எதிரும் புதிருமாக இருக்கும் விஜயகாந்தையும் ராமதாசையும் சந்திக்க வைக்க தமிழக பா.ஜ.க.,தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சிக்கிறார். இவர் அலுவலகத்தில் அவரும் அவர் அலுவலகத்தில் இவரும் சந்திக்க மறுக்க பொதுவாக கமலாயத்தில் இந்த கற்பனை சந்திப்பு நடக்கிறது.
பொன்னார்: என்ன ரெண்டு பேரும் பேசாமலேயே இருக்கீங்க? ஏதாவது பேசுங்க...
விஜயகாந்த்: நான் ஏன் அவரோடு பேசனும்?..... .நான் தானே கூட்டணி தலைவரு? அவரை வேண்டுமானால் என்னோடு பேச சொல்லுங்க..
ராமதாஸ்: என்னது இவரு கூட்டணி தலைவரா? நல்லாருக்குய்யா...நல்லாருக்கு.
பொன்னார்: இதென்னங்க வம்பா போச்சு....ஆரம்பத்திலேயே இப்படி இருந்தா எப்படிங்க? யாராவது ஒருத்தரு விட்டுக்கொடுத்தாத்தானே கூட்டணி ஜெயிக்கும்?
ராமதாஸ்: நான் விட்டுக்கொடுக்க முடியாது....1996 தேர்தல்லேயே நாங்கதான் கூட்டணிக்கு தலைமை வகிப்போம்ன்னு சொன்னோம்.... அப்ப எங்க கூட்டணில இருந்த வைகோ அதுக்கு ஒத்துக்கல....உடனே பிரிஞ்சு தனித்தனியா தேர்தலை சந்திச்சோம்....இப்பவும் அப்படித்தான் கூட்டணிக்கு நாங்கதான் தலைமை வகிப்போம்.
விஜயகாந்த்: ஏய்(நாக்கை மடிக்கிறார்) யாருகிட்ட எங்கிட்டேயேவா? அதான் நடக்காது உங்க ஏரியா மொத்தத்துலயும் நாங்கதான் அதிக ஓட்டு வாங்கிருக்கோம்.... வேனும்னா விழுப்புரம், கள்ளக்குறிச்சி கணக்கை எடுத்து பாருங்க...எங்க பவர் தெரியும். இப்பக்கூட உங்க ஏரியா உளுந்தூர்பேட்டைலதான் மாநாடு போட்டு 20 லட்சம் பேரை கூட்டினோம்...
ராமதாஸ்: என்னது இருபது லட்சம் பேரா? போதையில இருந்தா எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியும்பாங்க....இவருக்கு மட்டும் ஒரு ஆளு நூறு பேரா தெரிஞ்சிருக்காங்க போல.... நாங்க கூடத்தான் சித்திரை திருவிழா நடத்தி ஒரு கோடி பேரை மகாபலிபுரத்துல கூட்டினோம். வாகனத்தை நிறுத்த இடமே இல்லாம பாண்டிச்சேரிலே ஆரம்பிச்சு மரக்காணம் வரை தற்காலிக பார்க்கிங்கா ஆக்கினோம்.
பொன்னார்: நம்ம கூட்டணி கட்சிக்குள்ளேயே இப்படி அடிச்சிக்கிட்டா எப்படிங்க...சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே மேலே பேசலாம்...
விஜயகாந்த்: ஆங்....அடிச்சிக்கிட்டதுன்னு சொன்னதும்தான் எனக்கு ஞாபகம் வருது. நான் வேட்பாளரை மண்டைல அடிச்சத வீடியோ எடுத்து ஊர் உலகம் பூரா என்னை அசிங்கப்படுத்தியது இவரு டி.விதான் தெரியும்ல.....
பொன்னார்: அதை இன்னும் ஞாபகம் வச்சிக்கிட்டா எப்படி. நம்ம மாதிரி அரசியல்வாதிகளுக்கு மறதிதான் முதலீடே.....வெட்கம் மானம்லாம் அடுத்துதான்.
விஜயகாந்த்: அதெப்படிங்க மறக்க முடியும்? என் கஜேந்திரா பொட்டியை தூக்கிட்டு ஓடினதை மறக்க சொல்றீங்களா? அதனால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா? அந்த சம்பவம் மட்டும் நடக்கேன்னா நான்பாட்டுக்கு சினிமாவுல நடிச்சோமா? சின்ன சின்ன பொண்ணுகளை கட்டிப்பிடிச்சு டூயட் பாடினோமா? தொப்புள்ல பம்பரம் விட்டோமான்னு இருந்திருப்பேன்...
ராமதாஸ்: நான் ஏன் கஜேந்திரா பொட்டியை தூக்கிட்டு ஓடினேன்? இவரு வாயை வச்சுக்கு சும்மா இருக்கனும். என் மகன் மந்திரியானது பொறுக்காம கொல்லைப்புறமா மந்திரி ஆகிட்டாருன்னு சொன்னதாலதானே பொட்டிய தூக்கிட்டு ஓடினேன்.
