என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், நவம்பர் 14, 2013

4 ஜெயலலிதாவையும், விஜயதரணியையும் திட்டிய நேயர். பார்வையாளர்கள் அதிர்ச்சி....





பெண்கள் பொதுவாழ்க்கையில் இருப்பதே மிகப்பெரிய சவால். அப்படிப்பட்ட சவாலை எதிர்கொண்டு அரசியலில் வெற்றிநடை போடுவது சொற்ப பெண்களே.. அதில் டமிழக முதல்வர் ஜெயலலிதாவும், விளவங்கோடு எம்.எல்.ஏ, விஜயதரணியும் அடங்குவர். தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் திடீரென இடிக்கப்பட்டது தொடர்பாக சத்தியம் டி.வி.,யில் நேற்று நடந்த விவாதத்தில் தொலைபேசி மூலம் அழைத்த ஒருவர்ஜெயலலிதாவையும், விஜயதரணியையும் ஆபாசமாக பேசினார்.  நேரடி ஒளிபரப்பு என்பதால், அந்த பேச்சு அப்படியே ஒளிபரப்பானது. என்னதான் கோபமிருந்தாலும் அந்த ஆள் பல பேர் பார்க்கும் ஒரு நிகழ்சியில் ஆபாசமாக பேசியது தவறு. மிகவும் கண்டனத்துக்குரியது. 

ஜெயலலிதா மீதோ, விஜயதரணி மீதோ எல்லோருக்கும் மாற்றுக்கருத்து இருக்கத்தான் செய்யும். அந்த மாற்றுக்கருத்தும் அவர்களின் பதவிகள் சார்ந்துதான் இருக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது தனிப்பட்டு இருக்கக்கூடாது. அதேநேரம் அந்த மாற்றுக்கருத்தைக்கூட மிகவும் நாகரீகமான வார்த்தைகளில்தான் வைக்கவேண்டுமோ தவிர இப்படி நாலாந்தர வார்த்தைகளில் அல்ல.

உங்கள் அம்மா மீதோ, மனைவி மீதோ, மகள் மீதோ, சகோதரி மீதோ உங்களுக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை பிரயோகிக்க முடியுமா?


இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும்......அவர் அப்படி பேசியதால் அதிர்ச்சியான விஜயதரணி உடனே சத்தியம் டி.வி.,மீது பாய்ந்தார். நேரடி ஒளிபரப்பில் எதிர்பாராமல் ஒருவர் பேசியதற்கு சத்தியம் டி.வி.,என்ன செய்யமுடியும்? முன்பே அவர் அப்படி பேசுவார் என்று தெரிந்தால் இணைப்பை கொடுத்திருக்க மாட்டார்கள். அல்லது இந்நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாக இருந்திருந்தால் அவர் பேசியதை  மட்டும் எடிட் செய்துவிட்டு ஒளிபரப்பியிருக்கலாம். என்ன செய்வது...அதற்கு வழியில்லையே?






Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. வன்மையாகக் கண்டிக்க வேண்டிய விஷயம் கஸாலி..அந்தம்மா விஷய ஞானம் இல்லாமல்தான் எப்போதும் பேசும்,. அதற்காக இப்படி ஆபாசமாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. ஆபாசமாகப் பேசுவது அநாகரீகம்தான், ஆனால் இந்த விஜயதாரிணி என்ன பேசுறதுன்னு தெரியாம பேசுற அம்மா...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. யாராக இருந்தாலும், ஆபாசமாகப் பேசுவது தவறு. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஆபாசம் கலக்காமல் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கலாமே?
    ஆபாச சொற்களைப் பயன்படுத்துபவருக்கு மனநோய் சிகிச்சை தேவை.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.