தலைவா படத்துக்கு தடை என்றதும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா என்று விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னார்.
உலகம் சுற்றும் வாலிபன் படம் துவங்கும்போது தி.மு.க.,வில் இருந்த எம்.ஜி.ஆர்., படம் முடிவடையும் தறுவாயில் அந்தக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அண்ணா.தி.மு.க.,வை ஆரம்பித்தார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட எம்.ஜி.ஆர். முடிவு செய்தபோது எந்த தியேட்டர்காரர்களும் அந்த படத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஆசை இருந்தாலும் ஆட்சியாளர்கள் மீது இருந்த பயமே அதற்கு காரணம்.
அதையும் மீறி வெளியிட முடிவு செய்தபோது போஸ்டர் ஒட்டக்கூட அனுமதியில்லை. இதையெல்லாம் விட, மதுரை மேயராக இருந்த முத்து மதுரையில படம் ரிலீசானால் நான் புடவை கட்டி வளையல் போட்டுக்கறேன்னு சவால்லாம் விட்டார்.அதையெல்லாம் மீறி அந்த படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர்.
ஆனால், விஜய் நடித்த ’தலைவா’விற்ககோ எம்.ஜி.ஆர்.,சந்தித்ததுபோல் எந்த பிரச்சினையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், என்ன பிரச்சினை என்றே புரியவில்லை. அப்படி இருக்கும்போது அந்த படத்தை வெளியிட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாவும் மகனும் கொடநாடு வரை சென்று சந்திக்க முடியாமல் திரும்பினார்கள்.
அதன்பின்னும் சும்மா இருக்காமல்,(சினிமாவில் தொடையை தட்டி அரசியல்வாதிகளிடமெல்லாம் சவால் விட்டு பஞ்ச் டயலாக் பேசியே வளர்ந்த) விஜய் ஜெயலலிதாவை புகழ்ந்தெல்லாம் பேசிப்பார்த்தார். பருப்பு வேகவில்லை. அடுத்ததாக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த லட்சணத்தில் விஜய் எம்.ஜி.ஆராம், தலைவா உலகம் சுற்றும் வாலிபனாம்.
எம்.ஜி.ஆர். தன் படத்தை வெளியிட ஒருபோதும் ஆட்சியாளரின் காலை பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆளுங்கட்சிக்கு எதிராய் அறிக்கையும் பேட்டியும் கொடுத்து அதே தில்லில் உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டு இமாலய வெற்றியை சந்தித்தார்.
இந்திய குடிமகன் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் ஆசை வரலாம். அப்படி வருவது தப்பில்லை. ஆனால், அதற்கு முன் அந்த தகுதியை வளர்த்துக்கொள்வது நல்லது. அதேநேரம், எல்லாத்தயும் சமாளிக்கும் ஆற்றலும் இருக்கனும். இல்லாவிட்டால் தன் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்திட வேண்டியதுதான். எல்லாரும் எம்.ஜி.ஆர். ஆகிட முடியாது. எல்லா படமும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிட முடியாது
Tweet |
விஜய் தன் அப்பாவால்த்தான் சீரழிப்போகிறார். எது எப்படி இருந்தாலும் சினிமாவை சினிமாவாக பார்க்காமல் அரசியல் ஆக்குவது சரியில்லை...
பதிலளிநீக்குவலி என்பது எல்லாருக்கும் ஒன்றுதான்... எஸ்.ஏ.சி. வாயைக் குறைத்தால் வாழ்வு சிறக்கும்...
ஒரே ஒரு எம் ஜி ஆர். ஆயிரம் தமிழ் நடிகர்கள். பாவம்.
பதிலளிநீக்குஎல்லாரும் 'எம்.ஜி.ஆர்' ஆயிட முடியாது,எல்லாப் படமும்,'உலகம் சுற்றும் வாலிபன்' ஆக முடியாது,செம!!!!
பதிலளிநீக்கு//எம்.ஜி.ஆர். தன் படத்தை வெளியிட ஒருபோதும் ஆட்சியாளரின் காலை பிடிக்கவில்லை//
பதிலளிநீக்குபொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வரிகள். மிகவும் ஆய்ந்து எழுதப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
எல்லாரும் எம்.ஜி.ஆரின் வாரிசாக முடியுமா? அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும் இல்லியா?
பதிலளிநீக்கு.......அது என்ன "தகுதி" என்று நண்பர் கஸாலி அவர்கள், அரசியல்வாதி தளத்தில் விரிவாக விளக்கி, 66ஏ-பஸ்ஸில் ஏறுவார் என்று சந்தோஷத்துடன் அறிவிக்கிறேன்!
விஜயின் சினிமா புகழை பயன்படுத்தி தன்னை ஒரு முதல்வராகவோ அல்லது மகனுக்கு பின்னால் இருந்துகொண்டு ஒரு நிழலாக இருக்க பெரு முயற்சி எடுக்கிறார்.
பதிலளிநீக்குஅதற்கெல்லாம் ஒரு தகுதியை வளர்த்துக்கொண்டு அப்புறம் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ஆனால் அந்த செயல்திட்டம் ஏதும் இருப்பது போன்ற நடவடிக்கைகள் அப்பா மகன் இருவரிடமும் இல்லை.
ஆட்சியைப் பிடித்த பிறகு என்ன செய்யலாம் என்ற கனவுதான் சந்திரசேகரிடம் இருக்கிறதே தவிர
ஆட்சியைப் பிடிக்க எப்படி செயல்படலாம் எனபது கடுகளவும் இல்லை என்பது நன்றாகவே அவர்களுடைய நடவடிக்கைகளில் இருந்து தெரிகிறது.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்