என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜூலை 17, 2013

25 பரிதி இளம்வழுதிக்கு சில கேள்விகள்....



கலைஞர் மஞ்சள் துண்டு மாமுனியாம், தள்ளுவண்டி தாத்தாவாம்
ஸ்டாலின் கோன வாயனாம்- சொன்னவர் பரிதி இளம்வழுதி.
போன மாசம்வரை அந்தக்கட்சியில் இருந்து விட்டு, இப்போது திடீர்
ஞானோதயம் வந்தது போல் பேசுவது நல்லாவா இருக்கு மிஸ்டர் காந்தி. ஆம் காந்திதான் உம் இயற்பெயர். உமக்கு பரிதி என்று பேர்
வைத்தவரே தள்ளுவண்டி தாத்தா, மஞ்சள் துண்டு மாமுனி என்று இப்போது நீர் பேர்வைத்திருக்கும் கலைஞர்தான். கலைஞர்தான் வேண்டாமே அப்புறம் எதுக்கு அவர் வைத்த பெயர் மட்டும் என்று புரியவில்லை.

கலைஞர் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மஞ்சள் துண்டை அணிந்திருக்கிறார். நீங்களும் அப்போதெல்லாம் அந்த கட்சியில்தான் இருந்தீர்கள். என்னவோ முந்தாநாள்தான் மஞ்சள் துண்டு போட்டது போல் பேசும் நீங்கள் கடந்த காலத்தில் என்றாவது இதை பற்றி வாய் திறந்ததுண்டா?.....



கலைஞர் கடந்த பத்து வருடங்களாக தள்ளுவண்டியில்தான் இருக்கிறார். அப்போதெல்லாம் நீங்கள் இதை பற்றி வாய்திறந்ததுண்டா? என்னவோ நேற்றுத்தான் தள்ளுவண்டியில் அமர்ந்ததுபோல் பேசுகிறீர்களே?

நேற்றுவரை தலைவராக தெரிந்தவர் இன்று தாத்தாவாக தெரிகிறார். நேற்றுவரை ஏதோவாக தெரிந்தவர் இன்று அம்மாவாக தெரியும்போது தலைவராக தெரிந்தவர் தாத்தாவாக தெரிவதில் வியப்பேதும் இல்லை.

நீங்கள் மானஸ்தனாக இருந்தால் உங்களை துணை சபாநாயகராக்கியபோதே இதையெல்லாம் சொல்லியிருக்கலாம். அல்லது துணை பொதுச்செயலாளராக்கியபோதாவது இதை சொல்லியிருக்கலாம். அல்லது கடந்த முறை மந்திரியாக்கியபோதாவது இதை சொல்லியிருக்கலாம். சரி அதையெல்லாம் விடுங்க.....கடந்த சில மாதங்களுக்கு முன் கலைஞர் பிறந்தநாளில் அவரை சந்தித்தீர்களே அப்போதாவது சொல்லி தொலைத்திருந்தால் உங்களை மானஸ்தன் என்று ஒத்துக்கொண்டிருக்கலாம். ஏன்னா அந்த பிறந்த நாளின்போதும் அவர் மஞ்சள் துண்டு போட்டு தள்ளுவண்டியில்தான் அமர்ந்திருந்தார்.கம்பீரமாக நடந்து திரியவில்லை.



ஸ்டாலினுக்கு கோனவாயாம்.....அவருக்கு இப்போத்தான் வாய் அப்படி இருக்காண்ணே...கடந்த 35 வருடங்களுக்கு முன்பு எமர்ஜென்சியில் பூட்ஸ் காலால் அவர் முகத்தில் மிதிக்கப்பட்ட போது ஏற்பட்ட பாதிப்புதான் அது.


1984-ஆம் ஆண்டு உங்கள்  அப்பா இளம்பரிதி, தனக்கு பெரம்பூர் தொகுதியில் சீட் கேட்டு கலைஞருக்குஎழுதிய  ஒரு கடிதத்தை உங்கள் மூலமாக கொடுத்தனுப்பினார். கடிதத்தை நீங்கள் கலைஞரிடம் கொடுத்தபோது அருகில் ஸ்டாலின் இருந்தார் இப்போது நீங்கள் கிண்டல் செய்யும் அதே கோண வாயோடு, அப்போதாவது இதை சொல்லியிருக்கலாம்.கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு கிழித்துப் போட்ட கலைஞர், சீட் உங்கப்பாவுக்கு இல்லை. நீதான் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் என்று உங்களுக்கு கொடுத்தார்.

