என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 27, 2013

10 ஜெயலலிதாவின் பிரதமர் கனவு சாத்தியமா? -ஒரு அலசல்......



40 தொகுதிகள் மட்டுமே இருக்கிற தமிழ்நாடு+பாண்டிச்சேரி மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்றே தெரியவில்லை. அதற்குள் என் கட்சியினர் விருப்பம் இது என்று பிரதமர் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியினர் மட்டும் முடிவெடுத்தால் போதுமா? அகில இந்திய மக்களும் அல்லவா அந்த முடிவை எடுக்கணும்?.  சரி, ஜெயலலிதாவோ அதற்காக எந்த ஒரு விஷயத்தையும் முன்னெடுத்ததாக தெரியவில்லை. அதற்குள் கொடநாடு ஓய்விற்கு சென்றுவிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தல் போல், கடைசி நான்கரை வருடங்கள் ஓய்வில் இருந்துவிட்டு கடைசி ஆறுமாதத்தில் வெளியே வந்து வாக்குகளை அள்ளிவிட்டதுபோல், இப்போதும் அள்ளிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போலும்.

ஒருவேளை நாற்பது தொகுதிகளில் அப்படியே வெற்றி பெற்றாலும்கூட, ஜெயலலிதாவின் பிரதமர் கனவு எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளை விட அதிகமான  தொகுதிகளை உள்ளடக்கிய(80 தொகுதிகள்) உ.பி.,யில் முலாயம், மாயாவதி என்று இரு ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பிரதமர் கனவு கண்டதாக தெரியவில்லை. ஏறக்குறைய தமிழகம் போல மக்களவை தொகுதிகள் இருக்கும் மேற்கு வங்காளத்தில்(42) மம்தா இருக்கிறார். பீகாரில்(40) லாலு இருக்கிறார். 48 தொகுதிகள் இருக்கும் மஹாராஷ்டிராவில் சரத்பவார் இருக்கிறார். ஆனால், இவர்கள் பிரதமர் கனவில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. முதலில் இவர்களை நிலையை தெளிவுபடுத்தினால் ஜெயலலிதாவின் கனவு சாத்தியமா? வெறும் கனவா என்று சொல்லமுடியும்....ஏனென்றால் இந்தியாவின் பெரும்பான்மை தொகுதிகள் இங்குதான் இருக்கிறது. ஏறக்குறைய 200+ இவர்களை மீறித்தான் ஜெயலலிதாவுக்கு பிரதமர் கனவு பலிக்கவேண்டும்.

ஒருவேளை இவர்களுடன் கூட்டணி வைத்து மூன்றாவது அணியை உருவாக்கினால்கூட, இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.....ஒரு உறைக்குள் எத்தனை கத்திகளை சொருகுவது?

தேவகவுடா, குஜ்ரால் கூட பிரதமரானார்களே என்று கேட்கலாம். தேவகவுடா நிலை வேறு.......அப்போது காங்கிரஸ் தோற்றதும் உடனடியாக ஐக்கிய முன்னணி என்று ஒரு அணியை உருவாக்கி அதன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் அவர். ஆனால், அவர் யாருக்கும் தலைவலி கொடுக்கவில்லை. அவர் உண்டு.....அவர் தூக்கம் உண்டுன்னு இருந்தார். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் அல்ல.... எந்த அணியை அமைத்தாலும், தான் பிரதமராக வேண்டும் என்று சொல்வார். தன் தலைமையை முன்னிறுத்துவார். தான் தான் பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்துவார். 40 தொகுதிகளுக்கே இப்படி என்றால் முலாயம், மாயாவதி போன்ற 80 தொகுதிகள் வைத்திருப்பவர்களுக்கு?.....

கர்நாடகா 28, ஆந்திரா 42, கேரளா 20 என்று நம்மை சுற்றிய அண்டை மாநிலங்களில் 90 தொகுதிகள் இருக்கிறது. இங்கே தலைவராக இருக்கும் தேவகவுடா, சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் கூட ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே? இதில் தேவகவுடா கூட ஜெயலலிதா பிரதமராக வந்தால் சந்தோஷமே என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, ஜெயலலிதா பிரதமர் ஆக நான் ஆதரவு தருவேன் என்று சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இறுதியாக.......
ஜெயலலிதாவின் பிரதமர் கனவு என்பது அவ்வளவு சுலபமாக சாத்தியப்படும் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை தமிழகம் இந்தியாவிலிருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்டால் கூட, இங்கும் தி.மு.க., தே.மு.தி.க.,என்று பலத்த போட்டியை சந்திக்க வேண்டியிருக்குமே தவிர, நினைத்த மாத்திரத்தில் பிரதமராகவெல்லாம் ஆகிவிட முடியாது.




Post Comment

இதையும் படிக்கலாமே:


10 கருத்துகள்:

  1. ஜெயாவின் பகல் கனவு..சாத்தியமில்லாமல் இருக்கும் செய்தியை திரும்ப திரும்ப சொல்வதால் சாத்தியமாகவும் என்று மிதப்பில் திரியிறார்கள்..

