என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, டிசம்பர் 12, 2014

2 ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது..........



பாலச்சந்தர் என்ற ஒருவர் இல்லாவிட்டால் ரஜினி என்ற ஒருவர் இல்லைதான். ஆனாலும், பாலச்சந்தர் அறிமுகம் செய்த எல்லோருமே ரஜினி அளவு வளர்ந்துவிட்டார்களா என்று பார்த்தால் அதற்கும் பதில் இல்லைதான்.
நான் ஏன் பாலச்சந்தர் இல்லையென்றால் ரஜினி இல்லை என்று குறிப்பிட்டேன் என்றால்....


முதல் இரு படங்களில் ரஜினிக்கு நடிப்பே வரவில்லை என்பது உண்மைதான். அத்துடன் ரஜினியை தமிழகத்தில் தயாரிப்பாளர் உட்பட யாருமே ஏத்துக்கல. ஆள் கருப்பாக இருக்கிறார், பரட்டையான முடி, தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்று ரஜினி காதுபடவே விமர்சனம் வைத்தார்கள்.  மூன்று முடிச்சு படத்தோடு சினிமாவிலிருந்தே மூட்டை கட்ட நினைத்த ரஜினியை தொடர்ந்து வாய்ப்பு வழங்கி நடிக்க வைத்தவர் பாலச்சந்தர்தான். இதை ரஜினியே ஒரு பேட்டியில் சொல்லிருக்கார். 


அதன்பின் அவர்கள் படத்திலும் ”உனக்கு நடிப்பு வராது, உன்னால் நான் தலையைப் பிச்சுக்கணும். இன்ஸ்டிட்யூட்ல நீ என்ன படிச்சி கிழிச்சியோ! ‘மூன்று முடிச்சு’படத்துல வசனம் கம்மி. சிகரெட்டை தூக்கிப் போடறது, அதைப் போடறதுன்னு ஸ்டைலா போயிருச்சு. ஆனா இது வசனம் நிறைய இருக்கிற கேரக்டர். ‘இவனுக்காக நான் கேரக்டரை மாத்த முடியாது. இவனை மாத்திட்டு ஜெய்கணேசை கொண்டு வாங்க’ன்னு ரஜினியை திட்டிவிட்டு கோபத்துடன் சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பிட்டாராம் இயக்குனர் பாலச்சந்தர். பின்னர் ரஜினி அவரை சமாதானப்படுத்திதொடர்ந்து  நடித்தாராம். இதுவும் ரஜினி சொன்னதுதான். அப்படி ஆரம்பகாலத்தில் பாலச்சந்தர் மட்டும் ரஜினியை காக்காவிட்டால் இந்நேரம் சினிமாவிலிருந்தே கூட ரஜினி விலகியிருக்கலாம். அதனால்தான் இந்த பதிவின் ஆரம்பத்தில் பாலச்சந்தர் இல்லாவிட்டால் ரஜினி இல்லை என்று குறிப்பிட்டேன். தொடர்ந்து ராத்திரி, பகல் என்று ஓய்வில்லாமல் நடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான ரஜினி மீது அப்போது சில சர்ச்சைகள் உண்டு. நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்பின்போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தும் பாகச்சந்தர் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து தாங்கிப்பிடித்தார். 




ரஜினியின் ஆரம்ப கால படங்களான அவர்கள், மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, பைரவி, அவள் அப்படித்தான். ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், 16-வயதினிலே போன்ற படங்களில் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார். அவரை ஸ்டைல், ஆக்சன் என்று பக்கா கமெர்சியல் மசாலாவின் பக்கம் மடை மாற்றியது எஸ்.பி.முத்துராமன்தான், முரட்டுக்காளை மூலம். ரஜினியின் பிரபலத்தை பின்னால் வந்த இயக்குநர்கள் பயன்படுத்திக்கொண்டாலும் ரஜினியை வளர்த்தவர் பாலச்சந்தர் என்றால் ரஜியை வார்த்தவர் எஸ்.பி.முத்துராமன்.


அறிமுகப்படுத்திய பாலச்சந்தரைவிட, ரஜினியை வைத்து அதிகப்படம் இயக்கியதும் எஸ்.பி.எம். தான். கமர்சியல் மசாலாவின் பக்கம் தன் பார்வையை திருப்பியதும் ஒரு வகையில் நல்லதாக ஆகிவிட்டது ரஜினிக்கு. ஒருவேளை, நான் மேலே சொன்ன படங்களில் போல் வெறும் நடிப்பை மட்டுமே வழங்கியிருந்தால் சிவாஜி, கமல் என்ற இரு இமயங்களின் நடுவில் சிக்கி இந்நேரம் ரஜினி காணாமல் போயிருக்கலாம். அல்லது, தந்தை வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார். ஆனால், தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டதால் ஏறக்குறைய 30 வருடங்களை கடந்தும் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறார் என்றார் அதற்கு காரணம், ரஜினியின் உழைப்பு. 

தனது சினிமா வரும்போது மட்டும் அரசியல் பேசுவது, திரை வசனங்கள் மூலம் ரசிகர்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்திருப்பது என்று பொதுவாக எனக்கு ரஜினியை பிடிக்காமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், சில பல விஷயங்களில் அவர் மீது நான் விமர்சனங்கள் வைத்தாலும் அதையும் தாண்டி, தமிழகத்திலும், தமிழ் சினிமாவிலும் ரஜினியின் தாக்கம் மிகப்பெரியது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

  1. மிக நேர்மையான விமர்சனம், ரஜினியைப் பற்றி.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே,

    பாலச்சந்தர் ரஜினி கமல் என்ற இரண்டு நடிகர்களுக்கும் தொடர்ந்து ஆரம்பத்தில் சந்தர்ப்பம் கொடுத்ததால்தான் அவர்களால் வளர முடிந்தது. பாலச்சந்தர் இவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் இவர்களைக் காப்பாற்றியது என்று கூட சொல்லலாம். இந்த அளவுக்கு எந்த இயக்குனரும் புதுமுக நடிகர்களுக்கு எதோ கடன் பட்டது போல உதவி செய்யமாட்டார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரிதான்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.