காந்தி என்ற உங்கள் இயற்பெயரை பரிதி என்று மாற்றி உங்கப்பா பேரையும் பரிதியுடன் இணைத்து காந்தி, பரிதி இளம்வழுதியாகி பெரம்பூரில் தேர்தலில் நின்றபோதும் அவருக்கு கோன வாய்தான்.அப்போதாவது இதை சொல்லியிருக்கலாம். மாற்றிக்கட்டக்கூட வேஷ்டியில்லாமல் ஏழ்மையில் இருந்த உங்களுக்கு ஐந்து செட் வேஷ்டி எடுத்துக்கொடுத்ததே இதே ஸ்டாலின்தான்.அப்போதாவது அவருக்கு கோனவாய் என்று சொல்லியிருக்கலாம் நீங்கள்.

அதே 1984 தேர்தலில்தான் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக ஆயிரம்விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு கே.ஏ.கே.விடம் தோல்வியடைந்திருந்தார். பொதுத்தேர்தல் நேரத்தில் சுயேச்சை வேட்பாளர் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்ட பெரம்பூர் தொகுதிக் குப் பின்னர் இடைத்தேர்தல் நடந்தது. தன் தோல்வியை மறந்து பெரம்பூரில் உங்களை ஜெயிக்க வைக்க பாடுபட்டார். நீங்கள் ஜெயித்ததும் சட்டமன்றத்திற்குத் தன்னுடைய காரில் அமர வைத்து ஸ்டாலினே ஓட்டிக்கொண்டு போனார். கோட்டை வாசலில் நீங்கள்  இறங்கியதும், ஸ்டாலின் காலைத் தொட்டுக் கும்பிட்டு, “இந்த எம்.எல்.ஏ. பதவி என்னோட சொந்த சொத்தா இருந்தா உங்களுக்கு எழுதிக் கொடுத்திருப்பேன். அப்படித் தர முடியாத பதவியா இது இருக்கே...’’என்று நெகிழ்ந்துபோய் கண் கலங்கினீர்களே அப்போதாவது இதை சொல்லியிருக்கலாம்.

அப்போதெல்லாம் இதை  சொல்லியிருந்தால் இந்நேரம் பரிதி என்ற பேர் இல்லாமல் வெறும் காந்தியாக எங்கோ ஒரு மூலையில் ஏதாவது தொழில் செய்து கொண்டிருப்பீர்கள். பரிதி என்ற பிரபலமாய் பல கோடிரூபாய் அதிபதியாய் இப்படி பேசிக்கொண்டிருக்க மாட்டீர்கள். நன்றியை மறப்பதும் அதை இன்றே மறப்பதும் நன்றல்ல பரிதி.




Post Comment

இதையும் படிக்கலாமே:


25 கருத்துகள்:

  1. பரிதி தன் தகுதியை தன் வாயால் தானே கெடுத்துக்கொண்டார்....

    இனி இவர் வொர்த்லெஸ் பீஸ்.... இவரை பற்றி பேசுவதே வேஸ்ட்... அம்மாவிற்கு மற்றொரு அடிமை சிக்கிடுச்சு...

    பதிலளிநீக்கு
  2. கருணாநிதியைப் பார்த்துக் கூட இப்படி ஆயிரம் கேள்விகள் கேட்கமுடியும். அரசியலில் நேர்மையாக இருக்கும் ஒருவர் பெயரையாவது கூறமுடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அரசியலில் யாருமே நேர்மையானவங்க கிடையாது பிரதர்... ஆனால் நேர்மை வேறு விசுவாசம் வேறு. இவர் விசுவாசத்தைப் பற்றிதான் பேசுகிறார். தான் கொண்ட தலைமை மீது விசுவாசம் இல்லாத ஒருவர் நேர்மை என்கிற வரையறைக்குள் வரவே மாட்டான்,,,,

      நீக்கு
  3. பலருக்குத் தெரியாத உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உதைத்த இந்திரா கட்சியின் காலை இன்னமும் முத்தமிட்டுகொண்டு இருக்கிறார்கள் அப்பனும் மகனும்.ஒரு கன்னத்தில் அறை விழுந்தால் இன்னொரு கன்னத்தை காட்டும் உண்மையான இயேசுவின் சீடர் கருணா .