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா27 டிச., 2013, 12:08:00 PM

    the people you mentioned from other states cant sweep the victory but Jaya only can, after congress and BJP overall in india AIADMK only get more number(40) of seats, the same thing like in Delhi assembly elections going to repeat and Jaya will do major role in setting up government.

    பதிலளிநீக்கு
  3. இது பகல் கனவு... கொடநாட்டுல இருந்துக்கிட்டு கொட்டாவி விடுறாங்க....

    பதிலளிநீக்கு
  4. ஜெயலலிதாவின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அவரை சுற்றி இருக்கும் அடிமைகளால் தான் சில சமயங்களில் அவர் அவரை சுயபரிசீலனை செய்வதை இவர்களது சுய நல கோஷங்கள் மழுங்கடித்து விடுகின்றன. பாரத பிரதமர் ஆசையும் அப்படித்தான், அவர்க்கு பிரதமர் ஆசையை ஊட்டிவிட்டால் நாம் முதல்வர் நாற்காலியை கைப்பற்றலாம் என்கின்ற சுய நலமும் இதற்க்குள் அடங்கும்

    பதிலளிநீக்கு
  5. நல்லா ஜோக்கடிச்சிகிட்டு இருக்காங்கப்பா தமிழ் நாட்டில் இருக்கிற பிரச்சினைக்கு ஒரு தொகுதி ஜெயிப்பதே கனவாக மட்டும்தான் இருக்கும், இதில் கூடுதலாக பிரதமர் பதவி கனவுதானே கண்டுவிட்டு போகட்டும் விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வெறும் 55 எம்பிகளுடன் சந்திரசேகர் பிரதமராக இருந்தார். கருணாநிதியை ஆட்சியை விட்டே தூக்கினார்.

    …பிரதமர் பதவி எம்பிகளின் எண்ணிக்கைகளில் அடங்காது. காங்கிரசுக்கும்.....பிஜெபிக்கும் ஆட்சி அமைக்குமளவிற்கு பெரும்பான்மை இல்லாவிட்டால் ஒரு இடைக்கால ஏற்பாடாக ஜெ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் நீண்ட காலமாக இருக்க வாய்ப்பு கிடையாது.

    …இந்தியாவில் இனிவரும் காலங்களில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரமுடியாது.1996-ல் இருந்து மாநில கட்சிகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை உள்ளது. தங்களுக்கு மெஜாரிட்டி இல்லையென்று காங்கிரசும்..பிஜெபியும் ஜெ வை ஆதரிக்கலாம்.

    …பிரதமர் கனவில் மிதக்காத ஒரே கட்சி திமுக மட்டுமே. அங்கே அப்படிப்பட்ட பதவிக்குத் தகுதியானவர் என்று யாரும் கிடையாது. அப்படி இருந்தாலும் கருணாநிதி குடும்பத்தார் வரவிடமாட்டார்கள்.

    …பிரதமர் பதவி கிடைக்கின்றதோ இல்லையோ... அந்த வாய்ப்பு ஜெவிற்கு இருப்பது மட்டும் நிச்சயம்.

    …மன்மோகன்சிங் 10 ஆண்டுகள் பிரதமராக உள்ளார். அவருக்கு மக்கள் செல்வாக்கு மைனஸ் 200 சதவீதம்.

    …கட்சிகளின் ஆதரவு இருந்தால் நானோ.....நீங்களோ கூட பிரதமராக வரலாம்.

    பதிலளிநீக்கு
  7. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆக முதல் தகுதி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தான். அம்மையார் எப்படி என்று எல்லாருக்குமே தெரியும். தேவ கௌடா, குஜ்ரால்..ஏன் வாஜ்பாய்கூட எந்தளவிற்கு விட்டுக்கொடுத்து, எல்லாரையும் அரவணைத்துப்போனார்கள் என்பதை நாம் அறிவோம். ஜெ. அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதே யதார்த்தம்.

    பதிலளிநீக்கு
  8. ராவணன் சொன்னபடி /கட்சிகளின் ஆதரவு இருந்தால் நானோ.....நீங்களோ கூட பிரதமராக வரலாம்./ ஆனால் ஜெ. ஆவது கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  9. 5 மாநில தேர்தலுக்கு முன் தொங்கு பாராளுமன்றம் வரும் என்ற இமேஜ் இருந்தது. அந்த நேரத்தில் ஜெ. பிரதமர் ஆக ஆசைப்பட்டது ஓரளவு ஓகே தான். ஆனால் இப்போது நிலைமை வேறு. 25% வாக்காளர்கள் தன் வாக்கு வீணாகிவிடக்கூடாது எனும் நினைப்பில் ஜெயிக்கும் வாய்ப்புள்ள அணிக்கே வாக்களிப்பர்..காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் இருக்கும் இந்தியர்கள், வாக்கை சிதறாமல் பிஜேபிக்கு அளிக்கவே வாய்ப்பு அதிகம். நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதுவே யதார்த்தம்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.