என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், செப்டம்பர் 02, 2013

19 கஸாலி கஃபே 02-09-2013



தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு நேற்று வடபழனியில் இனிதே நடந்து முடிந்தது. காலை, புலவர் ராமானுஜம் அய்யாவின் தலைமையில், சென்னைப்பித்தன் அய்யாவின் முன்னிலையில், உண்மைத்தமிழன் அவர்களின் வரவேற்புரையோடு துவங்கிய விழா, பதிவர்களின் சுய அறிமுகத்தை தொடர்ந்து எழுத்தாளர் பாமரனின் சிறப்புரையோடு முடிந்தது. மதிய உணவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் பிரியாணியும், சைவ பிரியர்களுக்கு வெஜ் பிரியாணியும் இன்ன பிற உணவு வகைகளும் பரிமாறப்பட்டது.

மதிய உணவுக்கு பின், கவிதை ஒன்றை குடந்தை சரவணன் வாசித்து செல்ல, அடுத்ததாக நண்பர் மயிலன் மைக் பிடித்தார். கடந்த ஆண்டு பதிவர் திருவிழாவில் தன் கல்யாண பத்திரிக்கையை கவிதையாக வைத்து சென்றவர், இப்போது, தனக்கு குழந்தை பிறக்கவிருப்பதையும் கவிதையில் உணர்த்திவிட்டு சென்றார். வாழ்த்துக்கள் மயிலன்.

அதன்பின், பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற கருத்தை வலியுறுத்தி நண்பர் மதுமதி இயக்கிய 90 டிகிரி குறும்படம் திரையிடப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதன்பின் பேச வந்தவர் கவிஞர் முத்து நிலவன், அவரை தொடர்ந்து வாமு.கோமு தன் அப்பா பற்றிய நினைவுகளை அழகாக நினைவு கூர்ந்தார். அடுத்ததாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன் வந்தார். கதை, கவிதை, நாவல் பற்றி மிக அழகாக, எளிய நடையில் வட்டார தமிழில் கணீர் குரலில் கலக்கினார்.

அதன்பின், பதிவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா சேட்டைக்காரன், மோகன்குமார், சங்கவி எழுதிய நூல்கள் வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நிகழ்ச்சிகளை சுரேகா மிக கலக்கலாக தொகுத்தளித்தார்.
==============


 
பாமரனுடன் நான்

பாமரன் 1990-களின் மத்தியில் பிரபலமான எழுத்தாளர். புரட்சிகரமான எழுத்தாளரும் கூட. அந்த காலக்கட்டத்தில் பாமரன் கடிதம் என்று குமுதத்தில் அவர் எழுதியது மிகப்பிரபலம். அப்போது, விஜய் டி.வி.,யில் யூகிசேது நடத்திய நையாண்டி தர்பார் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாமரனிடம் கேட்கப்பட்ட பாராளுமன்றம் பற்றிய ஒரு கேள்விக்கு பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம் என்று மிக துணிச்சலாக பதில் சொன்னார். இந்த வார்த்தைதான் என்னை அவர் பக்கம் திருப்பியது. இதை இன்று நான் அவரிடம் நினைவு கூர்ந்தபோது அடேங்கப்பா இன்னுமா இதை நினைவில் வைத்திருக்கிறீர் என்று ஆச்சர்யம் காட்டினார். 

மனதில் பட்டதை மிகவும் துணிச்சலுடன் தன் எழுத்தில் கொண்டுவரக்கூடிய மிக சொற்ப எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவரின் தீவிர வாசகரான நான், பதிவர் சந்திப்பில் சிறப்புரையாற்ற வந்திருந்த அவரை சந்தித்ததில் மகிழ்ச்சியே.

=====================

கற்பழிப்பு குற்றவாளியான 17 வயது சிறுவனுக்கு(?) வெறும் மூன்று வருடம் தான் தண்டனையாம். உருப்பட்ட மாதிரிதான். இவனை போன்ற காமுகனுக்கெல்லாம் மன்னிப்பு என்பதே கூடாது. காலமெல்லாம் சிறையில் அடைக்க வேண்டும். அல்லது பொது இடத்தில் வைத்து கொல்லவேண்டும். இப்படி கருணை காட்டவே கூடாது. 