    பதிலளிநீக்கு
  5. உதைத்த இந்திரா கட்சியின் காலை இன்னமும் முத்தமிட்டுகொண்டு இருக்கிறார்கள் அப்பனும் மகனும்.ஒரு கன்னத்தில் அறை விழுந்தால் இன்னொரு கன்னத்தை காட்டும் உண்மையான இயேசுவின் சீடர் கருணா .

    பதிலளிநீக்கு
  6. செத்த கிளிக்கு ஜாதகம் பார்ப்பது வேஸ்ட்...

    பதிலளிநீக்கு
  7. விடுங்க. தான் செய்தது எவ்வளவு முட்டாள்தனம்ங்குறதை விரைவில் புரிஞ்சுப்பார்

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு நண்பரே....
    பரிதி என்று தூக்கிவிசப்படுவார் என்று தெரியாத நிலையில் நன்றி மறந்து பேசுகிறார்..

    பதிலளிநீக்கு
  9. "நுணலும் தன வாயால் கெடும்" என்பது முது மொழி!அண்ணன்,'அம்மா' சைட்டுல போய் பேசுறத,என்னிக்கோ ஒரு நாள் இன்னொரு சைட்டு போயி பேசுவார் என்கிறத "அம்மா"வுக்குப் புரிய வச்சுட்டார்!

    பதிலளிநீக்கு
  10. வளர்த்த கடா மார்பில் பாய்வது திமுகவில் ஒன்றும் புதிதல்ல... ராசா,பரிதி போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள் எல்லோருமே கோபாலபுரத்து செல்லப் பிள்ளைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். இவர் கட்சி நடவடிக்கை பிடிக்காமலா அதிமுக விற்குப் போனார்...? கடந்த ஆட்சியில் இவர் அளவுக்கு சம்பாதித்த அமைச்சர் யார்..? இங்கே தன்மாணன் இல்லையாம். திமுகவில் இல்லாத தன்மானம் அவருக்கு அதிமுகவிலா கிடைக்கப் போகிறது...?

    பதிலளிநீக்கு
  11. அண்ணே.. கேள்விக்கு பதில் கிடைக்காது... தரையை தொட்டு கும்பிட ஆரம்பிச்சவரு இன்னனும் எந்திரிக்கல....

    பதிலளிநீக்கு
  12. Ini avanukku pathil solli periya manushanakka koodathi

    பதிலளிநீக்கு
  13. Ini avanukku pathil solli periya manushanakka koodathi

    பதிலளிநீக்கு
  14. இந்த டுமாங்குலி அங்க இன்னும் எவ்ள நாள் இருக்குனு பாக்குறேன்.

    பதிலளிநீக்கு
  15. அம்மா வீட்டு வாசப்படியை மிதிச்சதுமே அவருக்கு சூடு சொரணை எல்லாம் காணாம போயிருச்சு! இதெல்லாம் உரைக்காது! இனி திருவடி சரணம்தான் கேட்கும்!

    பதிலளிநீக்கு
  16. அரசியலில் நன்றி மறப்பது சகஜம் என்றாலும் பரிதி இந்தளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கக்கூடாது, சாட்டையடியாக உங்களின் வார்த்தகள் என்னுடைய ஆதங்கத்தை ஆற்றியது என்றால் அது மிகையல்ல

    பதிலளிநீக்கு
  17. மணிமாறன்...இங்கே காப்பி செய்யமுடியவில்லை....நேர்மை..விசுவாசம் இரண்டும் வேறு வேறு என்று எனக்கும் தெரியும்.

