என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜூன் 19, 2011

40 மைனஸ் வோட்டு போட்டு என்னை பிரபல படுத்திய நண்பர்களுக்கு நன்றி...


நேற்று முன்தினம், ஜெயலலிதா முதல்வராகி விட்டார்.....இனி இப்படியெல்லாம் நடக்கலாம்?........., தேர்தலில் தோல்வியடைந்த கலைஞர் இனி என்ன செய்யலாம்?-சில ஆலோசனைகள். என்று இரு பதிவுகளை ஒரு சேர எழுதி அதில் ஜெயலலிதா முதல்வராகி விட்டார்.....இனி இப்படியெல்லாம் நடக்கலாம்?.........என்ற பதிவை மட்டும் வெளிட்டுவிட்டு, இன்னொரு பதிவை draft-இல் போட்டுவிட்டு என் உறவினர் வீட்டு விஷேசத்திற்காக வெளியூர் சென்று விட்டேன்.(அதனால்தான் வழக்கமாக நான் படித்து பின்னூட்டமிட்டு, வாக்களிக்கும் நண்பர்களின் தளத்திற்கு செல்லவில்லை} 
draft-ல் இருக்கும் பதிவை நேற்று வெளியிடலாம் என்று நினைத்து என் நண்பன் பதிவர் சிராஜிடம் என் கடவுச்சொல் கொடுத்து வெளியிட சொல்லியிருந்தேன். அவனும் வெளியிட்டுவிட்டான். நேற்று மாலை ஊர்திரும்பினேன். வந்து பார்த்தபோது தேர்தலில் தோல்வியடைந்த கலைஞர் இனி என்ன செய்யலாம்?-சில ஆலோசனைகள்-என்ற பதிவிற்கு 8/14 என்ற கணக்கில் தமிழ்மணத்தில் 6 மைனஸ் ஓட்டுக்களும், முந்தாநாள் பதிவான ஜெயலலிதா முதல்வராகி விட்டார்.....இனி இப்படியெல்லாம் நடக்கலாம்?........என்ற  பதிவிற்கு 22/29 என்ற கணக்கில் 7 மைனஸ் வோட்டுக்களும் கிடைத்திருந்தது.
**************************************
*******************************************

*******************************************
ஆஹா....நாமும் பிரபல பதிவராகிட்டோம் என்று மனம் துள்ளி குதித்தது. நம்கருத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்க கூடாது அப்படி நினைப்பது முட்டாள்தனம். நம் எழுத்தின் மூலம் எல்லோரையும் திருப்தி படுத்தவும் முடியாது.

அதே நேரம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதியவனில்லை. நடுநிலையுடன் தான் எழுதிவருகிறேன். 
பிளஸ் வோட்டு போடும் போது ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, மைனஸ் வோட்டு போடும் போதும் நமக்கு இருக்க  வேண்டும். ஒரு கருத்தை  பொதுவில் வைக்கும் போது பிளஸ் வோட்டு மைனஸ் வோட்டு என்று இரண்டுமே சாத்தியம் தான் என்று நான் உணராதவனும் அல்ல.

அதேநேரம் மைனஸ் வோட்டு போடும்போது ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். 
நானும் ஓரிரு மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கிறேன். ஆனால், அப்படி ஓட்டுப்போட்டதோடு மட்டும் வந்துவிடாமல் ஏன் மைனஸ் வோட்டுப்போட்டேன் என்ற என் கருத்தையும் பதிவு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அது என் நெருங்கிய பதிவுலக நண்பர்களின் பதிவாக இருந்தாலும் சரி....அப்போதுதான் அவர்கள் திருத்தி கொள்ள முடியும். எனக்கு நீங்கள் போட்டதுபோல  மானாவாரியாக அல்ல.....

எனக்கு மைனஸ் வோட்டு போடுங்கள் நண்பர்களே....அதை நான் தவறென்று சொல்லவில்லை.அதோடு ஏன் மைனஸ் வோட்டு போட்டோம் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு போ(டு)ங்க....அப்போதுதான் என் எழுத்தில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ளலாம். இன்னொரு  விஷயம் மைனஸ் வோட்டு போடும் வேகத்தை (பதிவு நன்றாக இருந்தால் பிளஸ் வோட்டு) போடுவதிலும்  காட்டுங்கள் நண்பர்களே....

