என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், அக்டோபர் 27, 2015

0 நானும் ரவுடி(மாதிரி)தான்



போடா போடியில் ஆடியன்சை தெறித்து ஓட விட்டதற்காக நானும் ரவுடிதான் மூலம் அதே ஆடியன்சை சிரிக்க வைத்து பரிகாரம் தேடிக்கொண்டுள்ளர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
போலீசாக இருக்கும் அழகம்பெருமாளின் நேர்மையே அவரது அழகான குடும்பத்தை சிதைக்கிறது. ரவுடி பார்த்திபனை பகைத்து கொண்டதால் அவர் மீது கோபம் கொண்ட பார்த்திபன் ஒரு பாமை அவர் வீட்டுக்கு அனுப்ப அது வெடித்து தன் மனைவியை இழக்கிறார். அத்துடன் தன் மகளான நயன் தாரா காது கேட்கும் திறனையும் இழக்க நேரிடுகிறது. பின்னாளில் பழிவாங்க பார்த்திபனை தேடிப்போகும் அழகம்பெருமாளும் கொல்லப்படுகிறார். தன் குடும்பத்தை நாசம் செய்த பார்த்திபனை பழி வாங்க சபதமேற்கிறார் நயன்.
மறுபக்கம் தன் மகன் விஜய் சேதுபதியையும் தன்னைப்போல போலீசாக்க வேண்டும் என்று நினைக்கிறார் ராதிகா. ஆனால் விஜய் சேதுபதிக்கோ ரவுடியாக ஆசை. ரவுடி என்று சொல்லி சின்ன சின்னதாய் கலாட்டாக்கள் செய்து வருகிறார். இந்த சூழலில் நயனை யதார்த்தமாக சந்திக்கும் அவர் நயனுக்கு உதவப்போய் பின்னர் காதலிக்க துவங்குகிறார். தன்னை காதலிப்பதாக சொல்லும் விஜய் சேதுபதிக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார் நயன். அதாவது பார்த்திபனை தான் கொல்ல உதவினால் உன்னை காதலிக்க தயார் என்று. நயன் தன் சபதத்தில் ஜெயித்தாரா விஜய் சேதுபதி காதலில் ஜெயித்தாரா என்று சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கார் இயக்குநர்.


நயன் அடக்கமாக அழகாக அளவாக நடித்திருக்கிறார். துளி கூட கவர்ச்சியில்லாத நடிப்பு. பார்த்திபனிடம் அவர் பேசும் அந்த இரட்டை அர்த்த வசனம் மட்டும் திருஷ்டி பொட்டு. டப்பிங் சொந்தக்குரலாம். தன் காதலனே(?) இயக்குநர் என்பதால் அடக்கி வாசித்தாரோ என்னவோ?
விஜய் சேதுபதி டயலாக் டெலிவரி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவை நினைவு படுத்தினாலும் அசால்டாக நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார்.
பார்ர்திபன் முதல் முறையாக வில்லன் வேடத்தில். ஆரம்பத்தில் கொலையெல்லாம் செய்து கொடூரமான வில்லனாக அறிமுகமானாலும் போகப்போக தனக்கே உரித்தான நக்கல் நையாண்டி வில்லனாக கலக்கியுள்ளார்.
ஆனந்தராஜ், மன்சூர் அலிகான். நான் கடவுள் ராஜேந்திரன் என்று ஒரு வில்லன் பட்டாளமே இருந்தாலும் எல்லோருமே கிடைத்த கேப்பில் கிச்சுகிச்சு மூட்டியுள்ளார்கள்.

ராதிகா, ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.ஜே. பாலாஜி என்று நடித்தாலும் அந்த ராகுல் தாத்தா கேரக்டரில் நடித்தவர் கவனம் ஈர்க்கறார். பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை. இசை அனிருத்தாம். தயாரிப்பாளராக தனுசுக்கு காக்கா முட்டையை தொடர்ந்து இதுவும் ஒரு பொன்முட்டை. 

ஒரு சீரியசான கதையை போரடிக்காமல் சிரிக்க வைத்து சொல்லிய விக்னேஷ் சிவனுக்கு ஒரு நயன்தாரா பார்சல்...மன்னிக்கவும் பொக்கே பார்சல்ல்ல்ல்ல்ல்.
என் மதிப்பெண் 42/100


Post Comment

இதையும் படிக்கலாமே:


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.