என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜூலை 25, 2011

13 கலைஞரின் மனசாட்சி இப்படித்தான் நினைச்சிருக்குமோ....ஒரு டவுட்டு...




மாலையில் பொதுக் குழுக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி,

கேள்வி: காங்கிரஸ் மீதான அதிருப்தியால் தான் மத்திய அரசில் திமுக புதிதாக 2 அமைச்சர்களை சேர்க்கவில்லையா?

பதில்: தேவையில்லாமல்  இன்னும் ரெண்டு பேரை திகாருக்கு அனுப்ப உங்களுக்கு அப்படி என்ன ஆசை.....
----------------

கேள்வி: பிரதமர் மன்மோகன் சிங் 2 இடங்கள் பற்றி திமுக அறிவிக்கும் என்று சொல்லி இருந்தாரே?

பதில்: அவருக்கென்ன...சொல்றத சொல்லிட்டு அப்புறம் எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடுவாரு....கடைசியில எங்க கட்சிக்காரங்கதான் ஜெயில்ல களி திங்கனும்.
-----------------

கேள்வி: சி.பி.ஐ. ஏற்கனவே போபர்ஸ் வழக்கில் உலக அளவில் அது ஒரு சார்பானது என்பதை நிரூபித்திருக்கிறது. தற்போது நீங்கள் சி.பி.ஐ. உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதை காரணமாக வைத்து நீங்கள் சி.பி.ஐ. மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: அடுத்து யாருன்னு நாங்களே அரண்டுபோய் கிடக்கிறோம்...இந்த லச்சணத்துல  நாங்க எங்கே அவங்க மேல நடவடிக்கை எடுக்கறது? அவங்கதான் ஒரு முடிவோட இருக்காங்களே.....
----------------

கேள்வி: உங்களுக்கு பிறகு யார் உங்கள் கட்சியின் தலைமைக்கு வருவார்கள் என்று கேட்டதற்கு நீங்கள் பொதுக்குழுதான் அதை முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பொதுக்குழுவில் அடுத்த தலைமையைப் பற்றி முடிவு செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக இருந்தது. அதைப் பற்றி முடிவெடுக்கப்பட்டதா?

பதில்: எடுக்கலாம் என்று நினைத்துதான் வந்தேன்..ஆனால், அழகிரி வந்து நீங்கதான் தலைவரா இருக்கனும்ன்னு வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால்...இன்னும் சில வருசங்களுக்கு நானே செயல்படமுடியாத சே....சே...செயல் தலைவரா இருக்க முடிவு பண்ணிட்டேன். 
---------------------

கேள்வி: இன்றைக்குக்கூட பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர் எதிர்காலத்திற்கு ஒரு மூத்த தலைவரைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று பேசியிருக்கிறாரே?

பதில்:  நாந்தான் இந்தியாவிற்கே மூத்த தலைவருன்னு நீங்க ஒத்துக்க மாட்டீங்க போல ...(சிரிக்கிறார்)
---------------------

கேள்வி: பொதுக்குழுவின் மாலைக்கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லையே?
பதில்: அவரு கலந்துக்கத்தான் வந்தார். ஆனா, மதுரையில யாரோ ஒரு ரவுடிய என்கவுண்டர் பன்னிட்டாங்கன்னு செய்தி வந்துச்சு...அது யாருன்னு பார்க்க கிளம்பிட்டாரு..
---------------

கேள்வி: இந்த தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம் என்று பா.ம.க. சொல்லியிருக்கிறது. கொங்குநாடு முன்னேற்றக்கட்சியும் சொல்லியிருக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அவங்க இன்னுமா எங்க கூட்டணியில இருக்காங்க?
-------------

டிஸ்கி: இதில் கேள்விகள் மட்டுமே கலைஞரிடம் நிஜமாகவே கேட்கப்பட்டவை...பதில்கள் நம்ம கற்பனை.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. // ஆனால் அதே நேரத்தில் அதிமுக அமைச்சர்கள் மீதும் நில அபகரிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது//

    செம நக்கல் பதிவு கஸாலி.

    எனக்குப்பிடிச்சது: “அவங்க இன்னுமா எங்க கூட்டணியில இருக்காங்க?”

    பதிலளிநீக்கு
  2. தலைவருக்கு மனசாட்சி இருக்குன்னு கண்டுபிடிச்ச கஸாலி வாழ்க.

    பதிலளிநீக்கு
  3. தலைவருக்கு மனசாட்சி இருக்குன்னு கண்டுபிடிச்ச கஸாலி வாழ்க.
    (இது ஒரு காப்பி பேஸ்ட் கமெண்ட்)

    பதிலளிநீக்கு
  4. தலைவருக்கு மனசாட்சி இருக்குன்னு கண்டுபிடிச்ச கஸாலி வாழ்க.

    பதிலளிநீக்கு
  5. கலைஞரின் மனச்சாட்சி ரஹீம்கஸாலி அவர்கள்தானோ?!

    பதிலளிநீக்கு
  6. தலைவருக்கு மனசாட்சி இருக்குன்னு கண்டுபிடிச்ச கஸாலி வாழ்க!!!
    (இதுவும் ஒரு காப்பி பேஸ்ட் கமெண்ட் தான்)

    பதிலளிநீக்கு
  7. அருமையான
    சுவையான
    பகிர்வு நண்பரே

    பதிலளிநீக்கு
  8. அது என்ன வித்தியாசம்[ma]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.