என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 12, 2016

4 எந்த கட்சிக்கூட்டணி தேமுதிக விற்கு சாதகமாக அமையும்- ஒரு பரபர அலசல்.

(முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இது எந்தக்கட்சி வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்ற அலசல் பதிவல்ல. எந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைத்தால் அதற்கு சாதகமாக இருக்கும் என்று காரணகாரியத்துடன் அலசும் பதிவு)



தில் மேல் பூனையாக விஜயகாந்த் இப்போது போக்குக்காட்டினாலும் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கப்போகிறார். அதுதான் அவர் கட்சியின் எதிர்காலத்திற்கு சிறந்தது. ஏற்கனவேதனித்து போட்டியிட்டதுபோல் இப்போதும் தனித்துப்போட்டியிடுவது என்பது தற்கொலை முடிவாகவே அமையும். அத்துடன் தொண்டர்கள் சோர்ந்துபோகவும் வழிவகுக்கும். இப்போதைய சூழலில் அவருக்கு எந்த கூட்டணி சரிப்படும்? தேமுதிக.வின் கோணத்திலிருந்து ஒரு அலசல்...


அண்ணா.தி.மு.க.கூட்டணிக்கு இப்போதைய சூழ்நிலையில் அவர் போகவே முடியாது. எனவே அதை ஒதுக்கிவிடலாம்.



அடுத்ததாக பா.ம.க. 
இந்தக்கூட்டணிக்கும் போகமுடியாது.  அப்படியே போனாலும் விஜயகாந்திற்கு சாதகமில்லை. காரணம், வட மாவட்டங்கள் தவிர்த்து இன்னும் பல மாவட்டங்களில் காலூன்றவே இல்லை பாமக. 
அத்துடன் பா.ம.க.வலுவாக இருக்கும் பகுதிகளில் தனக்கான சீட்டை கேட்டு வாங்கிவிடும் திறமையுள்ளவர் ராமதாஸ். மேலும் முதல்வர் வேட்பாளராக அன்புமணியையும் அறிவிக்க சொல்லுவார்கள்.விஜயகாந்தும் முதல்வர் வேட்பாளர்தானே?! ஒரு உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்?.அதனால் விஜயகாந்திற்கு பா.ம.க. செட்டாகாது.  ஆகவே இதையும் ஒதுக்கிவிடலாம். 


அடுத்து பாஜக... 
இந்த கூட்டணியில் ஏற்கனவே நாடாளுமன்றத்தேர்தலில்  இடம்பெற்று பூஜ்யத்தைத்தான் வாங்கினார் என்பதாலும், ஏற்கனவே இந்த கூட்டணியில் தோள் கொடுத்த மதிமுக, பா.ம.க. போன்ற கட்சிகள் தனியாக போய்விட்டதாலும் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் இம்முறையும் பூஜ்யமே மிஞ்சும். அத்துடன் கன்னியாகுமரி தவிர்த்து மற்ற இடங்களில் மூன்றிலக்க வாக்குகளை தாண்டாத கட்சி என்பதால் எல்லா தொகுதிகளிலும் பா.ஜ.க.வை விஜயகாந்தே தூக்கி சுமக்க வேண்டியிருக்கும்.


மக்கள் நலக்கூட்டணி என்றால்...
இந்த கூட்டணியிலுள்ள ம.தி.மு.க.வுடன் ஏற்கனவே நாடாளுமன்றத்தேர்தலில் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அனுபவம் விஜயகாந்திற்கு உள்ளது. ஆனாலும் அப்போது பா.ஜ.க. கூட்டணியில் அத்தனை கட்சிகள் இருந்தும் கூட ஜெயிக்க முடியவில்லை. இப்போது எப்போது ஜெயிக்க முடியும் என்று விஜயகாந்த் யோசிக்கலாம். அதேநேரம் கம்யூனிஸ்டும், விடுதலை சிறுத்தைகளும் இந்த கூட்டணியில் இருப்பதால் ஓரிரு இடங்களை மட்டும் வெல்ல வாய்ப்புண்டு. அவ்வளவுதான். அதையும் மீறி இந்த கூட்டணிக்கு போனால் முதல்வர் வேட்பாளர்களாக தான் அறிவிக்கப்படலாம்(அப்படி அறிவிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்...ஏனெனில், முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பதென்பது ஜனநாய விரோதம் என்று அய்யா நல்லகண்ணு சமீபத்தில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது)  என்று விஜயகாந்த் நினைப்பாரேயானால் அன்புமணி, சீமான், அர்ஜூன் சம்பத் வரிசையில் முதல்வர் வேட்பாளராக மட்டும் இருக்கலாம். அதேநேரம் தேர்தல் வரையில் மக்கள் நல கூட்டணி இருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதன் நம்பகத்த்ன்மையும் கேள்விக்குறியே. அண்ணா தி.மு.க.வின் B டீம் என்று விமர்சகர்களால் கணிக்கப்படுகிறதும் கவனிக்கத்தக்கது. 


