என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜூன் 25, 2014

12 யாரோ கேள்வி.... நானே பதில்



புதுசா ஒரு ட்ரெண்ட் உருவாகியிருக்கு... பத்து கேள்வியைக்கேட்டு பதில் சொல்றது.... இந்த சதி வலைக்குள் என்னை சிக்க வைத்த சிலந்தி இல்யாஸ் அவர்களை வன்மையாக கண்(ண)டித்து இந்த பதிலை எழுதுகிறேன். 


1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்
 கொண்டாட விரும்புகிறீர்கள்?   

100 வருடம் ஒரு மனிதன் இப்போதைய சூழ்நிலையில் வாழ்ந்து பிறந்தநாள் கொண்டாடுவது என்பது கொண்டாட்டமாக இருக்காது...வேண்டுமானால், திண்டாட்டமாகவோ, தடுமாற்றமாகவோ இருக்கும். அதனால் நமக்கெல்லாம் நோ சான்ஸ்...

2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

ஹிந்திதான்....... ஏன்னா, அதை கத்துக்கிட்டா அறிவாளியாகிடலாமாம். அதோடு, இந்தியா முழுவதும் சுத்தலாமாம்....சொல்லிக்கிட்டாங்க.....


3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

இதென்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?....அதென்ன கடைசியா? சமீபத்தில்ன்னு சொல்வதுதான் சரி..... ஆங்.....என்ன கேட்டீங்க, சிரித்ததா? இப்பல்லாம் அடிக்கடி சம்பந்தமில்லாமல் சிரிக்கிறேன்னு சொல்லி மத்தவங்கதான் என்னை பார்த்து சிரிக்கறாங்க



4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன? 

எந்த ஆட்சியில் என்பது ரொம்ப முக்கியம்.... திமுக.,ஆட்சியா இருந்தால் கவர்மெண்டை திட்டி ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவேன். அண்ணா.தி.மு.க. ஆட்சியா இருந்தா அப்படியே பொத்திக்கு உட்கார்ந்திடுவேன்.



5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன? 

பையனா இருந்தா...... அடிக்கறவ மனைவியா இருந்தா அப்பன்கிட்ட கூட சொல்லக்கூடாதுடா
பொண்ணா இருந்தா....... பார்த்து அடிம்மா....பாவம் மாப்பிள்ளை அப்பாவி பையன்



6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பிரச்சினை இல்லாட்டி உலகம் உலகமாவா இருக்கும்ன்னு நம்புறீங்க... ரொம்ப இருட்டாருக்கேங்கற பிரச்சினைக்கு தீர்வுதான் மின் விளக்கும், மெழுகுவர்த்தியும், மண் எண்னை விளக்கும். அதிகமா வியர்க்குதே என்ற பிரச்சினையின் தீர்வுதான் காற்றாடியும் ,ஏசியும். நடக்க முடியலியேங்கற பிரச்சினைக்கு தீர்வுதான் சைக்கிள், பைக், ஆட்டோ, கார் பஸ் எல்லாம். இப்படி சொல்லிக்கே போகலாம்.


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்? 

யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன்..ஆமா அட்வைஸ்ன்னா கடன் தானே?





8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால்என்ன செய்வீர்கள்?

இன்னும் ரெண்டு பாயிண்டை எடுத்து கொடுப்பேன். அப்பத்தானே பிரபலம் ஆகலாம்.



9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

விடுடா... நீ தப்பிச்சுக்கிட்டே




10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

தனியான்னா......வேண்டாம் விடுங்க

இதுக்கு நான் யாரையும் கூப்பிட போவதில்லை. யாருக்கு தோணுதோ அவங்க எல்லோரும் கலதுக்கலாம்.







Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. சூப்பரா இருக்கு, ஒரே ஒரு குறை, போட்டோ மட்டும் கன்றாவியா இருக்கு

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹா நல்லாவே இருக்குப்பா.அசத்தல்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்லாம் அசத்தல். ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. 4 ஆவது கேள்விக்கான பதில் சூப்பர்!

    பதிலளிநீக்கு
  5. #விடுடா ,நீ தப்பிச்சிட்டே #
    நமக்குள் என்ன ஒற்றுமை ?என் பதிலும் இதை போலத்தான் !
    த ம +1

    பதிலளிநீக்கு
  6. எல்லா பதிலுமே யதார்த்தமா இருக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
  7. கடைசியா சிரிச்சது, என்ன பிரச்சினை இரண்டையும் ரொம்பவே ரசிச்சேன்...மத்ததையும்தான் ......

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா24 ஜூலை, 2014, 7:50:00 AM

    படித்து ரசித்துக் கொஞ்சம் சிரித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.