தி.மு.க., முதன் முதலில் பிளவை சந்தித்த போது அது ஆட்சிக்கே வரவில்லை. ஈ.வி.கே.சம்பத் மூலம் இது நிகழ்ந்தது இத்தனைக்கும் அண்ணாவிற்கு மிக நெருக்கமான நண்பர்தான் ஈ.வி.கே.எஸ். கலைஞர், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்றவர்களின் தலையீடுகளால் ஏற்பட்ட அதிருப்தியால்தான் கண்ணதாசனுடன் வெளியேறினார். தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்து சில மாதங்களில் காங்கிரசில்தான் கரைக்க முடிந்ததே தவிர, தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை.
இரண்டாவது பிளவை சந்தித்தது எம்.ஜி.ஆரால். இது தி.மு.க., இரண்டாவது முறை ஆட்சியில் இருந்தபோது. அண்ணாவிற்கு எப்படி சம்பத்தோ அதேபோல்தான் இல்லை இல்லை அதை விட அதிகமான நெருக்கத்துடன் நண்பர்களாக இருந்தவர்கள்தான் எம்.ஜி.ஆரும் கலைஞரும். அப்படிப்பட்டவர் கலைஞர் மீது ஊழல் புகார் சொல்லி வெளியேறினார்.திமுக.,விலிருந்து வெளியேறிவர்களில் அவரால் மட்டுமே அண்ணா.தி.,மு.க.,என்ற கட்சியை ஆரம்பித்து ஆலமரமாக முடிந்தது. ஆனாலும் எம்ஜிஆர் என்ற ஆலமரத்தால் தன் தாய் ஆலமரத்துக்கு போட்டியாய் மாறி விழுதுகளைத்தான் அசைக்க முடிந்ததே தவிர, வேர்களை அல்ல...
மூன்றாவது பிளவை சந்தித்தது நாவலர் நெடுஞ்செழியனால். ஏற்கனவே தி.மு.க.வின் தலைமை பதவி மீதும் முதல்வர் பதவி மீதும் கண் வைத்திருந்து சீசீ இந்தப்பழம் புளிக்கும் என்றிருந்த நாவலரை கழக விதியில் சிறிது திருத்தி அவரை பொதுச்செயலாளராக்கிவிட்டு தான் தலைவராக அமர்ந்தார் கலைஞர். எமர்ஜென்சியின் போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் வரை தி.மு.க.,வில் இருந்த அவர் இனி வேலைக்காகாது என்று தப்புக்கணக்கு போட்டு தன் தலைமையில் ஒரு படையை கிளம்பிக்கொண்டு போய், மக்கள் திமுக.வை ஆரம்பித்து பின்னர் அண்னா.தி.மு.க.,வில் கரைக்க முடிந்ததே தவிர தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை.
நான்காவது பிளவை தி.மு.க., சந்தித்தது வைகோவால். இம்முறை எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்ட செயலாளர்களையும் மாஜி அமைச்சர்களையும் தன் பின்னால் அணி வகுத்த வைத்தார் வை.கோ. இது எம்.ஜி.ஆர்.,கூட செய்யாத சாதனை. அதனாலேயே எல்லோராலும் எம்.ஜி.ஆர்.,ஆக முடியாதல்லவா? வைகோவாலும் அசைக்க முடியவில்லை அந்த ஆலமரத்தை. அதன் பின்னரும் சின்ன சின்னதாய் பல பிரிவுகள், பிளவுகள். அத்தனை பிளவுகளும், பிரிவுகளும் தி.மு.க. என்ற ஆலமரம் சாய்த்ததாக ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முடிந்ததே தவிர அந்த ஆலமரத்தை தொடக்கூட முடியவில்லை. ஏனென்றால், இலைகளால் சருகாக வேண்டுமால் மாற முடியுமே தவிர, விதையாய் விருட்சமாய் ஒரு போதும் மாற முடியாது.
