என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 16, 2014

1 ஷங்கரின் ‘ஐ’ கதை இதுதான்?



ஐ...
படம் வருவதற்கு முன் ஒரு விமர்சனம். ஹி ஹி ஹி
மாடலிங்கில் நம்பர் ஒன்னான விக்ரம் மேலும் மேலும் புகழ் பெறுவதை விரும்பாத அவர் தொழில் எதிரிகள் உடம்பை சிலிமாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி ஏமாற்றி விபரீதமான மருந்தை விக்ரமுக்கு கொடுத்து விடுகிறார்கள். அதை உன்மையென நம்பி சாப்பிடும் விக்ரம் உடலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து ஹல்க் பட கேரக்டர் போல மாறி விடுகிறது அவரின் உடல். இதனால் அடையாளம் தெரியாத எமி காதலன் விக்ரமை பிரிந்து விடுகிறார்.
ஒரு பக்கம் கொடுரமான உடல் மாற்றம், மறுபக்கம் காதலி பிரிந்த வேதனை என்று அவதிப்படும் விக்ரம் தன்னை இப்படி மாற்றிய எதிரிகளை பழிவாங்க திட்டமிடுகிறார். இதனிடையே எமியை கடத்தி கொல்ல திட்டமிடுகிறது வில்லன் க்ரூப். தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாத விக்ரம் வில்லன் க்ரூப்பிடமிருந்து எமியை காப்பாற்ற அவரை ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்.
விக்ரம்வில்லன்களை பழி வாங்கினாரா? மீண்டும் பழைய உருவை அடைந்தாரா? வில்லன்கள் ஏன் எமியை கொல்ல முயற்சிக்க வேண்டும்? என்பதை பிரமாண்டம் கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
இதில் விக்ரம் நடிப்பில் பல பரிணாமங்களை காட்டியுள்ளார். விருது நிச்சயம். ஒளிப்பதிவில் பி.சி.ஸ்ரீராம் மிரட்டியுள்ளார் என்றால் ரஹ்மான் பின்னணி இசையில் தனி ஆவர்த்தனமே நடத்தியுள்ளார்.
எது கிராபிக்ஸ், எது ஒரிஜினல் என்று தெரியாத அளவுக்கு மிக துல்லியமாக இருக்கிறது பல காட்சிகள். ஷங்கரின் படத்தில் இந்த படம்தான் மைல்கல் என்றால் மிகையில்லை. சில, பல லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் அதையெல்லாம் மீறி ஐ(கண்)க்கு விருந்து இந்த ஐ.

 

பின் குறிப்பு: படத்தின் டீசரை பார்த்து நானே யூகிச்சதுதான் மேலே உள்ள கதை. இதற்கும் ஐ படத்திற்கும் சம்பந்தமில்லை 


Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.