என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 14, 2013

9 தை பிறந்தால் வழி பிறக்குமா?




அடிக்கடி கிராமத்து பக்கம் சொல்லப்படும் சொலவடைகளில் ஒன்று தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும். தைமாதம் பிறந்துவிட்டால் நம் கஸ்டமெல்லாம் பறந்துவிடும் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் சிலர் விளக்கம் சொல்லி வருகிறார்கள். அது உண்மையா என்று முதலில் பார்ப்போம்.....

விவசாயி ஒருவன் விவசாயம் செய்வதற்காக விதை நெல், உரம் என்று வாங்குவதில் நிறைய சிலவு செய்து  கஸ்டப்பட்டுக் கொண்டிருப்பான். தை மாதம் வந்ததும் கதிரை அறுவடை செய்து நெல்லை விற்று , கையில் கொஞ்சம் பணத்துடன் சந்தோசமாக இருப்பான். எனவே, மற்ற மாதத்தில் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் விவசாயி, தைமாதம் வந்ததும் சந்தோஷமாக இருப்பான். அதுதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதன் அர்த்தம் என்று சொல்லி வருகிறார்கள். அதுவும் ஓரளவு உண்மைதான்.

ஆனால், உண்மையான அர்த்தமோ......



வழக்கமாக, மார்கழி மாதம் அதிகாலையில் பனி அதிகமாக இருந்து, எதிரில் இருக்கும் ஆட்களைக்கூட தெரியாமல் செய்துவிடும். வழி(பாதை)யும் தெரியாது. ஆனால், அதற்கடுத்த தை மாதத்தில், பனியின் கடுமை குறைந்து வழி நம் கண்களுக்கு புலப்படும். அதாவது வழி(பாதை) தெரியும் அல்லது பிறக்கும். இதுதான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதாகும். இதுதான் அந்தப்பழமொழியின் உண்மையான அர்த்தமும் கூட......


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. ரூம் போட்டு யோசிச்சீங்களோ!

    பதிலளிநீக்கு
  2. யோவ், இஷ்டத்துக்கு அள்ளிவிடக்கூடாது!

    பதிலளிநீக்கு
  3. நீ சொல்லுப்பா நாங்க கேட்டுக்குறோம்

    பதிலளிநீக்கு
  4. அட அப்படியா இது புது விளக்கமாக இருக்கே. இதுவும் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. vivasaayi visayam kelvi pattullen....

    irandaam paatti vanthathu-'
    enakku puthumai...

    பதிலளிநீக்கு
  6. உங்கள மாதிரி வேற யாராலயும் இப்படி யோசிக்க முடியாது.....உங்களுக்கு நிகர் நீங்களே தான்!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்,கசாலி சார்!///கரண்டு கட்டை மனசுல வச்சுக்கிட்டு 'புதுப்புது அர்த்தங்கள்' சொல்லுறீங்களோ?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.