என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜூலை 29, 2011

30 நண்பர்களே... நாந்தான் வலைப்பூ பேசறேன்......

 

 

ஹாய்... நண்பர்களே.... நலமா?
நாந்தான் ரஹீம்கஸாலியின் வலைப்பூ பேசறேன். 

இன்றுதான் நான் புதிதாய் பிறந்தேன். ஆம்....கடந்த வருடம் இதே நாளில்தான் என்னை என் முதலாளி அதாங்க ரஹீம்கஸாலி துவங்கினர். உங்களின் ஆதரவில் இன்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. 

இந்த உலகத்தை திருத்தவேண்டும், ஊரை திருத்தவேண்டும் என்றெல்லாம் நினைத்து அவர் என்னை ஆரம்பிக்கவில்லை. கடந்த வருடம் இதே ஜூலை மாதம் மத்தியில் தன் தந்தை திரு. ரஹீம் அவர்கள் மரணத்தால் உடைந்து போயிருந்த ரஹீம்கஸாலி, தனக்கு மனமாற்றம் வேண்டி என்னை துவங்கினார்....



இந்த மாதம் துவங்கினாரே தவிர அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம்தான் பதிவிட்டார். அவர் எழுதி விகடன் டாட் காமில் வெளியான

ராமதாசிடம் 32 கேள்விகள்

என்ற பதிவைத்தான் முதன்முதலில் வெளியிட்டார்.

ஆனாலும், ராமதாஸின் கட்சியை போலவே அந்த பதிவும் காத்துதான் வாங்குச்சு. யாராவது வந்து பார்த்தாங்களான்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை திரும்ப திரும்ப பார்த்து என்னை இம்சை படுத்திட்டார். எந்த திரட்டியிலும் இணைக்கலைன்னா யாரு வருவாங்க?. 

அப்புறம் தான் நான் எதுக்கு காத்து வாங்கறங்கற விஷயமே அவருக்கு விளங்குச்சு. அதுக்கப்புறம் தமிழ்மணம், தமிழ்10, இண்ட்லின்னு எல்லா திரட்டிகளையும் தேடிதேடி சேர்த்தாரு....அதுக்கப்புறமும் நம்ம நிலமை மோசமாத்தான் போச்சு.ஆளே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தனும்ன்னு வெக்ஸ் ஆகிட்டாரு எங்க மொதலாளி ரஹீம்கஸாலி.

இருந்தாலும் சளைக்காம அவரு எழுதி விகடன்ல வந்த சில சிறுகதைகளையும், கட்டுரைகளையும் மீள் பதிவு செஞ்சுக்கே இருந்தாரு...அப்புறம்தான் கொஞ்சம்கொஞ்சமாக ஆளுங்க எட்டிப்பார்க்க ஆரம்பிச்சாங்க...ஆளுங்க எட்டிப்பாத்தாங்கன்னு சொன்னதும் நீங்க பாட்டுக்கு பெரிய லெவல்ல கற்பனை பன்னாதீங்க...ஒரு நாளைக்கு 10 பேர், அல்லது 15 பேருதான்....அதுக்கு மேல இல்லை. ஆனா, கமெண்டுன்னு ஒன்னும் வரல....அப்புறம் கொஞ்ச நாள்ல மதிசுதா, வெட்டிப்பேச்சு சித்ரான்னு ஒரு சில பதிவர்கள் கமெண்ட் போட்டாங்க...அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. 

அப்படியே படிப்படியா மேலே வந்து இன்னைக்கு ஒரு வருசத்துல 376 பாலோவர்ஸ்,ஒரு லட்சத்தை கடந்த ஹிட்சுன்னு வ(ளர்)ந்துட்டேன். இப்போது நானும், என் முதலாளியும் ஓரளவுக்கு தெரிந்த முகமாகிவிட்டோம். அதுக்காக உங்களுக்கு நன்றி....உங்க ஒத்துழைப்புக்கு நன்றி...உங்களால்தான் நான். 


ஆங்....சொல்ல மற்ந்துட்டேன்...இது என் முதலாளியோட 250-ஆவது பதிவும் கூட....

இந்த 250-பதிவுகள்ல எல்லாமே அவரோட சொந்த பதிவு கிடையாது. அவருக்கு மின்னஞ்சலில் வந்தது, அந்த நேரத்தில் பரபரப்பாக இருந்த செய்திகள்சில பத்திரிகைகளில் அவர் படிக்கும்போது, அட இது நல்லாருக்கே...இந்த செய்தியை இந்த தலைமுறையினர் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்( ஆட்டோ சங்கர், மிசா போன்ற செய்திகள்) பகிர்ந்து கொண்டவை என்று எல்லாம் சேர்த்துதான் இந்த 250. அதே நேரம் நான் பதிவர்கள் யாருடைய கற்பனையில் உதித்த கதை, கவிதை கட்டுரை,ஜோக்குகள் என்று எதையும் திருடியதில்லை. 


