என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், மார்ச் 24, 2016

5 எஸ்கேப்பான ம.ந.கூ.வும் மாட்டிக்கொண்ட விஜயகாந்தும் - (கஸாலி கஃபே 24-03-2016)



ம.ந.கூ.வின் பெருந்தன்மையை பாருங்க தேமுதிகவுக்கு 124 தொகுதியை பல்க்கா தூக்கி கொடுத்திட்டு மிச்சமிருக்கற 110 தொகுதில நாலு கட்சியும் போட்டியிடறாங்க...
அடப்போப்பா நீ வேற... 124 தொகுதியை தூக்கி கொடுத்தது பெருந்தன்மையில்லேப்பா... அதுக்கு பேரு க்ரேட் எஸ்கேப்... எப்படியும் ஜெயிக்க போறதில்லை. அப்புறம் ஏன் தேவையில்லாம அம்புட்டு தொகுதில போட்டியிட்டு காசை சிலவு செய்யணும்?. அதான் விட்டுக்கொடுத்துட்டாங்க..
ஒருவேளை ஜெயிக்கற மாதிரி வாய்ப்பு இருந்தா அத்தனை தொகுதியிலும் போட்டியிட்டுருக்க மாட்டாங்களா?...
2006 எலக்‌ஷன்ல திமுக ஒன்னு ரெண்டு சீட் கம்மியா கொடுக்கறதா சொன்னதால்தானே வைகோ முறுக்கிக்கிட்டு அந்த கூட்டணிலேருந்து வெளியாகி அண்ணா.திமுக. கூட்டணிக்கு போனார். அப்புறம் 2011 தேர்தல்ல பத்து பதினைஞ்சு சீட் தர்றேன்னு ஜெயலலிதா சொன்னதாலதானே அங்கேருந்தும் வெளியானாரு வைகோ. இவ்வளவு ஏன்?... திருமாவளவன்கூட போன எம்.பி. எலக்‌ஷன்ல ஒரு சீட் கொடுக்கறதா திமுக சொன்னபோது உள்ளே இருந்தே பிரச்சினையை கிளப்பி ரெண்டு சீட் வாங்கலியா?. அங்கேயெல்லாம் ஜெயிக்க வாய்ப்பிருந்துச்சு. அதனால் பேரம் பேசி டிமாண்ட் செஞ்சாங்க. ஆனால் இப்ப அப்படியில்லை. தோக்கறதுக்கு ஏன் மெனக்கெடணும்ன்னு எல்லோரும் சேர்ந்து சுளையா 124 சீட்டை தூக்கி விஜயகாந்துக்கு கொடுத்திருக்காங்க. இதெல்லாம் இவங்க ராஜதந்திரம். விட்டா 200 தொகுதிகளையும் விஜயகாந்துக்கே கொடுத்துட்டு வெறும் 34 தொகுதில இவங்க எல்லோரும் போட்டியிட ரெடியா இருப்பாங்க. கம்மியான தொகுதி. கம்மியான சிலவு. அதிகமான தொகுதின்னா அதிக சிலவு. அம்புட்டுத்தான்.
#ராஜதந்திரத்துவம்
------

தமிழிசை அக்கா வாய வச்சுக்கு சும்மா இருந்து தொலைஞ்சிருக்கலாம்.
பாஜக தனித்து தேர்தலை சந்திக்கும்ன்னு சொல்லி சரத்குமார் கட்சி உங்க கூட இருக்கறதை மதிக்காம அலட்சியப்படுத்துனீங்க. இப்ப பாருங்க அவருக்கு ரோஷம் வந்து ஜெயலலிதாவை பார்த்து அவங்க கட்சி கூட்டணில சேர்ந்துட்டாரு. இருந்த ஒரு கட்சியையும் விட்டுடீங்களே...

-------

'அண்ணா.திமுக வோட கூட்டணி வச்சுக்கிட்டதால் எங்களால் வளரவே முடியலே'ன்னு சொல்லி கூட்டணியிலிருந்து வெளியான சரத்குமார் இப்ப இந்த ஒரே மாதத்தில் அசுர வளர்ச்சி அடைஞ்சிட்டார் போல... அதான் மறுபடியும் அண்ணா.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருக்காரு.
அதுபோல, இதுவே பழைய ஜெயலலிதாவா இருந்தா இந்நேரம் 'ச்சூ'ன்னு பத்திவிட்டிருப்பாங்க. பாவம் அவங்களும் கொஞ்சம் வீக்காத்தான் இருக்காங்க போல... அதான் 'அதிமுக அரசின் அவலங்களை மக்களுக்கு சொல்வேன்'னு போன மாசம் சொல்லிட்டு கூட்டணியை விட்டு விலகிய சரத்குமாரை ஒரே மாசத்தில் மறுபடியும் கூட்டணில சேர்த்திருக்காங்க.

