என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஆகஸ்ட் 15, 2012

11 கலைஞர் பெற்றுத்தந்த சுதந்திர உரிமை.......




சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று காலை சென்னையிலுள்ள ஜார்ஜ்கோட்டையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியேற்றினார்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதற்கும் சுதந்திரதினத்தில் தேசிய கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் யார் தெரியுமா?
முன்னாள் முதல்வர் கலைஞர்தான்.

தலைநகர் டெல்லியில் சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியேற்றுவார்கள்.ஆனால், மாநில தலைநகரங்களில் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் அம்மாநில ஆளுநர்களே  கொடியேற்றுவது மரபாக இருந்துவந்தது. இதை மாற்றி சுதந்திர தினத்தன்று டெல்லியில் பிரதமரே கொடியேற்றுவது போல..அந்தந்த மாநில தலைநகர்களில் முதலமைச்சர்களே கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டுமென்று அப்போதைய(1974) முதல்வர் கலைஞர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

தொடர்ந்து வலியுறுத்தியதால் அக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்று அனைத்து மாநிலங்களிலும் இனி சுதந்திர தினத்தன்று முதல்வரே கொடியேற்றலாம் என்று உத்தரவிடது. இதை தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கலைஞர் தேசியகொடி ஏற்றினார். மற்ற மாநிலங்களிலும் அந்தந்த முதல்வர்களே கொடியேற்றினர்

அன்றிலிலிருந்து மாநிலத் தலைநகர்களில் சுதந்திர தினத்தில் முதல்வரும், குடியரசு தினத்தில் கவர்னரும் கொடியேற்றுவது மரபாக இருக்கிறது.
ஜெயலலிதாவிற்கு இந்த விஷயம் தெரியாது போல.... தெரிந்திருந்தால் கொடியேற்ற கோட்டைக்கு வராமல் கொடநாட்டிலேயே இருந்திருப்பார்.
(ஏப்பா..... நான் சரியாத்தானே எழுதிருக்கேன். இதில் ஏதும் அவதூறு இல்லியே?....சும்மாதான் கேட்டேன் ஹி...ஹி...)


==========================


அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் 



Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. ரொம்பவே சரியாக சொல்லி இருக்கீங்க .சுதந்திர தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அஹா! அம்மாவுக்கு நியாபகப்படுத்திட்டீங்க, இனி ஜார்ஜ்கோட்டையில கொடியே பறக்கக்கூடாதுன்னு சொன்னாலும் சொல்வாங்களே?. :)))

    பதிலளிநீக்கு
  3. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தகவலுக்கு மிக்க நன்றி...(TM 5)

    உயிரை துச்சமாக மதித்து பணிபுரியும் பல பேருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்...

    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்னே

    பதிலளிநீக்கு
  6. ///ஜெயலலிதாவிற்கு இந்த விஷயம் தெரியாது போல.... தெரிந்திருந்தால் கொடியேற்ற கோட்டைக்கு வராமல் கொடநாட்டிலேயே இருந்திருப்பார்.///

    hahahaha

    பதிலளிநீக்கு
  7. தெரியாத விஷயம் பகிர்ந்தமைக்கு நன்றி....
    சுதந்திர தின வாழ்த்துக்கள்...தோழரே

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல் பகிர்வு!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  9. சரியாக தான் சொல்லி இருக்கீங்க ஆனா அவங்களுக்கு காதுல எப்படி கேட்கும் என்று தெரியலையே ..
    அந்த படம் இன்றைய இந்தியாவின் நிலையை சொல்வதாய் நான் எடுத்து கொண்டேன் ,,நன்றிங்க சார்

    பதிலளிநீக்கு
  10. உங்களை டெசோவுக்கு பதில் போடச்சொன்னா தூங்கி எழுந்து சுதந்திர தின கொடி ஏற்றுகிறீர்களே!

    கலைஞர் மீதான கடும் விமர்சனங்களோடு நல்லவற்றையும் வரவேற்போம்.சுதந்திர தினத்தோடு கலைஞருக்கும் வாழ்த்துக்கள்.

    இரவிலே வாங்கினோம்...
    இன்னும் விடியவேயில்லை

    என்பதை குடிசைக்கொடி நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.