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 


Post Comment

இதையும் படிக்கலாமே:


40 கருத்துகள்:

  1. அருமை கஸாலி..மைனஸ் ஓட்டுப் போடுவது படிப்போரின் உரிமை தான். அதே நேரத்தில் ஏன் என்று சொன்னால் நம்மைத் திருத்திக் கொள்ளவும் உதவியாக இருக்கும். வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் போடுபவர்கள் மட்டும் கருத்து சொல்லாமல் போகட்டும், மற்றவர்கள் சொல்லலாமே!

    பதிலளிநீக்கு
  2. இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க? மைனஸ் ஓட்டு போட்டா ஹிட் என அர்த்தம். இப்போ நீரூபன், ஜீவன் எல்லாம் செம ஹிட் ஃபார்ம்ல இருக்காங்க.. அடுத்து நீங்க.. டேக் இட் ஈஸி பாலிஸி

    பதிலளிநீக்கு
  3. மைனஸ் ஓட்டு போடுறவங்க தங்கள் கருத்தையும் சொல்லிட்டு போனா நல்லது தான்.

    பதிலளிநீக்கு
  4. இதுக்கு ஏன் டென்ஷன் ஆகறீங்க? மைனஸ் ஓட்டு போட்டா ஹிட் என அர்த்தம். இப்போ நீரூபன், ஜீவன் எல்லாம் செம ஹிட் ஃபார்ம்ல இருக்காங்க.. அடுத்து நீங்க.. டேக் இட் ஈஸி பாலிஸி///
    அண்ணே...நான் டென்ஷன்லாம் ஆகவில்லை. மைனஸ் ஒட்டு போடும்போது எதற்காக போட்டோம் என்று சொல்லிவிட்டு போட்டால் நம் தவறு நமக்கு தெரியும்

    பதிலளிநீக்கு
  5. பல நூறு மைனஸ் ஓட்டுக்கள் பெற்று நீங்கள் மென்மேலும் பிரபலமடைய வாழ்த்துக்கள். ஹி...ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  6. உங்களுக்கும் கலைஞர் மாதிரியே நல்ல மனசுங்க. மாத்தி ஓட்டு போட்ட மக்களை முட்டாள்கள் என்று திட்டாம ஏன் அப்படி போட்டாங்கன்னு சிந்திக்கிறீங்க பாருங்க.... அங்க நீக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  7. ஒன்னும் பண்ண முடியாது பாஸ்...
    அரசியல் பதிவுகள் போடும் போது எதிர் கட்சியை சார்ந்தவர்கள் மனச ஒட்டு போட்டு செல்கின்றனர்...
    என்ன பண்றது...
    நீங்க ஜோசிக்கமா எழுதுங்க...
    மைனஸ் ஒட்டு வாங்கி ஹிட் அடிக்கிறவங்க பத்தி வாரா வாரம் நான் ஒரு
    பதிவு எழுதப்போறன்...

    பதிலளிநீக்கு
  8. சபாஷ் மைனஸ் ஒட்டு இல்லாமல் பிரபலம் ஆக முடியாது .சிலபேர் மைனஸ் ஓட்டுக்காகவே பதிவு எழுதுகிறார்கள் .உங்கள் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...........

    பதிலளிநீக்கு
  9. அன்பின் கஸாலி - இதெல்லாம் சகஜம் - மைனஸ் ஓட்டு போடறாங்கன்னா ஏதோ பிடிக்கலன்னு பொருள் - என்ன பிடிக்கல ஏன் மைனஸ் குத்து - இதெல்லாம் விவாதிக்க மாட்டாங்க - வீண் விவாதம் தான் வளரும் - மனக்கசப்பு கூடும் - வுட்டுத் தள்ள வேண்டியதுதான் - நமக்கே தெரியும் ஏன்னு - இல்லையா - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. அடவிடுங்க பாஸ்.. இவுங்க எப்பவுமே.. இப்படித்தான் ஏதாவது வித்தியாசமா பண்ணிக்கிட்டு இருப்பாங்க.. ஒரு மைனஸ் ஓட்டு விழுந்து இருந்தாலும் அடுத்து வர்றவங்க.. என்ன ஏதுன்னே படிச்சுபார்க்காம குத்திட்டுப் போறவங்களும் இருந்துகிட்டுத்தான் இருக்காங்க....!!! கவுண்டமணி பாணியில சொல்லனும்னா பதிவுலகில இதெல்லாம் சகஜம்ப்பா...!!