------

இப்பவும் சொல்றேன். முதல் இரண்டு இடங்களை திமுகவோ, அண்ணா.திமுகவோதான் பிடிக்கப்போகுது. அடுத்தடுத்த இடங்களுக்கு வேண்டுமானால் இந்த கேப்டன் அணி, பாமக, பாஜக இடையே போட்டி ஏற்படும். ஏனெனில் திமுகவும் அண்ணா.திமுகவும் தங்களுக்கு இருக்கு வாக்கு வங்கிகளை தக்க வைத்துக்கொண்டுவிடும். இந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் ஏறக்குறைய 60 சதவீதம் வந்திடும். மீதியுள்ள 40 சதவீதங்களில் எந்தக்கட்சியயும் சாராதவர்களும், தேர்தல் நேரத்தில் முடிவு எடுப்பவர்களும் பத்து சதவீதத்திற்கு மேல் வந்துவிடுவார்கள். இன்னும் மிச்சமிருக்கிற 30 சதவீத வாக்குகளைத்தான் இந்த கட்சிகள் பிரித்துக்கொள்ளப்போகிறது.
பெரும்பாலும் ம.ந.கூ மன்னிக்கவும் கேப்டன் அணி சில பல தொகுதிகளில் டெபாசிட் வாங்கிவிடும். ஒரு சில தொகுதிகளில் வெல்லவும் வாய்ப்புண்டு. ஆனால், ஆட்சியமைக்கும் வாய்ப்பு அறவே இல்லை என்பதுதான் நிதர்சனம். இப்போது இந்த கூட்டணியினரின் முன் இருக்கும் பெரிய சவாலே தாங்கள் டெபாசிட்டை எடுப்பதுதான். அதற்கே ரொம்ப தூரம் பயணிக்க வேண்டும் இந்த கூட்டணியினர். பார்க்கலாம்.

------

"முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பதென்பது ஜனநாய விரோதம்" என்று போன மாதம் சொன்ன அய்யா நல்லகண்ணு அவர்கள், இப்போது விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்ன சொல்வார்?!

-----

வெற்றியோ தோல்வியோ விஜயகாந்தை தவிர்த்துவிட்டு கெத்தாக ஒரு கூட்டணியை அமைத்திருக்கலாம் திமுக. விஜயகாந்திற்காக தொங்கியதன்மூலம் தெரிந்தோ தெரியாமலோ 'தேமுதிக இல்லாமல் திமுகவால் ஜெயிக்கவோ ஆட்சியமைக்கவோ முடியாது, அதனால்தான் கெஞ்சுகிறார்கள்' என்ற ஒரு எண்ணத்தை பொதுமக்களிடம் விதைத்துவிட்டது திமுக. இனி விஜயகாந்த் வந்தால்தான் திமுகவிற்கு வாழ்வு என்று பொதுமக்கள் பேசும் அளவிற்கு பலவீனமாகவும் ஆகிவிட்டது.
அதேபோல் விஜயகாந்தை எதிர்பார்த்த திமுக தொண்டர்களும் சோர்ந்துபோவார்கள். அவர்களும் விஜயகாந்த் இல்லாமல் வெற்றியில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அது சரியோ தவறோ, அப்படிப்பட்ட மனநிலைக்கு அவர்களை தள்ளியதும் திமுக தலைமைதான்.
ஆரம்பத்திலேயே சில கட்சிகளை வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கியிருந்தால் பிரச்சனையே இருந்திருக்காது. ஆளும்கட்சியின் அதிருப்தி வாக்குகள் நிஜமாகவே திமுகவின் பக்கமே திரும்பியிருக்கும். எத்தனை அணிகள் இருந்தாலும் ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சிக்கே வாக்களிப்போம் என்பதுதான் அதிருப்தி வாக்களர்களின் பொதுவான மனநிலை. அந்த மனநிலை திமுக விற்கு சாதகமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் திமுக விஜயகாந்தை எதிர்பார்த்ததன் மூலம் அந்த அதிருப்தி வாக்குகளையும் சேர்த்தே குழப்பியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இந்த குழப்பம்தான் விஜயகாந்தின் பலம். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. இப்பவும் சொல்றேன்...

    நீங்க சொன்னால், சரியாத்தான் இருக்கும்(னு நினைக்கிறேன்...)

    பதிலளிநீக்கு
  2. கிட்ட தட்ட நீங்கள் சொல்லும் எல்லாமே சரி என்று தோன்றுகிறது. கேப்டன் அணி யின் குறிக்கோள், நாங்கள் தான் திமுக / அதிமுக விற்கு மாற்று என்று நிரூபிப்பதே.

    திமுக பெரிய பதட்டத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை அளித்து விட்டது. தன்னம்பிக்கை இல்லை என்று தெரிகிறது!

    மொத்தத்தில், அதிமுக விற்கு சாதகம் என்று பெரிதாக தெரியவில்லை என்றாலும்,பாதகம் இல்லை!

    பதிலளிநீக்கு
  3. //மிச்சமிருக்கிற 30 சதவீத வாக்குகளைத்தான் இந்த கட்சிகள் பிரித்துக்கொள்ளப்போகிறது.//
    30 சதவீதத்தில் 20 சதவீதத்தினர் ஓட்டு போடுற தில்லை.

    பதிலளிநீக்கு
  4. விஜயகாந்த் செல்வாக்கே பூஜ்யம் என்பதை இந்த தேர்தலில் அதிமுக ஜெயித்து மக்களுக்கு புரிய வைக்கும்!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.