என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், அக்டோபர் 25, 2010

11 கவிதை எழுதுவது எப்படி?

(வாலி வைரமுத்து வகையறாக்கள் என்னை மன்னிப்பார்களாக....).
ந்த உலகத்தில் என் பார்வையில் கவிதை எழுதுவது ரொம்ப சுலபம். எப்படின்னா?........
ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கங்க.....ஏதாவது ரெண்டு வரி  இருபது வார்த்தைக்கு மிகாமல் எழுதுங்க....எழுதிட்டீங்களா?
இப்ப மறுபடியும் மூன்று வார்த்தைக்கு ஒரு வரி என்று ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதவும். ஆறு அல்லது ஏழு வரி வந்திருக்கும். அப்படி ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதும்போது
வார்த்தைகளை அதன் அர்த்தம் மாறாமல் லேசாக கலைத்து போடுவது ரொம்ப முக்கியம்.கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் இருப்பத்து ரொம்ப ரொம்ப முக்கியம்.  இப்போது நீங்கள் எழுதியதை படித்து பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அட அதுதாங்க கவிதை. மூன்று வரிக்குள் ஏழெட்டு வார்த்தைகளை உங்களுக்கு  அடக்க தெரிந்தால்.... சந்தேகமே வேண்டாம் அதற்க்கு பெயர் ஹைக்கூ. உதாரணத்திற்கு இந்த சுட்டியை கிளிக்கவும்
(அட எல்லோரும் ரெடியாகிட்டீங்க போல கவிதை எழுத....என்னது என்னை அடிக்க ரெடியாகிட்டீங்களா....அய்யய்யோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல....விடு ஜூட்..... )


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. அன்பு நண்பருக்கு....

    உங்கள் தளத்தில் மேலே உள்ள "முகப்பு", "என்னைப் பற்றி" மெனு பாரை எப்படி வரவழைத்தீர்கள். நன்றாக உள்ளது. எனக்கும் சொல்லித் தரவும். நன்றி

    பதிலளிநீக்கு
  2. அதான் நான் சொல்லிட்டேன் கருத்த காசா பணமா.

    கவிதை எழுத கத்துக்கொடுத்த ஆசானே வாழ்க. எப்படி நம்ம கவிதைகப்பக்கம் வந்துபாருங்க சொல்லிக்கொடுத்தத சரியா எழுதியிருக்கேனான்னு.

    கருத்தையும் சொல்லிவிட்டுபோங்க காசா! பணமா!

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல் நண்பா... நான் கூட கவிதை எழுத ரெடி தான்... ஆனால் எனக்கு வைரமுத்துவோ வைரமுத்துவிற்கு நானோ போட்டியாக வருவதை நாங்கள் விரும்பவில்லை...

    பதிலளிநீக்கு
  4. @"ஸஸரிரி" கிரிஅன்பு நண்பருக்கு....

    உங்கள் தளத்தில் மேலே உள்ள "முகப்பு", "என்னைப் பற்றி" மெனு பாரை எப்படி வரவழைத்தீர்கள். நன்றாக உள்ளது. எனக்கும் சொல்லித் தரவும். நன்றி/////
    நண்பருக்கு, உங்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் விரைவில் அனுப்புகிறேன்

    பதிலளிநீக்கு
  5. அப்படியே பின்நவீனத்துவ கவிதா பற்றியும் சொல்லிடுங்க.

    பதிலளிநீக்கு
  6. எப்படி எழுதுறாங்க னு கொஞ்சம் வந்து பார்த்துட்டு போங்க வாத்தியாரே...

    www.aaraamnilam.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.