காங்கிரஸ் என்றால்...
இது வேலைக்காகாது. கட்டெரும்பாய் தேய்ந்துபோன கழுதைதான் இந்த காங்கிரஸ்.  அதை தன் பிரிவின் மூலம் சித்தெரும்பாக மாற்றிவிட்டார் வாசன். இப்போது அந்த கட்சியில் தொண்டர்களைவிட கோஷ்டிகளே அதிகம்.


தமிழ் மாநில காங்கிரஸ் என்றால்...
காங்கிரஸ் சித்தெரும்பு என்றால் இது இன்னொரு சித்தெரும்பு. அவ்வளவுதான்.


திமுக கூட்டணி என்றால்...
தமிழ்நாட்டில் அண்ணா.தி.மு.க.விற்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெரிய கட்சி. அதாவது இரண்டாவது பெரிய வாக்கு வங்கியுள்ள கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சிக்கும் பூஜ்யங்களே கிடைத்தாலும்கூட, பெரிய கூட்டணி ஏதும் இல்லாமல் ஏறக்குறைய முப்பது சதவீத வாக்குகளை நிரூபித்த கட்சி.  இந்த கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்போது கனிசமான எம்.எல்.ஏ.க்களை பெற முடியும். அவர்கள் வீக்காக உள்ள இடத்தில் விஜயகாந்த் வாக்குகளை வைத்தும் இவர் வீக்காக உள்ள இடத்தில் திமுக.வாக்குகளை  வைத்தும் பரஸ்பரம் சமப்படுத்திவிடலாம். விஜயகாந்தே மீண்டும் எதிர்க்கட்சியாகக்கூட வரலாம் யாரு கண்டா?. அதனால் விஜயகாந்த் தற்போதைக்கு திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதுதான் சிறந்தது. அதுதான் அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது. எதிர்காலத்துக்கும் நல்லது. இல்லை என்றால் மீண்டும் ஒரு இடமோ இரு இடமோ கிடைக்கலாம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1.  தற்போது மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் சாதி, மத , இன்ன பிற உதிரிக் கட்சிகள் என்று பல கட்சிகள் உள்ளன.
     அவைகள் சந்தர்ப்பவாத ஆதாய அரசியல் செய்கின்றன. தேவைக்கேற்றவாறு வசதிக்கேற்ப தேர்தலுக்கு முன் கூட்டு சேர்ந்து கொள்ளுகின்றன.
     மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்று தங்களுக்கு கனிச இடங்களை பெற்ற பின் பிரிந்து விடுகின்றன.
     'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்று கூறிக்கொண்டு மக்கள் தங்களைத் தாங்களே பல முறை ஏமாற்றிக்கொண்டு வருகின்றனர். இனியும் இக்கதை தொடர்ந்தால் இதைவிட முட்டாள்தனம் வேறில்லை.
     எப்படியும் உதிரிக்கட்சிகள் வலது பக்கமோ அல்லது இடது பக்கமோ உள்ள ஒரு பெருங்கட்சியுடன் சேர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளுகின்றன.
     இந்த உதிரிகள் சாதி, மத, இன, மொழி என்ற போர்வையில் பொது நல நோக்கம் எதுவுமின்றி சுயநல சிலரால்-தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்காளால் தவறான வழிநடத்தலின் பேரில் தடம் மாறி போன கூட்டமாகும்.
     இவர்கள் தாங்களும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற விடாமல் தடுப்பவர்களாகும்.
     எப்படியோ ஆயினும் தேர்தல் என்பது சந்தர்ப்பவாத பேரத்தில் கொள்கையின்று சங்ககமித்த பெரிய, சிறிய கட்சிகள் கொண்ட இரண்டு கூட்டணிகள் தான் போட்டி இடுவதாகும்.
     சமீப காலங்களில் மத்தியில் மாநில கட்சிகளின் தயவில் தேசிய கட்சிகள் ஐந்தாண்டுகள் ஆட்சி காலம் தள்ளிய கூத்துகள் நாம் அறிந்ததே.
     மாநில கட்சிகளின் மிரட்டலில் நல்ல திட்டங்கள் நாட்டுக்கு கிடைக்காமல் போனதும், ஆட்சி எப்போது யாரால் கவிழும் என்ற அச்சம் நிலவியதும் தான் மிச்சம். மாநில கட்சிகளால் இந்தியா வல்லரசாவது தள்ளிப்போனது தான் நாடு கண்ட பலன்.
     இவ்வாறு இருக்கையில் பல கட்சி அரசியல் இந்தியாவிற்கு இனியும் தேவையா என்பதை சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது.
