கேள்வி: 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஜெயலலிதாவின் தைரியம் கலைஞருக்கு இல்லாமல் போனது ஏன்?
பதில்: ஜெயலலிதா எங்கே தனித்து போட்டியிடுகிறார்?. வேண்டுமானால் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்காமல் போட்டியிடுகிறார் என்று சொல்லலாம். ஏனென்றால், அண்ணா.தி.மு.க.கூட்டணியிலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் கட்சி, அகில இந்திய ஃபார்வார்ட் ப்ளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், பூவை ஜெகனின் புரட்சி பாரதம், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் மற்றும் சமீபத்திய வரவான பி.ஜேயின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாத், ஜான் பாண்டியன் கட்சி, பண்ரூட்டி வேல்முருகனின் கட்சின்னு அரை டஜனுக்கும்மேற்பட்ட கட்சிகள் இருக்கு. இதில் பாதி கட்சிகளுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கொடுத்தவர்தான் ஜெயலலிதா. இப்போது கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் அவரே அனைத்திலும் போட்டியிடுகிறார். கலைஞர் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கி கொடுத்துவிட்டு போட்டியிடுகிறார்.
--------------------
பதில்: அழகிரிக்கு தி.மு.க.வில் ஏன்யா சீட் கொடுக்கணும்?. அவரை கட்சிலேருந்து தூக்கி மாசம் ரெண்டாச்சு. கட்சிலே இருக்கவங்களுக்கே கொடுக்கறதுக்கு சீட் பத்தலயாம். இதில் கட்சியிலேயே இல்லாத அழகிரிக்கு எப்படிய்யா கொடுக்க முடியும்?, விட்டால் பரிதி இளம்வழுதிக்கு தி.மு.க.வில் சீட் கொடுக்க சொல்லுவீங்க போல.
-----------------
கேள்வி: எங்களுக்கு இரண்டு தொகுதி ஒதுக்காவிட்டால் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என்று பச்சமுத்து எச்சரித்துள்ளாரே? என்ன நடக்கும்?
பதில்: இந்திய ஜனநாயக கட்சி கூட்டணியில் இல்லாத பட்சத்தில், பா.ஜ.க.,வின் செல்வாக்கு தமிழகத்தில் கூடியுள்ளதா? குறைந்துள்ளதா என்று ஏற்கனவே எடுத்த டுபாக்கூர் கருத்து கணிப்பை திருத்தி புதிய டுபாக்கூர் கருத்துக்கணிப்பை எடுத்து பா.ஜ.க.,செல்வாக்கு குறைந்துள்ளது என்பார்கள். 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் பா.ஜ.க.,கூட்டணி என்று புதிய தலைமுறை டி.வி.யில் சொல்வார்கள். 40 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் வாக்குகளை ஐ.ஜே.கே.,பிரிக்கும் என்றெல்லாம் அடித்து விடுவார்கள். வேறொன்றும் நடக்க போறதில்லை
Tweet |
எல்லாமே டுபாக்கூர் தான்...
பதிலளிநீக்குஇனி உங்கள் பதிவுகளை அதிகம் எதிர்ப்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்...
கேள்வியும் நானே பதிலும் நானே - அருமை.
பதிலளிநீக்குபச்சமுத்து, ‘பசை’முத்து..கேட்பதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உண்டு.
பதிலளிநீக்குதேசிய கட்சியோடும் , திராவிட கட்சியோடும் இனி கூட்டணி இல்லைன்னு பாமக சொல்லிட்டு இப்ப
பதிலளிநீக்குபிஜேபி, மதிமுக , தேமுதிக வோட கூட்டனிக்கு வருதே ஏன் ?
IJK வும் கொங்குவும் தேசிய கட்சியோ திராவிட கட்சியோ இல்லையே .
அதனால் தான் .
நடுநிலை தவறியதாக உணருகிறேன்.. மற்றபடி உங்கள் தளம்.. உங்கள் எண்ணம்..
பதிலளிநீக்குU always are sympathetic to DMK.......
பதிலளிநீக்குஅரசியலில் இதலாம் சாதாரணம்
பதிலளிநீக்குSema
பதிலளிநீக்கு