இப்போதுதான் பாண்டிய நாடு பார்த்தேன். விஷால், சரத், லட்சுமி மேனன், சூரி, விக்ராந்த் என்று எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் அத்தனை பேரையும் தூக்கி சாப்பிட்டுவிடுமளவிற்கு நடிப்பில் கலக்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. இயல்பிலேயே நல்ல நடிகரை தன்னுள் புதைத்து வைத்திருப்பவர் பாரதிராஜா. தான் இயக்கும் படங்களில் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்காமல் அந்தந்த கதாபாத்திரமாக மாறி நடித்துக்காட்டி வேலை வாங்குபவர் அவர். அப்படிப்பட்டவர் ஒரு அற்புதமான தந்தையாகவே வாழ்ந்துள்ளார் பாண்டிய நாடு படத்தில்.
தன் மகனை கொன்றவன் யாரென்று தெரிந்தும் அவனை கொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பில் ஒரு வயதான அப்பாவின் மனநிலையை, இயலாமையை மிக இயல்பாக வெளிக்காட்டியிருக்கிறார் பாரதிராஜா. 1970-களின் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற துடிப்பில் அல்லி நகரத்திலிருந்து வந்தவருக்கு நீ....ண்ட காலத்திற்கு பின் அருமையான தீனி கிடைத்திருக்கிறது. இயக்குயதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது தன் சிஷ்யன் பாக்யராஜை போல் நடிக்கவும் செய்திருந்தால் இந்தியாவில் நடிப்பிற்காக கொடுக்கப்படும் அத்தனை விருதும் அவர் வீட்டு அலமாரியை அலங்கரித்திருக்கும் என்பது நிதர்சனம். ஆனால், தான் இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்திலும், தாவனிக்கனவுகள், ஆய்த எழுத்து, இரட்டைச்சுழி என்று ஒரு சில படங்களோடு திருப்திப்பட்டுக்கொண்டார். இப்போது ஒன்றும் கெட்டுப்போகவில்லை. தமிழ் சினிமாவுக்கு அருமையான அப்பா கிடைத்துவிட்டார். இனியாவது அவரை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் இயக்குநர்களே...
ஆய்த எழுத்தில் மணிரத்னம் வாங்காத நடிப்பை பாண்டிய நாட்டில் சுசீந்திரன் வாங்கியுள்ளார். வாழ்த்துக்கள் சுசீந்திரன். இயக்குநர் இமயத்தை இயல்பாய் காட்டியதற்காக.....
Tweet |
அப்படியா!?
பதிலளிநீக்குmmm...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு! பாரதிராஜாவிற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு