சமீபத்தில் வெளிவந்து வெள்ளிவிழாக்கண்ட அந்த திரைப்படத்தின் இயக்குநரை நம் கப்சா வார இதழின் ஆசிரியர் கப்சா பாண்டி பேட்டி எடுத்தார்....அந்த பேட்டியிலிருந்து.........
நிருபர்: வணக்கம் சார்....வாழ்த்துக்கள். உங்க @#$@#$ படம் வெள்ளி விழா கொண்டாடிருக்கே இதைப்பற்றி என்ன நினைக்கறீங்க?
இயக்குநர்: ரொம்ப சந்தோஷமா இருக்கும்ங்க....
நிருபர்: இந்தப்படம் ஓடும்ன்னு நினைச்சீங்களா?
இயக்குநர்: நிச்சயமா?
நிருபர்: எப்படி சார் அந்த நம்பிக்கை இருந்துச்சு?
இயக்குநர்: புதிய கதைகளை யாரும் சொல்லாத கோணத்தில் சொன்னால் மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருந்துச்சு(கொரியா மொழியில் இந்த படம் பல நாட்கள் ஓடியதால்தானே அப்படியே சுட்டு இங்கே எடுத்தேன்)
நிருபர்: கேமரா கோணங்கள் அருமையா இருந்ததா பாராட்டு வந்துள்ளது பற்றி....
இயக்குநர்: நானும் ஒளிப்பதிவாளரும் எப்படிலாம் கேமரா வச்சா நல்லாருக்கும்னு மண்டையை போட்டு உடைச்சிக்கிட்டோம்...இப்ப அதுக்கு பாராட்டு வந்தது சந்தோஷமா இருக்கு( இதுக்கு அந்த கொரியன் பட ஒளிப்பதிவாளருக்குத்தான் நன்றி சொல்லனும்....அந்த கொரியன் படத்தில் இருந்தது போல அப்படியே இந்த படத்திலும் வச்சோம்)
நிருபர்: இந்த படத்துக்கு பத்திரிகைகள் பாராட்டு அமோகமா இருந்துச்சே....ஒரு பிரபல பத்திரிகை கூட 75/100 மார்க் போட்டிருந்தாங்களே?
இயக்குநர்: புதிய முயற்சிகளை பத்திரிகைகள் பாராட்டுவது என்பது நல்ல விஷயம்தானே?(நல்லவேளையாக அந்த கொரியன் படத்தை பத்திரிகைகள் பார்க்காதது என் பாக்கியம்)
நிருபர்: இந்த படம் ஒரு வேற்றுமொழி படத்தின் தழுவல் என்றும் விமர்சனம் வந்துள்ளதே?
இயக்குநர்: தழுவல், இன்ஸ்ப்ரேஷன் எல்லாம் என் படத்தில் கிடையாது....நான் அசிஸ்டெண்ட் டைரக்டராவதற்கு முன்பே இந்தக்கதையை யோசித்து வைத்துவிட்டேன்....அவர்கள் பார்த்த படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கலாம்.....அதாவது எல்லோருக்கும் ரெண்டு கண்கள்தான் இருக்கு.. ரெண்டு காது இருக்கு, ஒரு வாய் இருக்குங்கறதுக்காக எல்லா மனுஷனும் ஒரே மாதிரியாவா இருக்கான்( ஸ்யப்பா...எங்கேருந்து சுட்டாலும் கண்டுபிடிச்சிருந்துங்க பக்கிக)
நிருபர்: ஓகே...ஓகே...கூல், உங்க அடுத்த படம் எப்போது சார்?
இயக்குநர்: இப்பத்தான் கதை ரெடியாகிட்டு இருக்கு...விரைவில் அறிவிப்பு வரும்(போன வாரம்தான் கொரியா, இரானிய படங்களின் டிவிடி வாங்கிட்டு வந்தேன்...பார்த்துட்டுதான் ரெடி பண்ணனும்)
Tweet |
ம்... அசத்துங்க...!!!
பதிலளிநீக்குஹி..ஹி.ஹி..
பதிலளிநீக்குத.ம 3
நம்மையெல்லாம் மூடர் கூட்டம்னு நினைச்சிட்டாங்க போல...!
பதிலளிநீக்குஎப்படில்லாம் கமெரா வச்சா நல்லாருக்கும்னு................ஹி!ஹி!!ஹீ!!!!!
பதிலளிநீக்குசூப்பர்!
பதிலளிநீக்குஇப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு
பதிலளிநீக்குஅதுக்காக இப்படியா பப்ளிக்கா போட்டு உடைக்கிறது...
ரைட்டு நடத்துங்க
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமூடர்கூடம், ஓநாயும் ஆட்டுகுட்டியும் ரெண்டுல நீங்க எந்த படத்தை சொல்றீங்க
பதிலளிநீக்கு