என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

6 இது பேய்க்கதையல்ல....... இரண்டாம் பாகம்




கதையின் முதல் பாகம்





அதிர்ச்சியில் வாயிலிருந்து ரத்தம் வந்தவனாய் செத்துப்போனான் விக்னேஷ்......

“என்ன சக்சஸ்தானே நம்ம ப்ளான்? விக்கி செத்துட்டான்ல” என்றவாரு மாடியிலிருந்து இறங்கி வந்தான் சிவா..

இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக்......

நேற்று..........

“ஹலோ சிவா நான் விக்னேஷ்”

“அதான் தெரியுதே சொல்லு”

“நாளைக்கு நம்ம எங்க கிராமத்துக்கு போறோம்?”

“ஓ அப்படியா போயிடலாம்....ரொம்ப நாளாச்சு உன் ஊர்க்கு போயி....ஆமா நம்ம ஃப்ரண்ட்ஸ் யாரும் வாறாங்களா?”

”இல்லை. நீயும் நானும்தான் போறோம்...ரெடியா இருந்துக்க”

“ஓகேடா” என்று போனை கட் செய்த சிவா உடனே இன்னொரு நண்பனுக்கு போன் போட்டான்.

“டே.....குணா எங்கேருக்கே?”

“ஏண்டா.... வெளில இருக்கேன்”

“இப்ப நான் சொல்றதை கவனமா கேளு.....விக்னேசை பழிவாங்க நல்ல சந்தர்ப்பம் நமக்கு கிடைச்சிருக்கு”

“எந்த விக்னேஷ்?”

“அதுக்கிடையில் மறந்துட்டியா? அதாண்டா உன் ஒன்னுவிட்ட தாத்தாவை கொன்னவன்....நீ கூட அடிக்கடி சொல்லுவியே.....உன் தாத்தாவுக்கு வாரிசு இல்லாததால் அந்த சொத்து எனக்கு வரவேண்டியது...அநியாயமா என் தாத்தாவை கொன்னுட்டு அந்த சொத்தை அபகரிச்சுக்கிட்டான். போலீஸ்ல சொன்னா எப்படியும் வெளில வந்திடுவான். அதானால் நீயே அவனே பழிவாங்கனும்ன்னு சொல்லுவியே....அந்த விக்னேஷ்தான்”

“விக்னேஷ்னா அவன் தான்னு எனக்கு தெரியும் நீ அவனுக்கு க்ளோஸ் ஃப்ரண்டாச்சா அதான் எனக்கு சந்தேகம் வந்துச்சு...அவனைத்தான் சொல்றியா வேற ஆளை சொல்றியான்னு....சரி...எனக்கொருசந்தேகம்....நான் அவனை பழி வாங்கறதுல ஒரு நியாயம் இருக்கு?...உனக்கு என்ன வந்துச்சு....அவன் உனக்கு க்ளோஸ் ஃப்ரண்டாச்சே?”

“ஆமா க்ளோஸ் ஃப்ரண்ட்தான், ஆறு மாசத்துக்கு முன்னாடி......இப்ப அவன் எனக்கும் எதிரிதான்”

“நீ என்ன சொல்றே?”

“நிஜம்தான்....வித்யாவை நான் காதலிக்கிறேன்னு தெரிஞ்சும் மனசாட்சி இல்லாம அவளை சீரழிச்சவன் அவன்....இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கு இருக்கான் இப்ப வரை.....ஆனா, வித்யா எல்லாத்தையும் எனக்கு சொல்லிட்டு சூசைட் பண்ணிக்கிட்டா. அப்பவுலேருந்து அவனை பழி வாங்கத்தான் நானும் காத்திருந்தேன்...இப்பத்தான் அதுக்கு நேரம் ஒத்து வந்திருக்கு. நாளைக்கு நானும் அவனும் மட்டும் அவன் பூர்வீக கிராமத்துக்கு போறோம்....அங்கே நாங்க போறதுக்கு முன்னாடி நீ அவன் வீட்டுக்கு போயி வெயிட் பண்ணு. இடையில நாங்க எங்கே வந்துக்கு இருக்கோம்ன்னு மெசேஜ் அனுப்பறேன்....படிச்சிட்டு உடனே டெலிட் பண்ணிடு”

“அய்யய்யோ அவனை கொல்லப்போறோமா?”

“என்னடா பதறுறே?...நீதான் சொன்னே...அவனை பழிவாங்கனும்ன்னு”

“அன்னைக்கு ஒரு வேகத்துல சொல்லிட்டேன். இப்ப யோசிச்சு பார்த்தா சரியா தெரியல.....ஏன்னா இப்பத்தான் எனக்கு கல்யாணம் ஆகிருக்கு.....அப்புறம் வயசான என் அப்பா, அம்மாவை காப்பாத்துற பொறுப்பு

இருக்கு...இவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போனா என் குடும்பம் தெருவுக்கு வந்திடும்”

“கொல்றதுன்னா கத்தி எடுத்து குத்துறதுதானா? இது அப்படி இல்லை....இன்னும் சொல்லப்போனா நம்ம கைகூட அவன் மேல படப்போறதில்லை......மன ரீதியா அவனை கொல்றோம்?”

”எப்படி?”

“சொல்றேன்.....அவனால் கொல்லப்பட்ட உன் உன் தாத்தா அவன் கனவில் வந்து பயமுறுத்தறாரான்னு அடிக்கடி என்கிட்டே சொல்லிட்டு இருக்கான்....உன் தாத்தா மாதிரி நீ வேஷம் போட்டுக்கு அவன் வீட்ல ஒளிஞ்சுக்க...குறிப்பா சிகப்பு கலர்ல பெயிண்ட் வாங்கி உன் தலைல ஊத்திக்கு வெயிட் பண்ணு...அவன் வந்ததும் அவன் கூடவே நானும் வருவேன்.....அப்ப மீதிய சொல்றேன்....”

“ஓகே புரிஞ்சிடுச்சு.....ஒரு சின்ன சந்தேகம்?.... நான் தாத்தா இல்லைன்னு கண்டு பிடிச்சிட்டான்னா?”

“பயத்திலேயும் பதட்டத்திலேயும் இருக்க ஒருவன் அதையெல்லாம் கவனிக்க மாட்டான். கண்டுபிடிக்கவும் முடியாது, அதோட நீ பெயிண்டை வாங்கி தலை முகம்லாம் ஊத்திக்கு இருந்தா சான்சே இல்ல....அவன் வீக்னசை வச்சே அவனை அடிக்கிறோம். வரும் வழில அவன் பயப்படறமாதிரி ஒரு சூழ்நிலையை நான் உருவாக்கிக்கிறேன். நான் சொன்னதை மட்டும் செஞ்சா போதும் ப்ளான்  சக்சஸ்தான்”

“அப்படின்னா சரி சிவா...”


Post Comment

இதையும் படிக்கலாமே:


6 கருத்துகள்:

  1. சரியான திட்டம்...

    அசத்தல் கதை... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான தொடர்ச்சி! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. சரியான போங்கு பிரெண்ட்ஸ்.
    பட் நல்ல க்ளைமாக்ஸ் !

    பதிலளிநீக்கு
  4. நல்ல ப்ளான்! நல்ல ப்ரெண்ட்ஸ்!

    பதிலளிநீக்கு
  5. ஓ ஆவி கிடையாது; ஆசாமிதான் பழி வாங்குதா?
    அப்பா இது பேய்க் கதை இல்லையாஆஆ???

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.