என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, அக்டோபர் 24, 2010

7 நடிகர் ரஜினிகாந்திடம் இயக்குனர் பாலச்சந்தர் எடுத்த பரபரப்பு பேட்டி

யக்குநர்கள் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர்கள்-இயக்குநர்கள் தங்களுக்கு பிடித்த மானவர்களிடம் பேட்டி எடுக்கும் வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இயக்குநர் பாலசந்தர், நடிகர் ரஜினிகாந்திடம் பேட்டி எடுத்தார்.

பெரிய நடிகரான நீங்கள் எதை இழந்ததாக உணருகிறீர்கள்?
சாதாரண மனி தர்களைப் போன்று ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை பறிகொடுத்து இருக்கிறேன். நிம்மதியை இழந்து இருக்கிறேன். சூழ்நிலை கைதியாக உள்ளேன். இவைகளை தியாகம் செய்து தான் புகழ் அடைந்து இருக்கிறேன்.

உங்கள் வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதுவீர்களா?
சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனது கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. இது எனக்கும் வரும் போதுஎழுதுவேன்.


உங்களை உயரத்தில் தூக்கி வைத்த சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஏதாவது செய்வேன்.


டைரக்டர் ஆவீர்களா?
படங்களை டைரக்டு செய்யும் ஐடியா இல்லை. அது எனக்குத் தெரியாது.


இதுவரை நடித்த படங்கள் எத்தனை?
154 படங்களில் நடித்துள்ளேன்.


வீரபாண்டிய கட்ட பொம்மன், எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உங்கள் படங்கள் எது என கருதுகிறீர்கள்?
ராகவேந்திரா, பாட்சா, எந்திரன்.


தேசிய விருது எப் போது வாங்குவீர்கள்?
அது டைரக்டர் கையில் இருக்கிறது.

நாடகங்கள் போட்டால் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன்.


மேஜர் சந்திர காந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போகிறேன். நடிப்பீர்களா?
நீங்கள் செய்தால் நானும் செய்கிறேன்.


சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் சிகரெட்டை தூக்கி போட்டு புகை பிடிப்பீர்கள். தற்போது அதை குறைத்து விட்டீர்களா?
சிகரெட் பிடிப்பதை இப்போது நிறைய குறைத்து விட்டேன்.


நான் இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது எவை?
2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒன்று “அவள் ஒரு தொடர்கதை, அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்று அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.


அரசியலில் பிடித்த தலைவர் யார்?
லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியவர்.


யாரையேனும் பார்த்து பொறாமைப் பட்டதுண்டா?
இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து பொறாமைப் பட்டிருக்கிறேன்.


பிடித்த இயக்குனர் யார்?
மகேந்திரன்.

பிடித்த உணவு எது?
சிக்கன்.

நெருங்கிய நண்பர் யார்?
ராவ்பகதூர்.


என்னிடம் பிடிக்காத விஷயம் எது?
 நீங்கள் கோபப்படு வதை குறைக்க வேண்டும்.

அரசியலுக்கு வருவீர்களா? மாட்டீர்களா?
  அது ஆண்டவன் கையில் இருக்கிறது.

Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. ithu already Envazhi site la vandha maadhiri irukku... copy adicha yaaru saar ottu poduvaanga?

    பதிலளிநீக்கு
  2. @VJ
    VJ-அண்ணாச்சி இது ஒரு பொதுவான செய்தி. இதுக்கு காப்பி ரைட்ஸ் எதுவும் கிடையாது. அப்படினா....என் வழி சைட் யாரிடமிருந்து காப்பி அடித்தார்கள்? ஒரு வேளை பேட்டி எடுக்கப்பட்ட அரங்கத்தினுள் இருந்தார்களோ...

    பதிலளிநீக்கு
  3. "கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு... "
    அவர்கிட்ட இந்த கேள்விய கேக்கிறத நிறுத்த போறதும் இல்லை அவரும் இந்த பதிலா மாத்த போறதும் இல்லை

    பதிலளிநீக்கு
  4. ஆண்டவன் எப்போ அவர்கிட்ட சொல்வாரு?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா25 அக்., 2010, 1:41:00 AM

    ithu unka katpani peddiyaa?

    பதிலளிநீக்கு
  6. நல்லாயிருக்கு.. இந்த அடக்கமான மனிதர் அரசியல் என்ற சாக்கடைக்குள் விளக் கூடாது...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.