என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 03, 2013

12 ஹிந்து தமிழ் நாளிதழுக்கு மீண்டும் என் நன்றி..........



ஹிந்து தமிழ் இணைய தளத்தில் கடந்த வாரம் வெளியான என் கட்டுரையை தொடர்ந்து, இந்த வாரமும் ஒரு கட்டுரையும் ஒரு சிறுகதையும் வெளிவந்திருக்கிறது. நன்றி ஹிந்து குழுமத்திற்கு.....

இதுதான் அந்த கட்டுரை 

பெட்ரோல் பங்கிலும், சிக்னலுக்கு காத்துக்கொண்டிருக்கும் நேரங்களிலும் சிலர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதையும், சிலர் ஏதாவது ஒரு பொருளை கையில் வைத்து வியாபாரம் செய்வதையும் நாம் கவனித்திருக்கலாம். அல்லது, கவனிக்காமலேயே கடந்தும் போயிருக்கலாம். இது அவர்களில் ஒருவரைப் பற்றிய ஒரு சிறிய பதிவுதான்.
சில நாட்களுக்கு முன், மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பனை அனுப்புவதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில், ஓரிடத்தில் டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தினோம். அங்கே வயதான பெண் ஒருவர் சேவிங் ரேசர் விற்பனை செய்துகொண்டிருந்தார். எங்களிடமும் வந்து கேட்டார். நமக்கோ சேவிங் செய்து பழக்கமில்லை. அதனால், நமக்கு ரேசர் தேவையில்லை. என் நண்பனும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஆனால், அந்த பெண்மணி எங்களை விடுவதாக இல்லை.

மலேசியாவில் கண் பார்வை இல்லாதவர்கள், வயதானவர்கள் வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு பொருளை வியாபாரம் செய்வார்கள். அவர்களிடம் பொருட்களை வாங்காவிட்டாலும், நம்மிடம் இருக்கும் ஒரு ரிங்கிட், இரண்டு ரிங்கிட்களை தானமாக கொடுத்தால் அவர்கள் வாங்கிக்கொள்வார்கள். அதே நினைப்பில் இங்கே வியாபாரம் செய்யும் பெண்ணும் இருப்பாரோ என்று என்னிடம் இருந்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினேன். உடனே அந்தப் பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது.
“நாங்க ஒரு கம்பெனி பொருளை விக்கறோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்கங்க. இல்லாவிட்டால் வேண்டாம்ன்னு சொல்லிடுங்க. அதை விட்டுவிட்டு இப்படி பிச்சை போட்டு எங்களை கேவலப்படுத்திடாதீங்க...” என்றார் தீர்க்கமாக.
எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
வாழ்க இவர்களின் தன்மானம். எப்போதும் எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது என்பது அப்போது எனக்கு விளங்கியது.//////////////////////

இதை ஹிந்துவில் படிக்க.....லிங்க்

------------------------------

சிறுகதை இதுதான்



 தி ஹிந்து தமிழ் ஆசிரியர் குழுவினருக்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. மீண்டும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் கஸாலி....

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் நண்பரே..... :)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4 அக்., 2013, 10:31:00 AM

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்,கஸாலி!!!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.