என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

22 விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் திடீர் ராஜினாமா- பரபரப்பு தகவல்கள்....



என்னடா...எந்த ஊடகங்களிலும் சொல்லாத/வராத ஒரு செய்தியை இவன் புதுசா வாசிக்கிறான் என்று நினைக்கிறீர்களா? நிஜம்தாங்க....நான் சொல்லும் செய்தி.
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்த மானஸ்தன் இப்போதைய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் இல்லேங்க...இவர் ராஜினாமா செஞ்சுட்டா மம்தாவுக்கு யாரு பதில் சொல்றது? நான் சொல்றது 1956-ஆம் ஆண்டு நடந்த சம்பவம். ஆம் அப்போதைய நேரு அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரிதான் அவர்.



அரியலூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம் கல்லகம். இந்த ஊருக்கு அருகில் மருதையாறு என்ற காட்டாறு ஓடுகிறது. அந்த காட்டாற்றின் மேல் ஒரு ரயில்வே பாலம் உள்ளது. 1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடுமையான மழை பெய்தது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பெய்த அடைமழையின் காரணமாக அந்த காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்படி ஓடிய வெள்ளம் சும்மா ஓடவில்லை. அந்த ரயில்வே பாலத்தின் அடிப்பகுதியையும் அரித்துக்கொண்டு ஓடியது. இதனால் அந்தப்பாலம் ஆட்டம் கண்டது. ஆனால், இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை அந்த பாலத்தின் மேல் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வந்தடையும்வரை.......

அதிகாலை 4:30 மணிக்கு அந்த பாலத்தின் மேல் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வந்தது. வந்த ரயில் அந்தப்பாலத்தை கடக்கவேயில்லை. ஆம்......அந்த பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கில் பாய்ந்தது ரயில். 7 பெட்டிகள் முழுதாய் மூழ்கியது. சுமார் 250 பேர் அந்த விபத்தில் இறந்தனர். உடனே அப்போது மத்திய ரயில்வேத்துறை இணையமச்சராக இருந்தவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஓ.வி.அளகேசன். மீட்புப்பணிகள் முடக்கிவிடப்பட்டன.

இந்த  விபத்தை கேள்விப்பட்டதும் உடனே ராஜினாமா செய்ய முன்வந்தார் ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் அப்போதைய பிரதமர் நேரு. அதற்கும் காரணமிருந்தது.

இந்த விபத்து நடந்தற்கு சில மாதங்களுக்கு முன்புதான் இதைப்போல ஒரு விபத்து ஹைதராபாத்தில் நிகழ்ந்து 126 பேர் மரணமைந்தார்கள். அதற்கு காரணமும் ரயில்வே பாலத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட அரிப்பே என்று தெரிந்ததும், இனி வரும் மழைக்காலங்களில் வெள்ளத்தினால் ரயில்வே பாலங்களுக்கு சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சாஸ்திரி. ஆனால் அவர் அப்படி பேசிய சில மாதங்களுக்குள்ளாகவே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டதால் இதற்கு பொறுப்பேற்று சாஸ்திரி பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரினர். உடனே, சாஸ்திரியும் ராஜினாமா செய்தார்.

அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட நேரு “நான் சாஸ்திரியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதால், இந்த விபத்துக்கு அவர்தான் காரணம் என்றாகிவிடாது. ஆனால், இந்த மாதிரி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்வதுதான் முறை என்பதை எடுத்துக்காட்டவே அவரின் ராஜினாமவை ஏற்றுக்கொண்டேன்” என்று பேசிய நேரு தொடர்ந்து சொன்ன வார்த்தைகள்தான் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று.... அதையும் படித்துவிடுங்கள்......

என்ன ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம்கூட கவலையே இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் பதவியில் இருக்கும் மற்றவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும் சாஸ்திரியின் ராஜினாமாவை நான் ஏற்றுக்கொண்டேன் என்றார் முத்தாய்ப்பாய்....

ஹூம்ம்ம்...என்ன செய்வது... அப்போது இருந்தவர்கள் மானஸ்தர்கள். ஆனால்,இப்போது இருப்பவர்களோ? என்ன திட்டினாலும், காரி துப்பினாலும் கூட துடைத்துவிட்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைவர்களுக்கு நேருவின் வார்த்தை கடுமையான சூடுதான். 







