என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, அக்டோபர் 04, 2013

6 ஊழல் செய்தால் ஜெயில் மட்டும்தானா?



ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றால் அவர் ஊழல் செய்த பணத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர் ஆட்சிக்கோ, பதவிக்கோ வரும் முன்பு தேர்தல் கமிஷனில் காட்டிய சொத்து விபரத்தை தாண்டி சம்பாதித்த மொத்த அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும். 

தேர்தலில் போட்டியிடும் முன்பு தேர்தல் கமிஷனில் அவர், அவர் குடும்பத்தினர் அனைவரும் சொத்து விபரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்றும், ஐந்து வருட முடிவில் அதேபோல் அவரும், அவர் குடும்பத்தினரும் சொத்துக்கனக்கை காட்ட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும்.

அவர் குடும்பத்தினர் வேறு ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்திருந்தால், முறையான ஆவணங்களை சமர்பிக்க சொல்ல வேண்டும். சமர்பிக்காத பட்சத்தில் அந்த பணத்தையும் ஊழல் பணத்தில் சேர்க்க வேண்டும்.

அப்படி செய்தால்தான் ஊழல் செய்ய பயப்படுவார்கள். இல்லாவிட்டால் தண்டனை பெற்றுக்கொண்டு ஜாமீனில் வெளியே வந்து ஊழல் பணத்தைக்கொண்டு ஜாலியாக இருக்க ஆரம்பித்துவிடுவார்கள். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. 10 வருடங்களுக்கு முன்பு, இந்தக் கோரிக்கைகள் பத்திரிக்கைகளில் விவாதிக்கப்பட்டதாக ஞாபகம். இப்போ எல்லாருக்கும் பழகிடுச்சு!

    பதிலளிநீக்கு
  2. இப்போ எல்லாரும் இப்படித்தானே இருக்கிறார்கள்....

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்து மிக சரியானதே.

    பதிலளிநீக்கு
  4. சிட்டிசன் கிளைமாக்ஸ் மாதிரியே இருக்கே

    பதிலளிநீக்கு
  5. எனக்கு அதே டவுட்டுதான்.....

    95- கோடி... ஊ..ஊ...ஊஊஊஊஊஊஊஊஊஊஉஊஊஊஊஊ..

    பதிலளிநீக்கு
  6. மொத்தத்தையும் பறிமுதல் செய்து,சிறைத் தண்டனையும்,குறிப்பிட்ட(பத்து/பதினைந்து)ஆண்டுகளுக்கு பிரஜா உரிமையும் ரத்து செய்ய வேண்டும்.(முன்னேறிய நாடுகளில் குடியுரிமைப் பறிப்பும்,சிறைத் தண்டனையும்,ஊழல் செய்து களவாடிய சொத்துக்கள் பறிமுதலும் செய்யப்படுகிறது.)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.