    பதிலளிநீக்கு
  11. மாப்பு, நானு, நீங்களு, நம்ம ஓட்ட வடை நாராயணனு, மைந்தன் சிவா
    இவங்க எல்லாம் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிற ஜீவனுங்க என்று எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சாம்.
    அவ்........

    பதிலளிநீக்கு
  12. கவலையை விடுங்க சகோ. உங்களின் எழுத்துப் பயணத்தைத் தொடருங்க தோழா.

    பதிலளிநீக்கு
  13. கவலையை விடுங்க சகோ. உங்களின் எழுத்துப் பயணத்தைத் தொடருங்க தோழா.

    பதிலளிநீக்கு
  14. பிளஸ் ஒட்டு மைனஸ் ஒட்டு பற்றியும் பிறர் பற்றியும் கவலைப்படாதீர்கள் நண்பர்..
    நம் கருத்துக்களை சொல்லிக்கொண்டே போவோம்..
    தமிழ்மணம் பற்றியும் நான் பொருட்படுத்துவது இல்லை..
    இப்போதெல்லாம் என் பதிவுகளை தமிழ்மணம் தளத்தில் பதிவதில்லை..

    பதிலளிநீக்கு
  15. ஏதோ, "ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணால போட்டாளாம் தாப்பா"கணக்கா இருக்குது!திருத்துறதுக்கு இதுல என்ன இருக்குது?திருந்துறதுக்கு என்ன இருக்குது?கலைஞர் தோத்துப் போயிட்டாரு!ஜெயலலிதா கெலிச்சுட்டாங்க.பொழைப்பப் பாக்கப் போவமா,அவரு இன்னா செய்யலாம்,இவுக என்ன புடுங்கலாம்னுட்டு!அது அவங்க,அவங்க பாத்துப்பாங்க.ஏதோ ரோசன சொல்லி அவரு,அவுக கேட்டு இன்னி வரைக்கும் ஆட்சி நடத்தினாப்புல?அதாய்யா மைனசு போட்டிருக்காங்க!பிரியுதா?

    பதிலளிநீக்கு
  16. ரைட்டு.... நாமெல்லாம் பிளஸ் தான் பாஸ் ... பிடிக்கலைன்னா ,எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  17. ஏதோ அவர்களாலட முடிஞ்சது..
    கவலைப்படாதிங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
  18. தங்களைப்பற்றி ஒரு அதிர்ச்சித்தகவல்
    அறிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க....

    இவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..?

    http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_19.html

    பதிலளிநீக்கு
  19. //ஏன் மைனஸ் வோட்டு போட்டோம் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு போ(டு)ங்க....அப்போதுதான் என் எழுத்தில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ளலாம்//
    POINT! :-)

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

    நாமே ராஜா, நமக்கே விருது-7

    http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

    பதிலளிநீக்கு
  21. அடடா இவ்ளோநாளா இது தெரியாம + வோட்டு போட்டனே ....... சரி விடுங்க அதுக்காக இன்னைக்கு - வோட்...... ஹி.ஹி.ஹி................. :-)))

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா19 மே, 2011, 12:24:00 PM

    உங்கள் பக்குவம் புல்லரிக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா19 மே, 2011, 12:24:00 PM

    இதை வெச்சே ஒரு பதிவு தேத்திட்டீங்களே தல

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா19 மே, 2011, 12:36:00 PM

    "முன்னாடி எல்லாம் ஒரு காரணத்தை சொல்லிட்டு அடிப்பாங்க. அது மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இப்ப காரணமே சொல்லாமே அடிக்கறாங்களே. சொல்லுங்கய்யா நான் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்"

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா19 மே, 2011, 1:21:00 PM

    ///அதோடு ஏன் மைனஸ் வோட்டு போட்டோம் என்று உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்துவிட்டு போ(டு)ங்க../// கரெக்டு பாஸ்

    பதிலளிநீக்கு
  26. ஸலாம் உண்டாகட்டும் சகோ. கஸாலி,

    ///"மைனஸ் வோட்டு போட்டு என்னை பிரபல படுத்திய நண்பர்களுக்கு நன்றி..."///

    நீங்கதான் ஏற்கனவே பிரபலம் ஆனவர் ஆயிற்றே சகோ.கஸாலி...!?!?!?

