என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 26, 2013

10 அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...



ஒரு கட்சிக்கு மிக சோதைனையான காலக்கட்டம் என்பது எது தெரியுமா? அந்தக்கட்சி எதிர்க்கட்சியாகவோ, அல்லது அதிகாரத்திற்கு வராதபோதோ அல்ல....மாறாக ஆளுங்கட்சியாக அதிகாரத்திற்கு வரும்போதுதான். அந்தக்காலக்கட்டத்தில் ஆட்சியையும், கட்சியையும் தக்கவைக்க போராட வேண்டியிருக்கும். தன் எம்.எல்.ஏ.,க்கள் எல்லோருக்கும் மந்திரி பதவி கொடுக்க முடியாது. ஆனால், எல்லோர் அதிருப்தியையும் பேலன்ஸ் செய்ய வேண்டும். அதைப்போல் கட்சிக்குள் பதவி கிடைக்காமல் கலகம் செய்பவர்களை கண்டறிய வேண்டும்...அவர்களை களை எடுக்க வேண்டும் என்று எத்தனையோ வேலைகள் இருக்கும். ஆனால், அதிகாரத்திற்கு வரவில்லை என்றால் பெரிய பிரச்சினை இல்லை. இப்படி ஒரு இடியப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டுவிட்டார் கெஜ்ரிவால் என்றே நினைக்கிறேன்.

காங்கிரஸ் தான் அல்லாத தன் ஆதரவில் இருக்கும் எந்தக்கட்சியையும், நிரந்தரமாக ஆள விட்டதில்லை. இதற்கு கடந்த காலத்தில் தேசிய முன்னணியிலிருந்து ஐக்கிய முன்னணி வரை உதாரணம் இருக்கிறது. அதேபோல், இப்போது தன்னை கடுமையாக எதிர்த்த ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கிறது என்றால், அதில் நிச்சயம் சூழ்ச்சியிருக்கும் என்பதே என் கணிப்பு. பகையாளி குடும்பத்தை உறவாடி கெடுப்பதில் எல்லாக்கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமானால் சுயநலமில்லாதவராக இருக்கலாம். ஆனால் அவர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அப்படி இருப்பார்களா என்று தெரியவில்லை. நேற்றே ஒரு அதிருப்தி வெடித்து கலகக்குரல் வந்தது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஒருவர் வெளியிட்டிருந்தார். என் கணிப்பு சரியானதாக இருந்தால் காங்கிரஸ் எதிர்பார்த்ததும் இதுவாகத்தான் இருக்கும்.

எந்த ஒரு சுயநலமும், பதவி ஆசையும் இல்லாதவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். வாக்களித்தார்கள். ஆனால், தன் எம்.எல்.ஏ.வின் மந்திரி பதவி ஆசையினால் ஒரே நாளில் அந்த பிம்பம் உடைக்கப்பட்டு விட்டது. பார்த்தீர்களா ஆம் ஆத்மியும் ஒரு சராசரியான பதவி ஆசை பிடித்த கட்சிதான் என்று காங்கிரஸ் கூற ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார் அந்த எம்.எல்.ஏ., ஒரேநாளில் இப்படி என்றால் மீதமிருக்கும் நாளில் என்னென்ன கூத்தெல்லாம் நடக்குமோ? ஏனென்றால் பதவி ஆசையில்லாத அரசியல்வாதியையும், வாழைப்பழத்தை விரும்பாத குரங்கையும் பார்க்கவே முடியாது.



டெல்லி போன்ற சின்ன மாநிலங்களில் மிகச்சிலருக்கே அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியும்.....எல்லோருக்கும் கொடுத்துவிட முடியாது. அப்படி சிலருக்கு மட்டும் பதவி கொடுக்கும்போது அதிருதியும் வெடிக்கும். கட்சியில் கலகம் பிறக்கும். ஒரேயொரு வினோத்குமார் பின்னி வெளியே சொன்னார். இன்னும் சொல்லாத வினோத்குமார்கள் எத்தனை பேர்களோ?. அவர்கலெல்லாம் சமயம் பார்த்து தன் அதிருதிப்தியை வெளிப்படுத்தலாம். இதைத்தான் காங்கிரஸ் எதிர்பார்க்கும்... நாளைடைவில் ஆம் ஆத்மியும் ஒரு சராசரி கட்சிதான் என்று மக்களிடம் சொல்லிவிட்டு ஆட்சிக்கு கொடுத்துவரும் ஆதரவையும் வாபஸ் வாங்கும். இதுதான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது. அப்படி நடக்காவிட்டால், அதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடும் காங்கிரஸ் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

இது எல்லாம் நடக்காமல் இருப்பது கெஜ்ரிவாலின் கையில்தான் இருக்கிறது. அவரது நிர்வாகத்திறமையை வெளிப்படுத்தும் நேரம் இப்போது. மிகத்திறமையாக கட்சியையும், ஆட்சியையும் பேலன்ஸ் செய்துவிட்டால் போதும். டெல்லியில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கிவிடுவார் கெஜ்ரிவால். ஆனால், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகள் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா என்ன?

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்த நேரத்தில் வாழ்த்து சொல்வதை விட, அனுதாபம் சொல்வதுதான் என்னைப்பொருத்த வரையில் சரியாக இருக்கும்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. சரியான அலசல்! எனக்கும் கெஜ்ரிவால் அவசரப்பட்டு காலை விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  2. Neengal solvathu sariyaaka irukkalaam sako!

    Matram tharuvaarkal ena ethirpaarppome...

    பதிலளிநீக்கு
  3. புலி வாலை பிடித்த கதைதான்

    பதிலளிநீக்கு
  4. Arvind Kejrival will manage these issues over time. He has 2 1/2 months before model code of conduct comes into force for parliament election. He can reduce power price in that time as he promised and he can do something in that period and capitalise that on parliament election. If congress revokes support at this time , it will help him to get majority. On the other hand , if doesn't form govt soon people will forget him and again vote for cong or bjp. Eg captain vijaykanth, vaiko,ramdoss , thiruma .

    பதிலளிநீக்கு
  5. தன் கட்சி நிர்வாகமே அவருக்கு பெரும் தலைவலியாக அமையப் போகிறது, பின் எப்படி சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரப் போகிறார்

    பதிலளிநீக்கு
  6. இதைத்தான் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, அரசியலில் வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பார்கள், எம்.ஜி.ஆர் மாதிரி. விழுந்த ஓட்டுகள் கெஜ்ரிவாலை நம்பி மட்டுமே எனும் இமேஜை அவர் உண்டாக்கினால்தான் எம்.எல்.ஏக்கள் அடங்கி நடப்பார்கள். இல்லையென்றால் கட்சித்தாவல் தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஆனால் கெஜ்ரிவால் சமாளிப்பார் என்றே நம்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தாலும், கெஜ்ரிவாலுக்கு அனுதாபத்தால் ஓட்டுகள்கூடவே செய்யும். இது கஷ்டமான கால கட்டம் தான். இதை அவர் தாண்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர் வல்லவரும் தான் என்று நிரூபிக்க வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்காவி ...உங்கள் பார்வை நீதியானது. டெல்லி மக்களின் எதிர்ப்பார்ப்புகளில் 5௦% நிறைவேற்ற முயற்சித்து அது நடந்து விட்டாலே போதும் .மக்களுக்கு சொர்க்கம்கிடைக்காவிட்டாலும் நரகத்தில் இருந்து மீள வழி கிடைக்கலாம் .

      நீக்கு
  8. பாஜகவின் சதியும் இதில் உள்ளதாக எனக்கு தெரிகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.