என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், பிப்ரவரி 22, 2016

1 விஜயகாந்த் கூட்டணி முடிவை தாமதப்படுத்துவது ஏனென்றால்?......


விஜயகாந்த் திருப்புமுனை மாநாட்டில் எந்த கூட்டணிக்கு போவேன் என்று இன்னும் அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வச்சிருக்கிறது எதற்கு என்றால்... பேரம் பேசுவதற்காகத்தான் என்று நினைக்கிறேன். காரணம்,
விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு போவதாக இருந்தால் இந்நேரம் அங்கு போயிருப்பார். இவர் கேட்கும் தொகுதிகளை கொடுக்க அவர்களும் தயாராகவே இருப்பார்கள். கொஞ்சம் நெருக்கடி கொடுத்தால் முதல்வர் வேட்பாளராகக்கூட விஜயகாந்தை அறிவிக்கலாம். ஆனாலும் இவர் அந்தக்கூட்டணிக்கு இதுவரை சிக்னல் காட்டவில்லை.
பாஜக கூட்டணிக்கு போவதாக இருந்தாலும் இந்நேரம் போயிருப்பார். அங்கு விஜயகாந்த் எடுத்துக்கொண்டதுபோக மீதி தொகுதிகளில் பாஜக போட்டியிட தயாராகவே இருக்கும். அந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்கவும் சாத்தியம் இருக்கிறது. ஆனாலும் அவர் அந்தக்கூட்டணிக்கு போக சிக்னல் கொடுக்கவில்லை.
ஆக, இப்படி இவர் கேட்கும் தொகுதிகளையும், வைக்கும் கோரிக்கைகளையும் சுலபமாக நிறைவேற்றும் கூட்டணிக்கு போகாமல் இன்னும் முரண்டு பிடிக்கிறார் என்றால் அதற்கு காரணம் திமுக கூட்டணியை நோக்கி தன் பார்வையை திருப்பியிருக்கிறார் என்றே அர்த்தம். இன்னும் இந்த கூட்டணிக்கு சிக்னல் கொடுக்காதற்கு காரணம் தன் டிமாண்ட்களை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளத்தான் என்பது என் யூகம். பிடிகொடுத்தால் தருவதை தருவார்கள். முரண்டு பிடித்தால் கேட்டதை தருவார்கள் என்பது விளங்காதவரா விஜயகாந்த்?!
பொருத்திருந்து பாருங்கள்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


1 கருத்து:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.