    ஆனால்....தான் விசுவாசமாக இருந்த ஒரு தலைவர் தன்னை நேர்மையாக நடத்தவில்லையென்றால் அந்த தலைவரின் பரம்பரையின் மீதே சந்தேகம் கொள்வார்.தான் வாழ்நாள் முழுதும் விசுவாசமாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஈடான சன்மானம் கிடைக்கவேண்டும். சும்மா விசுவாசமாக இருக்க இது ஒன்றும் அடிமை காலம் கிடையாது.

    மேலும் கருணாநிதி என்ற நபரிடம் விசுவாசமாக இருக்க அந்தக் கட்சியில் யாரும் இல்லை. பதவியும்..வாய்ப்பும் இல்லாவிட்டால் போய்யா என்று போய்விடுவார்கள்.
    வைகோவைப் போல் அனைவரும் கட்டுப்பாடாக பேசுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. அதிலும் கருணாநிதி போன்ற நாலாந்தர அரசியல் வாதிகளைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசுவார்கள்.அதில் குறை ஒன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இந்தப் பதிவு கலைஞர் நேர்மையானவரா நல்லவரா என்பதைப் பற்றி அல்ல... வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததைப் பற்றிய விமர்சனம்.

      ராவணன் எல்லோரையும் தராசின் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது..வைகோ விலகிய சூழலும் பருதி விலகிய சூழலும் ஒன்றா..? ஒரு விதத்தில் வைகோவை தன்மானம் உள்ளவர் என ஒத்துக் கொள்வேன். ஆனால் பருதி எதற்காக கட்சியை விட்டு விலகவேண்டும்.

      சரி தலைமையுடன் உரசல் இருந்தால் என்ன செய்திருக்கணும்..? கட்சியை விட்டு விலகி இருந்திருக்கலாம்.அல்லது தனிகட்சி கண்டிருக்கலாம். அல்லது கட்சியில் இருந்துக்கொண்டே தலைமையை விமர்சித்திருக்கலாம்.இது தானே தன்மானத்திற்கு அழகு. அதைவிட்டுவிட்டு எதிர்கூடாரத்திற்கு சென்று வளர்த்துவிட்ட தலைவரையே ஏளனம் செய்வது பொட்டைத்தனம் அல்லவா..?

      பரிதி தானும் ஒரு சராசரி அரசியல்வாதி என்பதை நிருபித்திருக்கிறார். வேண்டுமானால் அவரை கடந்த ஆட்சியில் எந்த ஊழல் பண்ணவில்லை. வருமானத்திற்கு அதிகமாக ஒத்த பைசா சம்பாதிக்கவில்லை என சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்.கரை படிந்த கரங்களோடு தானே அந்தக் கட்சியில் சேர்ந்தார். வாங்கிய காசுக்கு இப்போ சொம்படிக்கிறார்.

      நீக்கு

    2. //மேலும் கருணாநிதி என்ற நபரிடம் விசுவாசமாக இருக்க அந்தக் கட்சியில் யாரும் இல்லை.//

      யாருங்க இல்ல..? இந்த ஓடுகாலி போய் விட்டால் கட்சியில் யாருமே இல்லை என்று அர்த்தமா..? இதுவரை எத்தனை முன்னாள் அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்கள் என சொல்லமுடியுமா...? ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும் . அது தொண்டர்களின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். ஆட்சியை இழந்து அடுத்த சில மாதங்களில் தலைமை விடுத்த சிறை நிரப்பு போராட்டத்தில் எவ்வளவு பேர் கைதானார்கள் என்பதை அறிவீர்களா...? தலைவர் சொன்னார் என்கிற ஒரே காரணத்திற்காக எத்தனை நாள் சிறைவாசம் என்பதுகூட தெரியாமல் கைதானார்களே.. அது போன்ற தொண்டர்கள் எந்தக்கட்சியில் தற்போது இருக்கிறார்கள்...?

      நீக்கு
  18. தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

    Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  19. அன்பின் கஸாலி - வலைச்சரம் மூலமாக வந்தேன் - இதெல்லாம் அரசியல்ல சகஜம் - ஒன்றும் சொல்ல இயலாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.