இன்னா செய்தவருக்கும் இனியவே செய்யாகால் என்ன பயத்ததோ சால்பு என்று வள்ளுவ பெருந்தகை கூறியதற்கு இணங்க கெடுதல் செய்தாருக்கும் நன்மை செய்யும் வகையில் தேமுதிக பிரச்சணையை முதல்வர் அணுகி இருக்கிறார்’ – என்று எதிர்க்கட்சி துணைத் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாக ஒரு காமெடி கலாட்டா......
ஜெயலலிதா:என்ன பன்னீர். இன்னைக்கு சட்டசபைல பண்ரூட்டி பேச்சை கேட்டிங்கதானே?
ஓ.பன்னீர் செல்வம்: அம்மா.உங்களை புகழ்ந்து பேசறதை கேட்கத்தாம்மா இந்த காதையே ஆண்டவன் படைச்சிருக்கான்.
ஜெயலலிதா: இவருதான் அந்த திருநாவுக்கரசோடு சேர்ந்து எங்கிட்ட வசூல் பண்ணி கொடுத்த ரெண்டு கோடிக்கு கணக்கு கேட்டாரு. உடனே தூக்கி வீசிட்டேன்ல.
பன்னீர்: எதை அம்மா. கணக்கையா?
ஜெ: சே சே.. கணக்கை இல்லை. இவங்களைத்தான். அப்பத்தான் இவங்களோடு சேர்ந்த நாவலரையும் உதிர்ந்த மயிருன்னு சொன்னேன்.
பன்னீர்: நீங்க சொன்னா சரிதாம்மா.
ஜெ: அதைத்தான் மனசுல வச்சிக்கு இப்ப வஞ்சப்புகழ்ச்சில என்னை பேசறாரோ?
பன்னீர்: அப்படிலாம் இருக்காதும்மா.அதைத்தான் எல்லோரும் மறந்துட்டாங்களே. இந்த திமுக.காரங்க மட்டும் அப்ப அப்ப ஞாபகம் வச்சுக்கு இருக்காங்கம்மா.
ஜெ: சரி பன்னீர். இவருக்கும் ஒரு இன்னோவா ஆர்டர் பண்ணிடுங்க.
பன்னீர்: ஏற்கனவே ஆர்டர் கொடுத்த இன்னோவாவே இன்னும் வரல. கேட்டா நிறைய இப்ப ஸ்டாக் இல்லை. கொஞ்சம் நாளாகும்னு சொல்றான் இன்னோவா கம்பெனிக்காரன்.
ஜெ: அப்படியா? இதுவரைக்கும் எத்தனை இன்னோவா ஆர்டர் போட்டிருக்கீங்க.
பன்னீர்: அது இருக்கும் ஒரு டஜன்.
ஜெ: ஒரு டஜனா? கட்சி நிதிலாம் இன்னோவா வாங்கறதுக்கே சரியாப்போயிடும் போல.
பன்னீர்: பேசாம நம்ம கட்சி சார்பா ஒரு இன்னோவா கம்பேனி ஆரம்பிச்சிடலாமா அம்மா?
ஜெ: அது சரியா வராது. பேசாம இப்படி பண்ணிடலாமா?
பன்னீர்: எப்படிம்மா?
ஜெ: மாற்றுக்கட்சியிலிருந்து வரும் நபர்களுக்கு இன்னோவான்னு பட்ஜெட்ல அறிவிச்சிட்டா, நம்ம கட்சி நிதி மிச்சமாகும்ல.
பன்னீர்: அப்படியே செஞ்சிடலாம் அம்மா. ஆனா...
ஜெ: என்ன ஆனா?
பன்னீர்: இல்லேம்மா. அடுத்த பட்ஜெட் போட இன்னும் ஒரு வருஷம் ஆகுமே?
ஜெ: ஏன் அவ்வளவு நாளாகுது? அடுத்த மாசமே மினி பட்ஜெட் போட்டுடுங்க. நம்மை யாரு கேட்பா?
பன்னீர்: எதிர்கட்சிக்காரங்க கேட்டா என்னம்மா செய்றது?
ஜெ: நீங்க விளங்கித்தான் பேசறீங்களா பன்னீர்?. இப்பலாம் எங்கே எதிர்கட்சிக்காரங்க சபையில் இருக்காங்க. அதான் எல்லோரும் வெளிநடப்பு செஞ்சிடுறாங்களே? மீறி இருந்தா தனபால்ட்ட சொல்லி வெளியேத்திடுவேன். அப்புறமா இன்னோவா அறிவிப்பை விடலாம்.
பன்னீர்: ஆஹா. எதிர்கட்சிகளையும் வாழ வைக்கும் அம்மா வாழ்க.
உடனே அங்கிருக்கும் மற்ற அமைச்சர்கள் எல்லாம்
இன்னா செய்தாரையும் இன்னோவா கொடுத்து வாழ வைக்கும் அம்மா வாழ்க என்று கோஷமிடுகிறார்கள்.
இன்னா செய்தாரையும் இன்னோவா கொடுத்து வாழ வைக்கும் அம்மா வாழ்க என்று கோஷமிடுகிறார்கள்.
Tweet |
ஹா ஹா ஹா...இது நடந்தாலும் நடந்து இருக்கும்....
பதிலளிநீக்குஹஹஹஹா இப்படி பேசிகிட்டாலும் பேசிப்பாங்க
பதிலளிநீக்குஹா... ஹா... நல்ல கற்பனை...! எது பேசினாலும் அம்மா வாழ்க...!
பதிலளிநீக்குஅம்மாவின் கருணையே கருணை! நல்ல கற்பனை! ரசித்து சிரித்தேன்! நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்,கஸாலி சார்!///ஒங்களுக்கு ரொம்பத் தான் குளிரு விட்டுப் போச்சு!அடுத்த தடவையும் நாம தான் ஆட்சி,ஞாபகம் வச்சுக்குங்க!
பதிலளிநீக்குஹா... ஹா...
பதிலளிநீக்குஅது சரி... அம்மான்னா சும்மா இல்லடான்னு பாடாம விட்டாங்களே...
நல்ல பகிர்வு.
ஹா...ஹா...ஹா... இது கற்பனையா... காவியமா.... கண்ணால் கண்ட காட்சியா...
பதிலளிநீக்கு//நீங்க விளங்கித்தான் பேசறீங்களா பன்னீர்?. இப்பலாம் எங்கே எதிர்கட்சிக்காரங்க சபையில் இருக்காங்க. அதான் எல்லோரும் வெளிநடப்பு செஞ்சிடுறாங்களே? மீறி இருந்தா தனபால்ட்ட சொல்லி வெளியேத்திடுவேன். அப்புறமா இன்னோவா அறிவிப்பை விடலாம்./ சரியான காமெடி...
அருமை! காமெடி என்றாலும் சுவை மிகுதி! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு66A - remind it
பதிலளிநீக்கு