திமுக.விலிருந்து பிரிந்த இத்தனை பேர்களில் எம்.ஜி.ஆரைத் தவிர, மற்ற எல்லோராலும் மரத்திலிருந்து உதிர்ந்த இலையாக, சருகாகத்தான் மாறமுடிந்தது.
அழகிரி கூட இப்போது திமுகவிலிருந்து உதிர்ந்த இலைதான். அந்த இலையால் சிலருக்கு வேண்டுமானால் நிழலை கொடுத்திருக்க முடியும். அந்த நிழல்கூட, ஆலமரத்தில் இருந்தால்தான் கொடுக்க முடிந்தது. இப்போதும் அழகிரியை ஆலமரம் என்று சிலர் சொன்னால் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும், ஆனால் ஒரு ஆலமரம் நிலத்தில் முளைத்தால்தான் அதற்கு மரியாதை. மாறாக, கட்டிடங்களின் மேல் முளைத்தால் அந்த ஆலமரத்தை வெட்டி வீசத்தான் வேண்டும்.....இல்லாவிட்டால் கட்டிடத்திற்குத்தான் ஆபத்து. அழகிரி ஒரு கட்டிடத்தின் மேல் முளைத்த ஆலமரம்....
Tweet |
ஆனால் வேரே இப்போ கரையான் அரித்து விழுதுகளை நம்பி உள்ள மாதிரி தெரிகிறதே
பதிலளிநீக்குஎல்லாம் சரிதான் இந்த படம் எங்கே இருந்து கிடைச்சது , அருமை
பதிலளிநீக்குஅழகிரி இல்லாமல் திமுக வாழும். ஆனால் திமுக இல்லாமல் அழகிரி வாழ முடியாது என்பதே யதார்த்தம்.
பதிலளிநீக்குஅருமையாக சொன்னீர்கள்! அழகிரி ஆலமரமல்ல! அதன் இலைகளில் ஒன்றுதான்!
பதிலளிநீக்குஅழகிரி ஒரு கட்டிடத்தின் மேல் முளைத்த ஆலமரம் வீழ்த்தப்பட வேண்டியவர், அதில் எனக்கு உடன்பாடுதான் ஆனால் கட்டிடத்தின் மேல் புல் முளைத்தால் கூட எச்சரிக்கையாக இருக்கும் நீங்கள் ஏன் ஆலமரம் எனத் தெரிந்தும் இவ்வளவு காலம் விட்டு வைத்தீர்கள்.
பதிலளிநீக்குசரியான கேள்வி
நீக்குசரியான கேள்விதான். ஆனால், தவறாக என்னிடம் வந்துவிட்டது. கேள்விகள் செல்ல வேண்டிய இடம் கோபலபுரம் அல்லது சிஐடி காலனி அல்லது அண்ணா அறிவாலயம்.....
நீக்குஅழகிரி இலை இல்லை அவர் ஆலமரத்தின் பல விழுதுகளில் இவரும் ஒருவர் என்பதுதான் உண்மை சிறிய விழுதுகளால் ஆலமரத்திற்கு பாதிப்பில்லைதான் ஆனால் இப்போ ஆலமரமே ஆட்டம் கண்டுவீட்டது என்பதால் அதற்கு துணை இருக்கும் சிறியவிழுதுகளும் முக்கியம் பெறுகின்றன ஆலமரம் சாய்ந்துவிடாமல் இருக்க...
பதிலளிநீக்குவீட்டிற்குள் புகுந்து வளர்ந்த ஆலமரத்தை வெட்டும் போது வீட்டிற்கும் சிறிது பாதிப்பு ஏற்படும் அதை வெட்ட நேரம் பார்த்துதான் வெட்ட வேண்டும் தவறான நேரட்தில் வெட்டும் போது வீட்டிற்குசேதம் மிக அதிகமாகவே இருக்கும்
பதிலளிநீக்குஇதற்குதான் மோடி அவர்கள் பிரதமராக வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் திரு.மோடி அவர்கள்