    ///மைனஸ் ஒட்டு போடும்போது எதற்காக போட்டோம் என்று சொல்லிவிட்டு போட்டால் நம் தவறு நமக்கு தெரியும்///---ரொம்பவும் சரியான பாயின்ட்...! அனைவரும் பின்பற்ற வேண்டிய பாய்ன்ட்..!

    சில நாட்களுக்கு முன், திமுக வில் இருவரை இணைத்து ஆபாசமாய் எழுதப்பட்ட பதிவிற்கு... கண்டனம் தெரிவித்து விட்டு, சொல்லிவிட்டு, எச்சரித்துவிட்டு மைனஸ் ஓட்டு குத்தினேன். பதிவை தூக்க சொன்னேன். அந்த பதிவர் தூக்கிவிட்டார். நன்றி. (அங்கே என்னைப்போலவே மேலும் சிலர் சொல்லிவிட்டு மைனஸ் போட்டனர்)

    இதுபோல ஆக்கப்பூர்வமாக, எதிர்க்கப்பட வேண்டிய பதிவுக்கு மைனஸ் ஓட்டு பயன்பட வேண்டும் என்பதே என் கருத்து..!

    வெறும் காழ்ப்புணர்ச்சிக்கு கூடாது..!

    உங்கள் இடுகைக்கு நான் என்றுமே மைனஸ் குத்தியது இல்லை சகோ.

    இப்போதும் பிளஸ்தான்..!

    :)

    பதிலளிநீக்கு
  27. நண்பா கசாலி, குமுதமும் நீயும் ஒண்ணு., எப்படின்னு சொல்லு பார்போம் ??

    பதிலளிநீக்கு
  28. /* ஆர்.கே.சதீஷ்குமார் said...
    இதை வெச்சே ஒரு பதிவு தேத்திட்டீங்களே தல */

    பக்கத்தில இருக்கவன் தும்மினாலே அத வச்சு ஒரு பதிவு போற்றுவான் கசாலி.... 6 மைனஸ் வோட்டு போட்டா விடுவானா இந்த வாய்ப்ப??? என்னோட கவலை எல்லாம் இத வச்சி தொடர் பதிவு போடாம இருந்தா சரிதான்...

    பதிலளிநீக்கு
  29. மைனஸ் ஓட்டு போடும் போது அதற்கான காரணத்தை சொன்னால் வீண் விவாதங்கள் ஏற்படும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.. விடுங்க.. சொல்லுறதும் சொல்லாததும் அவுங்க விருப்பம்..

    பதிலளிநீக்கு
  30. நான் மைனஸ் மார்க் போடல..நண்பா...http://zenguna.blogspot.com/

    பதிலளிநீக்கு
  31. நான் மைனஸ் மார்க் போடல..நண்பா...http://zenguna.blogspot.com/

    பதிலளிநீக்கு
  32. //நானும் ஓரிரு மைனஸ் வோட்டுகள் போட்டிருக்கிறேன். //

    நான் யாருக்குமே மைனஸ் ஓட்டுப் போடறதில்லீங்கண்ணா!

    பதிலளிநீக்கு
  33. நீண்ட நாட்களாகத் தங்கள் எழுத்துக்களைப் படித்து வருகிறேன். மனதில் என்ன படுகிறதோ அதனை மிகவும் நியாயமாகவும் நேர்மையான தொனியிலும் எழுதிவருகிறீர்கள்.பாராட்டுக்கள். மைனஸ் ஓட்டு, பிளஸ் ஓட்டு இவற்றைப்பற்றி எதற்காக கவலைப்படுகிறீர்கள்? தங்கள் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  34. மைனஸ் ஓட்டு போடுறவங்க தங்கள் கருத்தையும் சொல்லிட்டு போனா நல்லது தான்.அட விடுங்க பாஸ்...

    பதிலளிநீக்கு
  35. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகல்லவா?

    பதிலளிநீக்கு
  36. பெயரில்லா25 மே, 2011, 7:40:00 AM

    ஹி ஹி. இதுக்கும் 8 மைனஸ் வோட்டு. என் பக்கம் வருபவர்களே ரொம்ப கம்மி. இதில 8 மைனஸ் ஓட்டு. கருணாநிதியின் சதி என்று ட்ராமாத்தனமா சொல்லிட்டு போயிட்டே இருக்கேன்.

    http://reap-and-quip.blogspot.com/2011/05/blog-post.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.