பொன்னார்: அய்யய்ய...ஏங்க இப்படி பேசிட்டே போனா எப்படிங்க? அப்புறம் எப்படி தொகுதி பங்கீடு முடிக்கிறதாம்....
விஜயகாந்த்: அதெல்லாம் முடிக்க வேணாம்.... அவரு போட்டியிடற எல்லா தொகுதிலேயும் நாங்களும் போட்டியிடுவோம். மற்ற தொகுதில நான் உங்களோட கூட்டணி. ஆனா அவரு கட்சியோடு எப்போதும் கூட்டணி கிடையாது....
பொன்னார்: இதென்ன புதுக்குழப்பம்? அப்புறம் எப்படி ஒரே மேடைல ஒண்ணா கை கோர்த்து கூட்டம் நடத்தறது?
விஜயகாந்த்: நான் இவரோடு கை கோர்க்கனும்னா என்னை கூட்டணி தலைவரா அறிவிக்கனும். அதை இவரு ஒத்துக்கனும். இல்லாட்டி இவரோட என்னால் கை கோர்க்க முடியாது.. நான் அந்தம்மாவோடு கூட்டணில இருக்கும் போதே ஒரே மேடைல நான் ஏறல....அவங்க சென்னைல கூட்டம் போட்டப்ப நான் வேற ஊருக்கு எஸ்கேப் ஆகிட்டேன். இப்ப இவரோடு எல்லாம் என்னால் கை கோர்க்க முடியாது..
ராமதாஸ்: அதுக்குத்தான் அந்தம்மா வச்சாங்கள்ல ஆப்பு....இன்னும் அடங்கலேன்னா எப்படி
விஜயகாந்த்: நான் ஏன்யா அடங்கணும். ஏன் அடங்கணும்?. ஆங்.....
அப்போது அங்கே வைகோவும், பச்சைமுத்துவும், தமிழருவி மணியனும் வருகிறார்கள்.
வைகோ: இங்கே என்ன கூட்டம் திடீர்னு?
பொன்னார்: நல்ல நேரத்துல வந்தீங்க வைகோ...இப்ப நம்ம கூட்டணிக்கு யாரு தலைவரு விஜயகாந்தா? ராமதாசான்னு ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கு. இப்ப நம்ம கூட்டணிக்கு யாரை தலைவரா போடலாம். நீங்களே சொல்லுங்க?
வைகோ: இவங்க எல்லோரை விடவும் நான் தான் சீனியர், அரசியலிலும் இந்த கூட்டணியிலும். அதனால் நான் தான் கூட்டணி தலைவரு......சரியா?
பச்சைமுத்து: என்ன சரியா? என் புதிய தலைமுறை டிவில கருத்து கணிப்புன்னு டுபாக்கூர் கணிப்பெல்லாம் போட்டு நான் தான் பிஜேபிக்கு ஒரு இமேஜையே க்ரியேட் பண்ணினேன். இப்பவும் நடுநிலைமை என்ற பேர்ல ஜால்ரா அடிச்சுக்குத்தான் இருக்கேன். முறைப்படி பார்த்தா எனக்குத்தான் தலைவர் பதவி வேணும்.....
இதைக்கேட்ட பொன்னார், ”ஏன் மணியன் நீங்களாவது சொல்லுங்க?” என்று கேட்கிறார்.
தமிழருவி மணியன்: என்னத்த சொல்ல சொல்றீங்க?.......வைகோவை நான் தான் இந்த கூட்டணிக்கு கொண்டு வந்தேன். விஜயகாந்தை கொண்டு வர எவ்வளவு பாடுபட்டேன்னு எல்லோருக்கும் தெரியும். பேஸ்புக்ல என்னை மாமாப்பய, தரகர்ன்னு சொல்லி சொல்லி கழுவி ஊத்துனாங்க....அதையெல்லாம் துடைச்சே எங்கிட்டே இருந்த நூறு சால்வைக்கு மேல அழுக்காகிடுச்சு. அத்தனையும் பொறுத்துக்கு இருக்கேன்.
அதனால என்னைத்தான் கூட்டணி தலைவரா அறிவிக்கனும். அதுதான் முறையும் கூட.....
இதைக்கேட்ட பொன் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுகிறார்.
(கண்டிப்பாக சிரிக்க மட்டும்)
Tweet |
ஆரம்பதிலெஇருந்து சிரிச்சாலும் கடைசி பத்தி படிக்கும் பொது வெடி சிரிப்புதான்-))))))) சும்மா அதிருது
பதிலளிநீக்குபாஜ வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடியும் வரைக்கும் விஜயகாந்த இந்த பதிவை படிக்காம இருக்கணும் ஒரு வேளை படிச்சிட்டார்னா அப்புறம் தேர்தலுக்கு அப்புறம்தான் நான் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என்று சொல்லிவிட்டு மனுசன் ஒடிப்போவார்...
பதிலளிநீக்குவிஜயகாந்தை வைத்து நீங்கள் போடும் பதிவு எல்லாஅம் மிக நன்றாகவே இருக்கிறது.பாராட்டுக்கள்
சிறந்த நகைச்சுவைப் பதிவு..
பதிலளிநீக்கு