என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

7 ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியலும், விஜயகாந்தின் விளையாட்டும் -கஸாலி கஃபே- (25-02-2014)



தேர்தல் கமிஷன் பாராளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. கம்யூனிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டவுடன், ஓரிரு வேட்பாளர்களை திரும்பப்பெற போவதாகவும் சொல்லியுள்ளார். கம்யூனிஸ்ட் மட்டுமே கூட்டணிக்கு போதும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின் ஜெயலலிதாவுக்கு பெரிய கணக்கிருப்பதாக நான் கருதுகிறேன்..... என்னவென்றால், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களை கம்யூனிஸ்ட்டிற்கு ஒதுக்குவதன் மூலம் இந்தியா முழுவதும்  உள்ள கம்யூனிஸ்ட் எம்.பி.க்களை தனக்கு ஆதரவாக திருப்ப முடியும் என்று நம்புகிறார். அதாவது அண்ணா.தி.மு.க., ஒரு இருபது தொகுதிகளில் ஜெயித்து, இந்தியா முழுவதும் இரு கம்யூனிஸ்ட்களும் ஏறக்குறைய 100 தொகுதிகளை பிடித்தால் தனது பிரதமர் கனவுக்கு உயிரூட்டலாம் என்று நினைக்கிறார் போலும். பார்க்கலாம் எப்படி என்று?

------------




ஜெயலலிதாவை தவிர மற்ற கட்சிகள் கூட்டணி விஷயத்தில் சற்று சுனக்கமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் விஜயகாந்த். தி.மு.க., ஒரு பக்கமும், காங்கிரஸ் மறுபக்கமும், பி.ஜே.பி., இன்னொரு பக்கமும் விஜயகாந்திற்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். ஆனால், விஜயகாந்தோ யாருக்கும் பிடி கொடுக்காமல் மதில் மேல் பூனையாக இருக்கிறார். உளுந்தூர் பேட்டை ஊழல் ஒழிப்பு மநாட்டில் யாருடன் கூட்டணி என்று அறிவிப்போம் என்றார். பின்னர் டெல்லியில் அறிவிப்போம் என்றார். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கட்டும் பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லியிருக்கார். விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டால் தமிழக கள நிலவரம் சற்று தெளிவாகிவிடும் என்று நினைக்கிறேன்.

அவர் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவது என்பது தற்கொலை முடிவாக இருக்கும்....இன்னும் ஈராண்டுகளில் தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஒரு முதல்வர் கனவுள்ள வேட்பாளருக்கு மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சியோடு கூட்டணி என்பது சரியா வராது. இப்போது தி.மு.க.,வோடு கூட்டணி வைத்து பின்னாளில் விலகி சட்டசபை தேர்தலை எதிர்கொண்டால் மக்களிடம் எடுபடாது. அடுத்ததாக, பா.ஜ.க., ஏற்கனவே சிறுபான்மையினரின் நண்பராக காட்டிக்கொண்டவர் பா.ஜ.க.,வோடு கூட்டணி வைத்தால் அது நிச்சயம் அவருக்கு பின்னடைவே.....கடைசியாக காங்கிரஸ். இப்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் அநியாயத்திற்கு காங்கிரஸ் பெயர் கெட்டுப்போய் உள்ளது. விஜயகாந்தோ ஈழத்தமிழர்களுக்காக தன் பிறந்த நாளைக்கூட கொண்டாடுவதில்லை. இப்படிப்பட்டவர் காங்கிரசோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதென்பது தற்கொலை முடிவுதான்.

சரி இருக்கவே இருக்கு தனித்து போட்டி என்றால் அதுவும் இனி முடியாது. ஏற்கனவே தனித்து போட்டியிட்டதன் மூலம் கைக்காசை சிலவு செய்து சோர்ந்து போயிருப்பவர்களை மேலும் சோர்வடைய செய்யும். இதனால், ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. கட்சியும் கலகலக்க வாய்ப்புள்ளது. இதையும் மீறி மேலே சொன்ன ஏதாவது ஒரு கட்சியுடன் தான் கேப்டன் கூட்டு வைக்க போகிறார். இவர்களுக்காகத்தான் அரசியலில் காலத்தின் கட்டாயம், நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை  போன்ற சில வார்த்தைகள் இருக்கிறது...... இதில் ஏதாவது ஒன்றை சொல்லி எஸ்கேப்பாகி விடலாம்.