17
வயதிற்கு உட்பட்ட மைனர்கள் செய்யும் வேறு சில தவறுகளுக்கு வேண்டுமானால் மன்னிப்பு கொடுக்கலாம் அல்லது குறைந்த பட்ச தண்டனை கொடுக்கலாம். ஏனென்றால், சில தவறுகள்சில தவறுகள் உணர்ச்சி வேகத்தில் செய்யப்படுபவை. ஆனால், கற்பழிப்பு அந்த வகையில் வராது. 

என் மகளை கொன்ற குற்றவாளி உயிரோடு இருக்கிறான் என்பது எங்களுக்கு எவ்வளவு வேதனையை தரும். அவன் வயதை பார்க்காதீர். குற்றத்தை பாருங்கள் என்று கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நீதிபதிகள். ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கும்போது அந்த குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களோ, ரத்த உறவுகளோ சொல்வதன் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றுசட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் ஒரு குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சட்டத்திற்கோ நீதிபதிகளுக்கோ கிடையாது. மாறாக பாதிக்கப்பட்டவர்களே தீர்ப்பு வழங்க சரியான ஆளாக இருக்கமுடியும். ஏனென்றால், அவர்களுக்குத்தான் அந்த பாதிப்பின் வீரியம், கஷ்டம் தெரியும். தண்டிக்கவோ மன்னிக்கவோ முழு உரிமையும் பெற்றவர்கள் அவர்கள்தானே தவிர சட்டமோ நீதிபதியோ அல்ல.

இந்த மாதிரி 3 மாசம், 3 வருஷம்னு தண்டனை கொடுத்தால் அப்புறம் விடலை பசங்களெல்லாம் வாங்க கற்பழிக்கலாம்னு கிளம்பிட மாட்டாங்களா?



இந்த மாதிரி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசித்தேன்.

பொது இடங்களில் தூக்குத்தண்டனை பற்றி போதும் போதும் என்ற அளவுக்கு பேசியாகிவிட்டது. அதனால் நான் கொஞ்சம் மாற்றி யோசித்தேன். யோசனை கொஞ்சம் டெர்ரராத்தான் இருக்கும்.


கற்பழிப்பு குற்றவாளிகளை பிடித்து எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண்ணோடு கட்டாய செக்ஸ் வைத்துக்கொள்ள செய்ய வேண்டும். பின்னர் அவர்களை தனிமை படுத்த வேண்டும். சாகும்வரை எந்த சிகிச்சையும் கொடுக்க கூடாது.

=========================

கேட்டதில் பிடித்தது......

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற பாக்காதே பாக்காதே என்ற பாடல். விஜய் ஜேசுதாஸ், பூஜா குரலில், இமான் இசையில் அருமையான மெலடி.

மேகா படத்தில் இளையராஜா இசையமைத்த புத்த புது காலை பாடல்.... அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய புத்தம்புது காலை பாடலையே மீண்டும் அனிதா என்பவரை வைத்து பாட வைத்திருக்கிறார். ஜானகி அளவுக்கு இல்லாவிட்டாலும், அனிதாவின் குரலும் வசீகரிக்கவே செய்கிறது.


========================


கவலையை மறக்க, வாய்விட்டு சிரிக்க, பொழுதுபோக்கன்னு ஒரு எண்டர்டெயின்மெண்ட்டுக்குத்தான் ஒவ்வொருத்தரும் சினிமாவுக்கு போறாங்க. அங்கே பார்த்தா பிழிய பிழிய அழ வைத்து அனுப்பிடறாங்க. வெளில இருந்து ஒரு கூடை சோகத்தை சுமந்துக்கு போயி தியேட்டர்ல இறக்கி வைக்கலாம்னு பார்த்தா அங்கே ரெண்டு கூடை சோகத்தை சேர்த்து நம்ம தலையில கட்டி விடறாங்க. 

நாடகம், தெருக்கூத்து, சினிமாலாம் பொழுதுபோக்குக்காக கண்டுபிடிக்க பட்டதுதான். அதுல மெசேஜ் சொல்றேன், புடலங்காய் சொல்றேன்னு ஏன் பிழிய பிழிய அழ வச்சு அனுப்பறீங்க. முடியல. படுத்துறானுக மை லார்ட்.

----------

நான் என்னவோ.......கொஞ்ச நாளா மின்வெட்டு இல்லேன்னதும் மின்சார பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு கண்டுருச்சோன்னு நினைச்சேன். இப்பத்தான் தெரியுது அது காத்து மழையின் கைங்கர்யம்ன்னு.....