Post Comment

இதையும் படிக்கலாமே:


22 கருத்துகள்:

  1. //அப்போது இருந்தவர்கள் மானஸ்தர்கள். ஆனால்,இப்போது இருப்பவர்களோ? என்ன திட்டினாலும், காரி துப்பினாலும் கூட துடைத்துவிட்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைவர்களுக்கு நேருவின் வார்த்தை கடுமையான சூடுதான்.


    //


    மானம் , ரோஷம் என்ன விலைன்னு கேட்பவர்கல்தான் இப்ப பதவியில் இருக்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
  2. விபத்தை கூட ஏற்றுகொள்ள வேண்டாம் .. செய்த தவறை கூட ஒத்து கொள்ள துணியாத மிருகங்கள் தானே பதவியில் இருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியில்லை பதவிக்கு வந்தால் மிருகங்கள் ஆகிவிடுகிறார்கள்.

      நீக்கு
  3. தவறு செய்தால் யார் தான் ஒத்துக்கொள்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  4. என்ன ஏற்பட்டாலும் சரி, கொஞ்சம்கூட கவலையே இல்லாமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் பதவியில் இருக்கும் மற்றவர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலும் சாஸ்திரியின் ராஜினாமாவை நான் ஏற்றுக்கொண்டேன் என்றார் முத்தாய்ப்பாய்....

    அப்படி இருந்த தலைவர்களை இப்போது எங்கு சென்று தேடுவது.

    பதிலளிநீக்கு
  5. ஒரு கணம் தலைப்பை பார்த்தவுடன் அதிர்ந்துவிட்டேன்...இந்த காலத்தில் இப்படி ஒரு அமைச்சரா என...அதானே இப்பிடிலாம் இருந்தா பின்னே இந்தியா எப்படி வல்லரசாவது?

    பதிலளிநீக்கு
  6. இப்போ பதவிக்கு வருவதே சம்பாதிக்கத்தானே!
    அப்புறம் அவர்களிடம் இப்படியெல்லாம் எதிர்பார்ப்பதே நம் தவறு!
    ஹ்ஹீம்...
    அது ஒரு அழகிய கனாக்காலம்
    இப்போது அவை வெறும் கனவாகவே ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. நேர்மையெல்லாம் இந்த காலத்தில் எந்த அரசியல்வியாதிகளிடமும் பார்க்க முடியுறதில்ல.... அது பேராசையாகவும் கனவாகவும் போச்சு! :(

    பதிலளிநீக்கு
  8. ம்! அது அந்த காலம்! இது இந்த காலம்! துப்புகெட்டவர்களும் தாளம் போடுபவர்களும்தானே இன்று துட்டு பார்க்க அமைச்சர்களாக ஆகிறார்கள்!

    இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
    http: thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  9. அன்றும் இன்றும்... ஹுஹூம்..!

    பதிலளிநீக்கு
  10. இன்றைய மத்திய அரசில் முக்கிய பங்காளியான தி.மு.க அரியலூர் விபத்து நடந்தபோது அமைச்சர் அழகேசனை பார்த்து,"அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா ,மக்கள் மாண்டது போதாதா என்று வக்கனை பேசினார்கள்.

    பதிலளிநீக்கு
  11. நண்பரே இன்றைய நாளிதழ்களில் வெளிவந்த செய்தியை பார்த்திர்களா ரயில் விபத்தை பார்வையிட வந்த அமைச்சருக்கு 1.5கோடி மதிப்புள்ள சொகுசு அறை அவர் வந்த ரயிலில்.news for www.tamilmurasu.sg

    பதிலளிநீக்கு
  12. இப்பவும் அரு அழு இருக்கேனே

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    பதிலளிநீக்கு
  13. எனக்கு தெரியும் இப்போதெல்லாம் இப்படி நடக்க சான்ஸே இல்லை. அப்படியே நடந்தாலும் ஊடகங்களில் கூவி கூவி விற்றிருக்க மாட்டார்கள்?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.