என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

16 பதிவர் சந்திப்பை புறக்கணிக்கிறேன்.....




வலை நண்பர்களே,

        நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவர் திருவிழா வந்தேவிட்டது. வரும் செப்டம்பர் முதல் தேதி சென்னையில் பதிவர்கள் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம்  கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.



1. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம்.இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.

2. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.

3. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார். 
இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.

4. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.

5. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.

6. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை  விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.

7. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.

இன்னும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

விழா நடக்கவிருக்கும் மண்டபம்


பதிவர் விழாவில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவுகளின் மெனு:
அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம் 
பீடா

சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம் 
பீடா 


பதிவர் சந்திப்பை புறக்கணிக்கிறேன் என்று யாரும் வீட்டிலேயே இருந்துவிடாமல் அனைவரும் அவசியம் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. நீங்கள் புறக்கணிக்கிறேன் என்று சொல்வதை பிறந்த புள்ளை கூட நம்பாது

    பதிலளிநீக்கு
  2. //Avargal Unmaigal30-Aug-2013 8:07:00 pm

    நீங்கள் புறக்கணிக்கிறேன் என்று சொல்வதை பிறந்த புள்ளை கூட நம்பாது//

    Correct!

    பதிலளிநீக்கு
  3. இதுப்போல ஏடாகூட தலைப்புலாம் வைக்க கூடாதுன்னு சந்திப்புல தீர்மானம் நிறைவேத்தனும்!

    பதிலளிநீக்கு
  4. இதுப்போல ஏடாகூட தலைப்புலாம் வைக்க கூடாதுன்னு சந்திப்புல தீர்மானம் நிறைவேத்தனும்!

    பதிலளிநீக்கு
  5. குறும்பு! தலைப்பூ! என்றாலும், இனிக்கும் கரும்பு!

    பதிலளிநீக்கு
  6. எல்லாரும் தலைப்ப தப்பா புரிஞ்சுகிட்டாங்க! புற (க் )கணிக்கிறேன் ன்னு ..............அதாவது,(அகம்=உள்ளே,புறம்=வெளியே)எல்லாத்தையும் கணக்குப் பண்ணுறேன்/கணிப்பீடு செய்கிறே ன்னு வச்சிருக்காரு,'தலைப்பு'.

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள தகவல்கள்! தலைப்பு! என்னமா யோசிக்கிறீங்க!

    பதிலளிநீக்கு
  8. தலைப்பைப் பார்த்து நம்ம விழாவை நண்பர் புறக்கணிக்கிறாரா என்று நினைத்து வந்தால் அருமையான குறிப்புக்களை வழங்கி சிறப்பான பகிர்வாக ஆக்கிவிட்டீர்கள்... அருமை...

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா31 ஆக., 2013, 10:05:00 PM

    இது தமிழ் வாசில தான இருந்தது!!!! என்னையே ஏமாத்த முடியுமா? Tamil blog: blogintamil.tk

    பதிலளிநீக்கு
  10. "புறக்கணிக்கிறேன்" இந்த ஒரு வார்த்தையே பதிவை வாசிக்க நிறையபேரை இழுத்துக்கொண்டு வரும் என்ற காரணத்துக்காகவே தலைப்பை இப்படி வச்சிருக்கீங்க.. இல்லையா...?

    "பயபுள்ளக எப்படியெல்லாம் யோசிக்கிறாகப்பா..."

    பதிவில் இடம்பெற்ற கருத்துகள் அனைத்துமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை. பதிவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிவை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. புறக்கணிப்பு என்றவுடன் ஏதாவது காரணம் இருக்குமா என்று வந்தால் எல்லாமே தலைகீழ் ! விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  12. நானும் புறக்கணிக்கின்றேன்....நான் புறத்தில் இருந்து அனைத்தையும் கணிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.