-----------------------



பிரதமராகும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பெயர் அண்ணா.தி.மு.க.,வேட்பாளர் பட்டியலிலேயே இல்லையே என்று சொல்கிறார்கள். எம்.பி. அல்லாத ஒருவர் முதல் ஆறு மாதம் வரை பிரதமராக இருக்கலாம். தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், அந்த ஆறு மாதங்களுக்குள் அவர் மக்களவைக்கோ, மாநிலங்களவைக்கோ உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். இரண்டாம் முறை பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டதே இல்லை. மாநிலங்களவை உறுப்பினர்தான் இப்போதும்.கடந்த 2001- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா எம்.எல்.ஏ.,வாக இல்லாத போதும் முதல்வராக ஆனார். பின்னர் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்க தமிழ் செல்வனை ராஜினாமா செய்ய வைத்து அந்த இடத்தில் ஜெ நின்று ஜெயித்து முதல்வரானார். ஒருவேளை ஜெயலலிதா பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் (கவனிக்க: வந்தால்) தன் தலைவிக்காக எந்த எம்பியாவது ராஜினாமா செய்து விட்டுக்கொடுக்க முன்வரலாம். இடைத்தேர்தல் மூலம் எம்பியாகலாம். அரசியலில்தான் எது வேண்டுமானாலும் நடக்குமே?

-------------------


மத்தியில் யார் வந்தாலும், நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது - நா.ம கட்சி தலைவர் கார்த்திக் #

பதவியேற்பு அன்னிக்கு பார்லிமெண்ட் முன்னாடி பந்தல், சேர் எல்லாம் போட்டு மைக் செட்டு கட்டற காண்ட்ரக்ட்ட இவர் எடுத்திருக்காரு போல.....

----

சென்னையில் __த்தா என்ற வார்த்தை ஒருவரை கோபப்படுத்தினாலோ, கலவரப்படுத்தினாலோ அவர் சென்னைக்கு புதுசுன்னு அர்த்தம்.

----

எத்தனை கட்சிகள் போட்டியிட்டு பெரும்பான்மையில் ஜெயித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும் ஜனநாயகம் மட்டும் டெபாசிட் இழந்து விடுகிறது.

---

என்னதான் அரசு மருத்துவமனைகள் நவீன வசதியில் திறக்கப்பட்டாலும் ஆட்சியாளர்களுக்கு ஒரு நோவு என்றால் அப்போலோ போன்ற தனியார் மருத்துவமனைகளைத்தான் நாடுகிறார்களே தவிர தப்பித்தவறிக்கூட அரசு மருத்துவமனையை நாடுவதில்லை.

---

அதிமுகவில் இணைந்ததை பிறந்த வீடு வந்தது போல உணர்கிறேன்._ பண்ருட்டி #
அண்ணே, வயசாகிட்டதால் ரொம்ப ஞாபக மறதி வந்திடுச்சு உங்களுக்கு.......நீங்க பொறந்த வீடு தி.மு.க., அங்கேருந்து வாழப்போன வீடுதான் அண்ணா.தி.மு.க., பின்னர் அங்கிருந்து துரத்திவிடப்பட்டு அடைக்கலம் புகுந்த வீடுகள் பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும்., இப்ப அங்கிருந்து மறுபடியும் வாழப்போன வீட்டிற்குள் நுழைந்துள்ளீர்கள்.

---

அம்மா திரையரங்கம், அம்மா மெஸ், அம்மா குடிநீர் என்று எல்லாம் அம்மா மயமாகுவதை பார்க்கும்போது, தமிழ் படம் என்ற படத்தில் கதாநாயகன் சிவா,ஒரு பாடலில் சிவா விமான நிலையம், சிவா பஸ் ஸ்டாண்ட் துவங்கி சிவா பிணவறை வரை ஆரம்பித்து அலப்பறை கொடுப்பதுதான் என் மனக்கண்ணில் வந்து போகிறது. உங்களுக்கு?.....

----

என் கேமரா க்ளிக்ஸ்.....




Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. நல்ல அலசல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. 100 கம்யூனிஸ்ட் உறுப்பினர்களா?
    இந்த எண்ணிக்கையை காம்ரேட்டுகளே நினைத்திருக்கமாட்டார்களே!
    அம்மாவின் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
    தமிழக புதுவையிலுள்ள நாற்பது தொகுதிகளிலும் அம்மாவே நின்னு ஒரு புரட்சி ஏற்படுத்தினா ஜூப்பராயிருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. என்னப்பா கஸாலி நான் தூங்குவதை எனக்கு தெரியாமல் எடுத்து போட்டு இருக்கீங்க... நல்ல வேளை என் முகத்தை காட்டல. அப்படி காட்டி இருந்தீங்க நான் பொங்கி இருப்பேன்

    பதிலளிநீக்கு
  4. விஜகாந்த் பேசாம கார்த்திக்கூட கூட்டணி வச்சுட வேண்டியது தான்!

    பதிலளிநீக்கு
  5. அருமையான தகவல்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்...
    கார்த்திக் பாவம்.... என்ன பேசுறதுன்னு இல்லாம பேசுறார்...
    உங்க கிளிக் போட்டா அருமை.
    தலைவர் விஜயகாந்த் முடிவு எப்ப வரும்ன்னு தெரியலை... பார்க்கலாம்....

    பதிலளிநீக்கு
  6. காங்கிரசே 100 இடங்கள் பிடிப்பது் முடியாது என்ற நிலையில் காம்ரேட்கள் 100 இடமா?
    தங்களது வஞ்ச புகழ்ச்சி அணிக்கு ஒரு அளவே இல்லையா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.