என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், நவம்பர் 19, 2013

3 வில்லா.....இல்லை....நல்லா.....



சிம்பிளான கதையை அருமையான திரைக்கதை மூலமும், அசத்தலான காட்சியமைப்பின் மூலமும் திகிலூட்டிய பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான வில்லாவில் பில்லி சூன்யம் மற்றும் புரியாத மாந்த்ரீக சொற்களை வைத்து நிரப்பி கதையை சொல்லி நம்மை கடுப்பேற்றியிருக்கிறார்கள். மற்றபடி அந்த பீட்சாவிற்கும் இந்த பீட்சா இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தயாரிப்பாளர் ஒருவரே என்ற ஒற்றுமையை தவிர...

கதையை எல்லோரும் அலசி காயப்போட்டுவிட்டதால் என் கருத்தை மட்டும் பார்க்கலாம்.

பீட்சா நமக்கு உணர்த்திய பாடத்தின் மூலம் இந்தப்படத்திலும் க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் ஏதும் இருக்குமோ என்று எதிர்பார்த்து உட்கார்ந்தால் இதிலும் ட்விஸ்ட் இருக்கத்தான் செய்கிறது, ஆனாலும் சத்தியமாக இந்த ட்விஸ்டை நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனாலும் பரவாயில்லை என்று சொல்ல தோன்றுகிறது இந்த ட்விஸ்ட்.

ஒரு பாழடைந்த பங்களாவில் அதாங்க வில்லாவில் ஹீரோவும், ஹீரோயினும் நுழையும்போதே பார்வையாளர்களுக்கு பயமும் நுழைந்துவிட வேண்டும். அதுதான் ஒரு திகில் படத்தின் வெற்றியும்கூட....ஆனால், இங்கே கதாநாயகன் கதாநாயகி என்று யாரும் பயப்படவில்லை, நாமும்தான். ஒரு டப்பா திகில் படமாக இருந்தாலும் பின்னணி இசைதான் பயமுறுத்தும் முக்கிய காரணம். ஆனால் இந்தப்படத்திலோ பின்னணி இசையெல்லாம் பெரிதாய் இல்லை. அப்புறம் எங்கே பயப்படுவதாம்?.

பீட்சா படத்தில் பார்வையாளர்களை ரொம்ப பயமுறுத்திட்டோம் என்று நினைத்தோ என்னவோ இந்த வில்லாவில் அதற்கு பரிகாரமாய் கிச்சு முச்சு மூட்டியிருக்கிறார் தயாரிப்பாளர். மற்றபடி வில்லா இல்லை நல்லா.

டிஸ்கி: பீட்சாவைவிட சூப்பரான விருந்து வைக்கிறேன் என்று பார்வையாளனை தியேட்டருக்கு அழைத்து சுமாரான ஒரு விருந்தையே படைத்திருக்கிறார்கள். வெறும் வில்லா என்று மட்டும் தலைப்பு வைத்திருந்தால் அதீத எதிர்பார்ப்பும் இருந்திருக்காது. ஆனால் பீட்சா-2 என்று விளம்பரப்படுத்தியதால் வந்த வினை இது. எல்லோரும் பீட்சாவைவிட சூப்பரான கதையை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.



Post Comment

இதையும் படிக்கலாமே:


3 கருத்துகள்:

  1. பார்க்கலாம் என்றுதான் விமர்சனங்கள் வருகின்றன...
    உங்கள் விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் எண்ண ஓட்டம்தாம் எல்லோருக்கும். Btw ... உங்களையும் விமர்சனம் எழுத வச்சிடாங்களே :-)

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.