பெங்களூர் ஏ.டி.எம்.,மில் ஒரு பெண்ணை அரிவாளால் வெட்டி அவர் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு போகும் வீடியோவை பார்த்தேன். மனம் பதைபதைக்கிறது. சாதரணமாக நுழைந்து, வெட்டிவிட்டு பின்னர் எந்தவித பதட்டமோ பரபரப்போ இல்லாமல் கொள்ளையன் வெளியேறுவதைப் பார்த்தால், இதையே தொழிலாக வைத்திருப்பான் போல என்றுதான் சொல்லத்தூண்டுகிறது. மக்கள் வந்துபோகும் இடத்திலேயே இப்படி அசால்டாக குற்றங்களை அரங்கேற்றுகிறார்கள் என்றால், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தால் நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த மாதிரி கொடூரமான ஆசாமிகளை பிடித்து கடுமையான தண்டனையை கொடுத்தால்தான் மற்றவர்களுக்கும் ஒரு பயம் வரும். அதுவும் பொது இடங்களில் தான் அந்த தண்டனையையும் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் இவர்களெல்லாம் மனுஷனே கிடையாது.
இன்னொரு விஷயம்.....ஏ.டி.எம்.மில் இருக்கும் கேமராவை இணையம் மூலம் இணைத்து அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனிலோ, போலீஸ் பூத்திலோ ஒரு மானிட்டர் வைத்து ஏன் கண்கானிக்கக்கூடாது? ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இருக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதியின் பேரைக்குறிப்பிட்டு வைத்தால் கண்கானிக்கும் காவலர்களுக்கும் எந்த ஏரியாவில் எந்த ஏ.டி.எம்.மில் இப்போது என்ன நடக்கிறது என்று தெரியும் அல்லவா.......
Tweet |
பிரச்சனையையும் கூறி அதற்கான ஒரு தீர்வையும் சொன்ன கஸாலிக்கு என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநல்ல யோசனை.செயல்படுத்தினால் பயன் கிடைக்கும்
பதிலளிநீக்குநல்ல யோசனை
பதிலளிநீக்குநல்ல ஐடியா. செஞ்சா நல்லா இருக்கும்.
பதிலளிநீக்கு//// இன்னொரு விஷயம்.....ஏ.டி.எம்.மில் இருக்கும் கேமராவை இணையம் மூலம் இணைத்து அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனிலோ, போலீஸ் பூத்திலோ ஒரு மானிட்டர் வைத்து ஏன் கண்கானிக்கக்கூடாது? ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்., இருக்கும் பட்சத்தில் அந்தந்த பகுதியின் பேரைக்குறிப்பிட்டு வைத்தால் கண்கானிக்கும் காவலர்களுக்கும் எந்த ஏரியாவில் எந்த ஏ.டி.எம்.மில் இப்போது என்ன நடக்கிறது என்று தெரியும் அல்லவா.......////
பதிலளிநீக்குSuper Idea Sakotharar Khazali
Syedabthayar
நல்ல யோசனைதான், செய்வார்களா?
பதிலளிநீக்குஏடிஎம்-ஐ ரூமிற்குள் வைக்காமல் ஓப்பனாக வைக்கலாம்...பல வெளிநாடுகளில் அது தான் வழக்கம்.
பதிலளிநீக்குநல்லயோசனை... செய்வார்களா?
பதிலளிநீக்கு