இவ்வளவு பதிவுகளையும் உங்களின் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் எழுதியிருக்க முடியாது.அதற்காக உங்கள் அத்துணை பேருக்கும் நன்றி. மேலும்  ரஹீம்கஸாலியின் பதிவுகளை உங்களிடம் கொண்டுவந்து சேர்த்த திரட்டிகளுக்கும்,  திரட்டிகளில் வாக்களித்த நண்பர்களுக்கும்  ,தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திவரும் நண்பர்களுக்கும், என்னையும் மதித்து பின்தொடரும் நண்பர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்...அனைவருக்கும் நன்றியோ நன்றி.தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை வேண்டி விடைபெறுகிறேன். 
இப்படிக்கு
ரஹீம் கஸாலி சார்பில் 
அவரின் வலைப்பூ
 
=============================
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 

தெரியும்...ஆனா, தெரியாது.....



Post Comment

இதையும் படிக்கலாமே:


30 கருத்துகள்:

  1. என்னட நிலைமையும் இது தான்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் மாப்ள.....இன்னும் பல படைப்புகள் படைக்க வேண்டும் நீங்கள் என்று வாழ்த்தும் அன்பு நண்பனாக விக்கி!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா29 ஜூலை, 2011, 4:16:00 PM

    வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. இரண்டாம் ஆண்டில் 250வது பதிவுடன் அடியெடுத்து வைக்கும் அண்ணன் ரஹீம் கஸாலியின் வலைப்பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை என் ஓனர் தெரிவிக்கச் சொன்னார். - செங்கோவி.ப்ளாக்ஸ்பாட்!

    பதிலளிநீக்கு
  5. ’உங்க’ தமிழ்மணம் தான் ஒர்க் ஆயிடுச்சே..நல்ல ஹாட்டான அரசியல் பதிவுகளை அடுத்தடுத்து இறக்குங்க தல.

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் .....குரு ..நீங்க தான் குரு டாப்

    பதிலளிநீக்கு
  7. நன்றி ....நல்ல பதிவும் கூட

    பதிலளிநீக்கு
  8. 250 பதிவுகள் ஓராண்டில் என்றால் இமாலயச் சாதனைதான்
    சாதனை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என்னுடைய வரலாறும் தங்களுடையது போல்தான்...

    ஆனால் நான் இன்னும் ஒரு ஆண்டை பூர்த்தியடைய வில்லை..

    தங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

    இன்னும் அதிக நேரம் வலைவுலகில் தங்களை எதிர்ப்பார்க்கிறோம்...

    அன்புடன்
    கவிதைவீதி சௌந்தர்...

    பதிலளிநீக்கு
  10. ஓஹோ, நீங்க மொக்கை போட ஆரம்பிச்சி இன்னையோட ஒரு வருஷம் ஆகுதா?'வாழ்த்துக்கள்'.

    பதிலளிநீக்கு
  11. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. many many happy returns of the day. அன்புடன் சகோ...

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்துக்கள் மாப்ள.....இன்னும் பல படைப்புகள் படைக்க வேண்டும்.. மேலும் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
  14. அன்பின் கஸாலி - இரண்டாமாண்டு துவக்கத்திற்கும் -இருநூற்றம்பது பதிவுகளுக்கும் - லட்சம் ஹிட்ஸுகளுக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ,
    தொடர்ந்தும் சூடான சுவாராஸ்யமான அரசியல் பதிவுகளோடும், கலக்கலான பல்சுவைப் படைப்புக்களோடும் உங்கள் பயணம் தொடரட்டும்!
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  16. வாழ்த்துக்கள் மென்மேலும் பல ஆண்டுகள் தரமான ஆக்கங்களைக் கொடுத்து அனைவரின்
    மனதிலும் உங்கள் நினைவு சங்கமிக்கட்டும்....
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  17. ஒரு வருட நிறைவிற்கும்,250 ஆவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் சகோதரா

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா30 ஜூலை, 2011, 8:46:00 AM

    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் நண்பரே... மென்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள், டைட்டில்ல 250 வது பதிவுன்னு சொல்லி இருந்தா இன்னும் ஹிட்ஸ் கிடைச்சிருக்கும், ஜச்ட் மிஸ்டு

    பதிலளிநீக்கு
  20. 2-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. மேலும் உங்கள் பதிவுகள் தொடர விரும்பும் அன்பன்..மர்மயோகி

    பதிலளிநீக்கு
  22. இரண்டாம் ஆண்டில் 250வது பதிவுடன் அடியெடுத்து வைக்கும் அண்ணன் ரஹீம் கஸாலியின் வலைப்பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை என் ஓனர் தெரிவிக்கச் சொன்னார். -

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.