இனி எப்ப காத்தடிச்சு, எப்ப மழை பேஞ்சு நமக்கு தடையில்லாம மின்சாரம் கிடைக்கிறது?

--------------

தம்பதியினருக்குள் பிரச்சினை வரும்போது, இனி இவரோடு/ இவளோடு வாழவே மாட்டேன் என்று சொலலாமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்கள். இனி இவர்/இவள் இல்லாமல் வாழவே முடியாது என்று சொல்லுமளவுக்கு வாழ்ந்துகாட்டுங்கள். வாழ்க்கை இனிமையாகும்.

*********************************





Post Comment

இதையும் படிக்கலாமே:


19 கருத்துகள்:

  1. உங்கள் சிந்தனைகளே தனி....! முடிவில் சரியாச் சொன்னீங்க...!!

    பதிலளிநீக்கு
  2. யோவ். டைட்டில் வைக்கறதுக்கு ஒரு வரைமுறையே இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்டனைகள் கடுமையாக இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இப்படித்தான் கிளம்பும் ஒரு கூட்டம்.

      நீக்கு
  3. //கற்பழிப்பு குற்றவாளிகளை பிடித்து எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண்ணோடு கட்டாய செக்ஸ் வைத்துக்கொள்ள செய்ய வேண்டும். பின்னர் அவர்களை தனிமை படுத்த வேண்டும். சாகும்வரை எந்த சிகிச்சையும் கொடுக்க கூடாது.//

    குற்றவாளி சாவும் போதுகூட சுகமா சாகனும்னு நினைக்கிற உங்க பெருந்தன்மை எனக்கு புடிச்சிருக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தடவைதான் சுகம்.....அதன் பின் சோகம்தான் அவர்கள் வாழ்வில்

      நீக்கு
  4. கற்பழிப்பு குற்றவாளிகளை பிடித்து எயிட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண்ணோடு கட்டாய செக்ஸ் வைத்துக்கொள்ள செய்ய வேண்டும். பின்னர் அவர்களை தனிமை படுத்த வேண்டும். சாகும்வரை எந்த சிகிச்சையும் கொடுக்க கூடாது.

    mmmmmm.......

    பதிலளிநீக்கு
  5. நான் சுய அறிமுகம் செய்துகிட்டதே உங்களுக்கு கவிதையா .கசாலி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பத்தில் அவர் பெயர் மறந்துவிட்டது

      நீக்கு
    2. குடந்தையுரான் சரவணன்

      நீக்கு
    3. என் ராஜபாட்டை : ராஜா........தகவலுக்கு நன்றி. திருத்திவிட்டேன்

      நீக்கு
  6. கஸாலி கபே அருமை.வன்புணர்வுக்கு வயது வித்தியாசமின்றி தண்டனை வழங்க வேண்டும்.///எனது யோசனை கொஞ்சம் வக்கிரமும்,கூடவே டெரரும் தான். ............ ஐ செயலற்றுப் போக செய்து விட வேண்டும்!///கடேசியில் சொன்ன கருத்து,நூற்றுக்கு நூறு விகிதம் உண்மையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி. டெர்ரராக இருந்தால் குற்றங்கள் கொஞ்சமாவது குறையும் அல்லவா?

      நீக்கு
  7. அருமையான தண்டனை ... அதுபோல ஆசிட் ஊட்ற்று பவர்களுக்கும் பாதிக்கபட்டவர்களுக்கு எங்கு ஊற்ற பட்டதோ அன்கேயே இவர்களுக்கும் ஊற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
  8. //ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கும்போது அந்த குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்களோ, ரத்த உறவுகளோ சொல்வதன் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றுசட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். ஏனென்றால் ஒரு குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரம் சட்டத்திற்கோ நீதிபதிகளுக்கோ கிடையாது.//

    என்ன செய்ய பாஸ்..ஜனநாயக நாட்டுல பிறந்து தொலைச்சுட்டீங்களே!!!

    பதிலளிநீக்கு
  9. நான் என் யோசனையையும் சொன்னேன்!இச்சைக்குத் தூண்டிய அந்த உறுப்பை செயலற்றுப் போகச் செய்து விட்டால்?????????

    பதிலளிநீக்கு
  10. பதிவர் சந்திப்பு பற்றிய சுருக்கமான பார்வை.. அருமை

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.