என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜூன் 20, 2013

14 இது நடந்த கதையல்ல......நடக்காத கதையுமல்ல....



"ஹலோ மிஸ்டர் சிவா"

"ஆமா சிவாதான் சொல்லுங்க".

"நாங்க முதியோர் இல்லத்திலிருந்து பேசறோம். உங்கப்பா இறந்திட்டாரு".

"ஓ மைகாட். எப்ப?"

"இப்பத்தான். வந்தீங்கன்னா..."

"சாரி சார். எனக்கு ஆபீசில் கடுமையான வேலை. நீங்களே எல்லாத்தையும் பார்த்துக்கங்க. எவ்வளவு சிலவோ அதை நான் கொடுத்திடுறேன்".

"இல்லை சார். நீங்க பக்கத்தில் தானே இருக்கீங்க. வரலமே"

"சார். அதான் சொல்றேன்ல. வேலை டைட்டா இருக்குன்னு."

பதிலுக்கு காத்திராமல் போனை கட் செய்தான் சிவா. மீண்டும் போன் வந்தது.

"சார் ஒரு தடவை சொன்னா புரியாதா. ஏன் சார் டிஸ்ட்ரப் செய்றீங்க".

"இல்லே சார். ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அவர் யாருக்கோ கடன் கொடுத்திருப்பார் போல. அந்த கடனை ஒரு ஆள் ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் உங்கப்பாட்ட செட்டில் பண்ணிட்டு போனாரு. அந்த பணம் ஒரு லட்ச ரூபாயை உங்ககிட்ட ஒப்படைக்கனும் எப்ப வர்றீங்க?".

"அய்யய்யோ அப்பா..நீங்க போயிட்டீங்களா?. சார் வெயிட் பண்ணுங்க. உடனே வாரேன்". 




குறிப்பு: சமீபத்தில் தந்தையர் தினத்தன்று முகப்புத்தகத்தில் நான் எழுதிய கதை


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. எங்கோ நடக்கும் நிஜம் கதையாகியுள்ளது! சிறப்பான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இதைப் படித்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை!
    மனம் கனத்தது.

    பதிலளிநீக்கு
  3. இதுவும் நடக்கிறது ...இதற்கு மேலும் நடக்கிறது ...

    பதிலளிநீக்கு
  4. பணத்திற்கு பின்பு தான் பாசம்....

    பதிலளிநீக்கு
  5. பணத்துக்கு இருக்குர் மதிப்பு அந்த பணத்த சம்பாரிக்குற மனுஷனுக்கு இல்லாம போய்டுச்சு ....

    பதிலளிநீக்கு
  6. இதென்ன பிரமாதம்?சொத்தைக் குடுக்கலேன்னு போட்டுத் தள்ளின/தள்ளுற கதையெல்லாம் இருக்கு!

    பதிலளிநீக்கு
  7. வரும் காலத்தில் நமக்கு இதுதான் நடக்கும்.
    நாம் என்ன இன்புட் கொடுத்தோதோ அதுதான் அவுட்புட்டாக வரும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ரஹீம் கஸாலி - முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு - பிறகு சுத்தமாக மறந்து விடும் மக்களின் மனப் போக்கினை சித்தரிக்கும் அருமையான கதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. தலைப்பு அருமை ரஹீம் கஸாலி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  10. பணம் தானே முக்கியமாகப் போய்விட்டது, வருத்தம்தான்..
    தலைப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  11. இது நிறைய இடங்களில் நடந்து கொண்டு இருக்கின்ற கதைதான்...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.