என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜூன் 29, 2013

5 பரிதி அப்டேட்ஸ்



பரிதி பற்றி என் முகப்புத்தகத்தில் எழுதிய ஸ்டேட்டஸ்....

பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு, எழும்பூரில் கூர் தீட்டப்பட்ட போர்வாள் முனை மழுங்கி கொடநாட்டிற்கு கொத்தவரங்காய் நறுக்க போய்விட்டது.#
பரிதி பற்றி கலைஞர் சொன்னாலும் சொல்வார்.
=============

நாடகம் எழுதி, அதன் மூலம் அரசியலுக்கு வந்த கருணாநிதி, இன்னும் நாடகங்கள் எழுதுவதை விடவில்லை- பரிதி#
அவர் எழுதிய நாடகத்தில் நேற்றுவரை அபிமன்யூ வேஷம் போட்ட நீங்கள் இப்போது அடிமை வேஷம் போட நாடகக்குழு மாறியிருக்கிறீர்கள்.

=============

ஜெயலலிதா கொடநாடு செல்லும் அவசரத்தில் இருந்தபோது பரிதி அவரை சந்தித்து அண்ணா.தி.மு.க.,வில் இணைந்ததால் ஜெ., அவருக்கான பரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார்.
ஆகவே, இன்றோ நாளையோ பரிதிக்கான இன்னொவா அறிவிப்பு கொடநாட்டிலிருந்து வரலாம். அல்லது வராமலேயே போகலாம்.

================

தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை- பரிதி#
ஆறு முறை ஜெயித்தபோதும், இளைஞர் அணி துணை செயலாளராக இருந்த போதும், துணை பொதுச்செயலாளராக இருந்த போதும், துணை சபாநாயகராக இருந்தபோதும், மந்திரியாக இருந்தபோதும் இதை சொல்லியிருந்தால் உங்களுக்கு ஒரு சல்யூட் வைத்திருக்கலாம். ஆனால் இப்போது சொல்வது டூ லேட் அண்ணே... டூ மச்சும் கூட..

===============

என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதற்கு அம்மாவுக்கு நன்றி. சட்டசபையில் ஜெ., இருக்கும்போது எதிர் வரிசையில் இருந்து நான் கடுமையா விமர்சித்தும், எதிர்த்தும் பேசியிருக்கிறேன். கோபாலபுரத்து கொள்ளைக்காரர்கள் பேச்சை கேட்டு பேசினேன். இருப்பினும இதனை மறந்து தாயுள்ளத்தோடு என்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்-பரிதி #

சேர்ந்த ஒரே நாள்ல நல்லா ட்ரைனிங்க் கொடுத்திருக்காங்களே?
யாருண்ணே இப்படி பேச சொல்லிக்கொடுத்தது? கொடநாடு கொள்ளைக்காரர்களா?


================



பரிதி இளம்வழுதி அன்று..............

தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆர் என்ற சொல்லை உச்சரிப்பதும், ஆட்சிக்கு வந்துவிட்டதாலோ, அல்லது ஆட்சியை இழந்த நிலையிலோ, எம்.ஜி.ஆர் என்ற சொல்லை உதட்டளவில் கூட உச்சரிக்காத அற்ப பிறவிதான் இந்த ஜெயலலிதா என்பதை அவரது கட்சியில் இருந்து ஒவ்வொரு நாளும் வெளியேறிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உள்ளங்குமுறி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோதே அவரைப்பற்றி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் புகார் செய்தவர் இந்த ஜெயலலிதா என்பதை தமிழகம் மறந்துவிடவில்லை.

எம்.ஜி.ஆர் என்ற பெயரைச் சொன்னாலே, எறிந்து விழும் மனநிலை கொண்டவர் ஜெயலலிதா என்று எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அருங்காட்சியகத்தைக் கூட திறக்க மனமில்லாமல் இரண்டாண்டுகளுக்கு மேல் வைத்திருந்த நிலையில், கழக ஆட்சி அமைந்தபிறகு தான் அது திறந்து வைக்கப்பட்டது. 

உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டில் தோன்றிய தலைவர்களுக்கும், நினைவுச் சின்னங்களை அமைத்து எதிர்காலத் தலைமுறை அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வாழ்நாளெல்லாம் தனது எழுத்தின் மூலமாக பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் கருணா‌நி‌தி‌யின் இமாலயப் பணிகளை இட்லிக்குள் மறைத்து விடலாம் என்று இறுமாந்து பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும், அவரது கட்சித் தொண்டர்கள் அவரைவிட்டு விலகி, கருணா‌நி‌தி‌யின் தலைமையைத் தேடி வந்து கொண்டிருக்கும் நிலையைக்கண்டு பொறுக்க முடியாமல், தினந்தோறும் ஏதாவதொரு அறிக்கையை வெளியிடுவதற்குப் பொருள் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் அறிக்கை அம்புகள் காகிதக் கோடரிகள். அவை கலைஞர் எனும் கற்கோட்டையை கடுகளவுகூட பாதிக்காது. காலமும் ஞாலமும், கலைஞரை வாழ்த்தும். 







பரிதி இளம்வழுதி இன்று.....

கருணாநிதி கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததால், தி.மு.க., என்பது, குடும்ப உறுப்பினர்களின் விளையாட்டு மைதானமாகி விட்டது. இதனால், மனவலிக்கு ஆளாகியவர்களில் நானும் ஒருவன். இவ்வளவு நாள் நாங்கள் எதிர்த்து வந்த, அ.தி.மு.க., வில் மட்டும், இன்று வலுவாக ஒரே தலைமை இருப்பது காண முடிகிறது. ஜெயலலிதா ஒருவரே இன்றைய இந்தியாவில், ஒரு கம்பீரமான தலைவராக இருக்கிறார். இந்த நிலைமையில் அந்த தலைமையை ஏற்றுக் கொள்வதே என் மனக் காயங்களுக்கு, மருந்தளிக்கும் என, நான் கருதியதால், ஜெயலலிதாவை சந்தித்து, என்னை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டேன்.

ஜெயலலிதாவை மிக கடுமையாக விமர்சித்ததில் நானும் ஒருவன். ஆனால், கருணாநிதியின் கபட வேடத்தை முழுமையாக புரிந்து கொண்ட பின், ஜெயலலிதா எவ்வளவோ உயர்வானவர் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னை விட, கடுமையாக அவரை விமர்சித்த பலரையும், அவர் மன்னித்து ஏற்று, அவர்களுக்கு அரசியல் ஏற்றம் தந்ததையும் பார்த்திருக்கிறேன். ஒரு சிறு குற்ற உணர்ச்சியுடன் தான், அவரை சந்திக்க சென்றேன். ஆனால், அவர் என்னிடம் காட்டிய பரிவு, என்னை நெகிழச் செய்து விட்டது. கருணாநிதிக்காக, தி.மு.க., வுக்காக பல மேடைகளில், அ.தி.மு.க., வுக்கு எதிராக பேசினேன்; இனிமேல், அதற்காக பிரயாச்சித்தம் தேடப் போகிறேன்.

=============================



Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. இவருக்கு என்ன டீலிங் போசினார்களோ

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா29 ஜூன், 2013, 3:27:00 PM

    ///ஜெயலலிதா கொடநாடு செல்லும் அவசரத்தில் இருந்தபோது பரிதி அவரை சந்தித்து அண்ணா.தி.மு.க.,வில் இணைந்ததால் ஜெ., அவருக்கான பரிசை அறிவிக்காமலேயே சென்றுவிட்டார்.///
    இன்று கொடநாட்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமியும், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும் இன்று முதல் நியமிக்கப்பட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பெயரில் பரிதி இருப்பதால் போலும்,'பரி' வு காட்டியிருக்கிறார்!!!

    பதிலளிநீக்கு
  4. பாவம்பா அவரு! விட்டுத்தொலையுங்க! இதெல்லாம் காலகாலமா நடந்துட்டுதானே இருக்கு!

    பதிலளிநீக்கு
  5. பரிதி...
    அய்யா திமுகவிலிருந்து அம்மா திமுகாவுக்குத்தானே போயிருக்கார்...
    கோடிகள் கிடைக்கும் போது காலில் விழுவது தப்பேயில்லைன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டார்....
    விடுங்க இதெல்லாம் சகஜம்தானே...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.