என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 26, 2013

9 இணையதள விமர்சகர்கள் என்றால் கேவலமா?




கோடி கோடியாய் கொட்டி படமெடுக்கிறார்கள்....இவர்கள் என்னவோ 100 ரூபாயை கொடுத்து படம் பார்த்து விட்டு இது சரியில்லை, அது சரியில்லை என்று ஃபேஸ்புக்கிலும், ட்வீட்டரிலும், ப்ளாக்கிலும் அசால்டாக சொல்லி அத்தனை பேர் உழைப்பையும் கொச்சைப்படுத்தி விடுகிறார்கள் இந்த இணையதள எழுத்தாளர்கள். ஒரு போன் அல்லது கம்யூட்டரும் இணைய இணைப்பும் இருந்தால் போதும் எதை வேண்டுமானாலும் விமர்சித்து விடுகிறார்கள் என்று ஒரு குற்றாச்சாட்டு வைக்கிறார்கள் சிலர். அதையும் அவர்கள் இணையத்தின் மூலமே வைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். 

அவர்கள் கோடி கோடியாய் கொட்டி படமெடுத்தாலும் பார்க்கப்போவது என்னவோ ரசிகனே, எந்த நடிகரும், தயாரிப்பாளரும் அவர்களுக்கு மட்டுமே படமெடுத்து அவர்கள் மட்டுமே பார்ப்பதில்லை. ..
தயாரிப்பாளர்களுக்கு கோடி பெருசென்றால், ஒவ்வொரு பார்வையாளனும் கொடுக்கும் 100 ரூபாயும் பார்வையாளனை பொறுத்தவரையில் பெருசுதான்.

ஒரு ஹோட்டலில் பிரியாணி என்று போர்டு வைத்து விட்டு, உள்ளே போனால், 100 ரூபாயை வசூலித்துவிட்டு பாடாவதி சாப்பாட்டை போட்டால் சாப்பிடுவாங்களா? குடும்பத்தோடு 1000 ரூபாய் சிலவு செய்து ஹோட்டலுக்கு போய் நல்ல சாப்பாடு போடலைன்னா, வாயை மூடிக்கிட்டு வருவீங்களா? பாவம் சமையல்காரனின் உழைப்பு இருக்கு, சர்வரின் உழைப்பு இருக்குன்னு சொல்லிட்டு கேள்வி கேட்காமல் வந்துவிடுவீர்களா? ஏன்னா, அங்கேயும் பல்லாயிரக்கணக்கில் சிலவு செய்துதான் சமையல் செய்கிறார்கள். கல்யாணத்தில் போடும் ஓசி சாப்பாட்டையே உப்பில்லை உரப்பில்லை என்று நம்ம குறை சொல்வோம்.  இந்த லட்சணத்தில் காசு கொடுத்து சாப்பிட்டால்?

ஒரு சமையல் செய்ய எத்தனை பேரு உழைப்பு இருக்குன்னு தெரியுமா? காய்கறி வெட்டுவதிலிருந்து, அரிசி போடுவதை வரை அங்கேயும் அத்தனை பேரு உழைப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், நல்லாயில்லேன்னா கேள்வி கேட்கத்தான் செய்வீர்கள். அதுவும் அங்கேயே கேள்வி கேட்பீர்கள். ஹோட்டலிலாவது சர்வரை, சமையல்காரரை, ஹோட்டல் முதலாளியை பார்த்து நேரடியாக கேட்டுவிடலாம். ஆனால், சினிமாவிலோ யாரை கேள்விகேட்பது?

தியேட்டர் ஓனரையோ, வினியோகஸ்தரையோ, நடிகரையோ, தயாரிப்பாளரையோ, இயக்குநரையோ கேள்வி கேட்க முடியுமா? ஆப்பரேட்டரை கூட நேரில் பார்க்க முடியாது. அப்படின்னா குறைகளை சொல்ல வழி.....இணையம்தான்.

சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் உழைப்பு இருக்கிறதா? அவர்கள் மட்டும்தான் காசை கொட்டுகிறார்களா? எதில் தான் இல்லை உழைப்பு? பார்க்கும் ரசிகனுக்கும்தான் உழைப்பு இருக்கிறது. டிக்கெட்டுக்கு சிலவு செய்யும் 100 ரூபாயை அவன் மட்டும் திருடிட்டு வரல....உழைத்துதான் சம்பாதித்து வருகிறான். அவனின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இருந்தால் வாழ்த்துவான். இல்லாவிட்டால் திட்டத்தான் செய்வான். 




Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. (அரசியலிலே) இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா...!

    பதிலளிநீக்கு
  2. இதே இணையதள வாசகர்கள் படம் சூப்பர் என்று பாராட்டினால் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா26 நவ., 2013, 11:23:00 AM

    ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் கண்டுகொள்ளாமல் போக வேண்டியதுதானே? வெற்றி பெற்றால் மட்டும் இணைய நண்பர்களுக்கு நன்றி என வணங்கும் இவர்களின் படங்கள் கவிழ்ந்தால் மட்டும் திட்டித்தீர்க்கிறார்கள். இனி என்னதான் அவர்கள் கோபமடைந்தாலும் இணைய சுதந்திரத்தை தடுக்க இயலாது.

    பதிலளிநீக்கு
  4. இணைய எழுத்தாளர்களால் திரைப் படங்களின் விமர்சன விதிகளே ஆடிப்போய்விட்டன என்பதால்தான் சிலருக்கு இத்தனை கோபம் வருகிறது. கழுவி ஊற்ற வேண்டிய படங்களை தீபாரதனை காட்டியா வரவேற்க முடியும்?படம் பார்க்கிறவனுக்கு மட்டும் பணம் என்ன அவன் வீட்டு தோட்டத்திலா விளைகிறது? நல்ல பதிவு நண்பரே.

    பதிலளிநீக்கு
  5. சினிமா என்பது பொது விஷயம்... ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப மாறுபடும்... ஆனால் எல்லா தரப்பு மக்களுக்குமே பிடிக்காத வகையில் படம் எடுத்தால் கழுவி ஊற்றுவார்கள்... அதை தவறு என்று சொல்ல முடியாது...

    பதிலளிநீக்கு
  6. விமர்சனங்கள் எல்லா விதத்திலும் இருப்பது இணைய விமர்சகளால் மட்டுமே...

    பதிலளிநீக்கு
  7. இது என்ன இத்துவம் ன்னு சொல்லலியே.. ;-)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.