குத்தான் எல்லா நாளுமே முட்டாள்தினம்தானே?....
Tweet |
அஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குநாளைக்கு இந்த அறிவிப்ப வெளியிட்டு இருந்தாங்கன்னா படு சூப்பரா இருந்திருக்கும் :)
இதேமாதிரி இரண்டு நாட்களுக்கு முன்புதான் நானும் ஒரு பதிவிட்டுள்ளேன்....என்னத்த சொல்றது...
பதிலளிநீக்குஏன் ஏன் இந்தக்கொலை வெறி... நான் கூட பயந்தே போயிட்டேன்.. ஹி..ஹி..
பதிலளிநீக்குநட்புடன்
கவிதை காதலன்
சின்னம்மாவை எதிர்த்தவர்கள் பாடு இனி திண்டாட்டம்தான். :-)
பதிலளிநீக்குசோ ராமசாமி நிலைமைதான் ரொம்ப பாவம்.
பதிலளிநீக்கு\\\\ சைதை அஜீஸ்Mar 31, 2012 04:13 AM
பதிலளிநீக்குசோ ராமசாமி நிலைமைதான் ரொம்ப பாவம் ////
இங்கேதான் அனைவரும் தப்பா யோசிக்கிறோம் இதன் கதையாசிரியரே சோ ராமசாமி தான் என்று நினைக்கிறேன்.
செய்யது
துபாய்
பூ கமெண்ட் சூப்பர்யா!
பதிலளிநீக்குkalakitteenga sako...!
பதிலளிநீக்குஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
பதிலளிநீக்குnatpu kobam pakkathu ..
பதிலளிநீக்குhttp://www.dunkindonutscoupons.com