விகடனின் நடுநிலையை எப்பாடு பட்டாவது களங்கப்படுத்தி விடலாம் என்று ஒரு க்ரூப் பாகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளை கடந்து வெளிவரும் பத்திரிகைகளில் இரண்டு பத்திரிகைகளுக்கு பிரதான இடமுண்டு. ஒன்று விகடன். இன்னொன்று குமுதம். ஆனால் குமுதம் இப்போது ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டது கண்கூடு. இப்போது மட்டுமல்ல எப்போதும் குமுதம் ஆளுங்கட்சியின் எடுப்பார் கைப்பிள்ளைதான். அது எந்த கட்சி ஆளுங்கட்சியாக வந்தாலும் சரி. பாதுகாப்பு உணர்வாகக்கூட இருக்கலாம். அதைவிட்டுவிடலாம். அடுத்த இதழ் விகடன்.
விகடன் எப்போதும் யார் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று பார்க்காமல் தான் நினைத்ததை ஓரளவு நேர்மையுடனும் துணிச்சலுடனும் நடுநிலையுடனும் சொல்லியே வந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தி.மு.க. வின் ஆட்சி இறுதி காலத்தில் மு.க. சர்க்கார்(அரசியல் ஆக்டோபஸ்) என்று தலைப்பிட்டு போட்டுக்கிழித்தது. அதை தொடர்ந்து அண்ணா.தி.மு.க.வே அடுத்து ஆட்சிக்கு வரும் என்று கூட்டணி கணக்கெல்லாம் போட்டு சொன்னது.
![]() |
(அதன் அட்டைப்படம்) |
அப்போது அண்ணா.தி.மு.க.வினர் விகடனை தலையில் வைத்து கொண்டாடினார்கள். மாறாக தி.மு.க.வினரோ அண்ணா தி.மு.க.வின் ஊதுகுழலாகிவிட்டது விகடன் என்றார்கள். பல இடங்களில் விஜயகாந்த் விகடனை மேற்கோள் காட்டி பேசியதாக நினைவு. இப்போது அப்படியே உல்டாவாக மாறியுள்ளது.
விகடன் கோபாலபுரத்தின் செல்லப்பிள்ளையாகிவிட்டது என்று கூவுகிறார்கள். இதே விகடன் தன் குழும இதழான ஜூனியர் விகடனில் கடந்த இரு இதழுக்கு முன் மழை வெள்ளத்தை பார்வையிட்ட ஸ்டாலினை விமர்சித்து எழுதியிருந்தது . அதைக்கூட சில அண்ணா.தி.மு.க. நண்பர்கள் மேற்கோள் காட்டி பதிவு செய்திருக்கிறார்கள். பலமுறை கழுகார் கேள்வி பதிலில் தி.மு.க.வை குட்டியிருக்கிறது . அப்போதெல்லாம் விகடனின் நேர்மையை பற்றி ஏதும் பேசாமல் சிலாகித்தவர்கள் இப்போது தன் கட்சியை பற்றி, தங்கள் தலைவியை பற்றி மந்திரி தந்திரி என்று எழுதியதும் குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறார்கள். ஆனால் முந்தைய தி.மு.க ஆட்சியிலும் இதேபோல் அப்போதைய மந்திரிகளை பற்றி மந்திரி தந்திரி தொடரை எழுதித்தான் வந்திருக்கிறது. அப்போது அதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அண்ணா.தி.மு.க.வினர் இப்போது அதன் நேர்மையை சந்தேகிக்கிறார்கள். அதாவது திமுக.விற்கு வந்தால் தக்காளி சட்னி தங்களுக்கு வந்தால் ரத்தம் என்பதுபோல.
விகடன் அதிகமாக தி.மு.க.வை டச் செய்வதில்லை. சமீபகாலமாக அண்ணா.தி.மு.க.வை டார்கெட் வைத்து எழுதுகிறது என்றும் சொல்கிறார்கள். நிஜம்தான். இப்போது எது ஆளுங்கட்சியோ, எந்த கட்சி கையில் தமிழகம் இருக்கிறதோ அந்த கட்சியைத்தான் விமர்சிக்க முடியும். அதுதான் முறையும் கூட. அதன் அடிப்படையில்தான் விமர்சிக்கிறது. எதிர்கட்சியாகக்கூட இல்லாத ஒரு கட்சியை தொடர்ந்து விமர்சிக்க முடியாதல்லவா? ஆனாலும் விகடன் ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக ஒரு தொடரே எழுதியது ஜூ.வி.யில். அதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மூலம் வழக்கையும் சந்தித்தது. என் பெயரையோ படத்தையோ இனி ஜூ.வி. பயன்படுத்தக்கூடாது என்று ஆ.ராசா கோர்ட் மூலம் தடை பெற்றது நினைவிருக்கலாம். இந்த இதழில்கூட விஜயகாந்தை அட்டைப்படத்தில் போட்டு கலைஞரும் ஜெயலலிதாவும் வரக்கூடாது என்று அவர் சொன்னதை தலைப்பாக்கியிருக்கிறது. கோபாலபுரத்தின் செல்லைப்பிள்ளையாக விகடன் இருந்திருந்தாலோ, தி.மு.க., விகடனை கையகப்படுத்தியிருந்தாலோ இம்மாதிரி எழுதும் தைரியம் வந்திருக்குமா விகடனுக்கு?
நானறிந்த வகையில் விகடனோ அதன் குழும இதழ்களோ எப்போதும் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையோ எதிர்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையோ எடுத்ததில்லை. மக்களின் அன்றைய மனநிலையை பிரதிபலிக்கும் நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறது. எடுத்து வருகிறது. அதை ஒரு சார்பு நிலைப்பாடு என்றோ, நடுநிலை தவறிய நிலைப்பாடு என்றோ சொல்லி ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிடாதீர்.
Tweet |
’ஆக்ரமிப்பு’...டக்குன்னு சொல்ல வரலை...?!!! ஐ லைக் திஸ் டைப் ஆஃப் விஜயகாந்த்.நல்ல பதிவு கஸாலி.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிஜயகாந்த் கலக்கல் பேட்டிதான்...
பதிலளிநீக்குஆனந்த விகடன் நடுநிலையான பத்திரிக்கைதான்...