     எனவே இந்த குளறுபடிகளுக்கு ஒரு மாற்று தீர்வாக இரட்டை கட்சி ஆட்சி முறை அமல்படுத்த இது சரியான நேரம் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
     இதற்காக இரண்டு புதிய தேசிய கட்சிகளை தேர்வு செய்யலாம். இந்த இரண்டு கட்சிகள் அவைகளுக்கென்று தனித்தனி கொள்கைகள் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை- தேவையில்லை.
     பொதுவாக இருகட்சிகளும் இந்திய இறையாண்மை கொள்கையை கடைபிடிக்கவேண்டும். இந்திய மக்களின், பண்பாடு, கலாசார நலனில் அக்கறை மற்றும் முன்னேற்றத்தில் மாற்று கருத்துக்கு இடமின்றி இருக்கவேண்டும்.
     வெளிநாட்டு உறவு, உள்நாட்டு பாதுகாப்பு முதலியன குறித்து இருகட்சிகளும் உடன்பட்டுத்தான் செயல்படும்.
     நம் நாடு சமதர்ம ஜனநாயக குடியரசு, அந்த வகையிலும் கட்சி கொள்கை பாகுபாடு இரண்டிற்கும் தேவையில்லை.
     சாதி, மதம், மொழி, இனம், நிலம் என்ற எந்த அடிப்படை பேதமின்றி இந்த இரு கட்சிகளும் இயங்கவேண்டும்.
     இந்த குணாதிசியங்களைக் கொண்டு இயங்க வேண்டிய அந்த கட்சிகளாவன (தேசிய பொதுத்தன்மை கருதி கட்சிகளின் பெயர்களை ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். இந்திய மொழிகளில் தேவை படும் இடங்களில் மொழி பெயர்ப்பு செய்து பயன்படுத்திகொள்ளலாம்):
     (1) NATIONAL PARTY OF LADIES INDIA (NPLI)(இந்திய தேசிய பெண்கள் கட்சி)
     (2) NATIONAL PARTY OF GENTS INDIA (NPGI) (இந்திய தேசிய ஆண்கள் கட்சி).
     இவ்விரு கட்சி அமைப்பு முறையினால் ஆண்-பெண் சம உரிமை உலகத்தில் முதன் முறையாக உணர்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படும்.
     ஆட்சி நிர்வாகத்தில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா என்ற ஆரோக்கிய போட்டி மட்டுமே நிலவும்.
     அதன் அடிப்படையில் இந்திய நாடு வல்லரசாக மாறும் வாய்ப்புகள் அதிகம்.
     இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு இந்திய குடியுரிமையாளரும் இதை ஏற்று கொள்வார்கள், இதற்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     திருநங்கைகள் எந்த கட்சியில் இருக்க விரும்புகிறார்களோ அந்த கட்சியில் அவர்கள் இணைந்துகொள்ளலாம்.
     உங்கள் வார்டில் உள்ள ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் இவர்களை தொடர்புகொண்டு இரண்டு கட்சிகளை உருவாக்குங்கள்.
     முதலில் வார்டு அளவில் இரட்டைக்கட்சிகள் உருவாகவேண்டும். பின்னர் வட்ட, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கலாம்.
     ஆரம்பத்தில் ஆதரவு இருக்காது, கேலியும், கிண்டலும், இடைஞ்சல்கள், தடங்கல் என்பது பின் வெற்றி கண்ட எல்லா பெரு நிகழ்வுகளுக்கும் உரித்தானதாகும்.
     உங்கள் வார்டு அளவிலான இன்றைய உங்கள் முயற்சி தேசிய அளவில் சாதனைக்கான அஸ்திவாரமாகும்.
     உலக அரங்கில் சரித்திரம் படைக்கும் ஆரம்பமாகும்.
     ஆண்களும், பெண்களும் சம உரிமை கொண்டவர்களாக அவரவர்களுக்குரிய கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்ற, ‘சர்வசக்தி இந்தியா’ உருவாக ஒன்றுபடுவோம், ஒன்று கூடுவோம் வெற்றி நமதே!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் மில்லியன் டாலர் கேள்வியை விட இது பில்லியன் டாலர் கேள்வி அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாகி கருணாநிதியின் தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் விஜயகாந்தின் தே.மு.தி.க வை உடைக்காமல் சின்னாபின்னமாக்காமல் விடுவார்களா ?

    பதிலளிநீக்கு
  3. நல்ல அலசல்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.