என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜூலை 30, 2011

20 சார்...இன்னும் ”அது” வரல....



இன்று நாட்டில் எத்தனையோ தனியார் வங்கிகள் பெருகி கவர்சியான வட்டிவிகிதங்கள் மூலம் நம்மை ஈர்த்தாலும், அதையெல்லாம் விடுத்து நம் பெரும்பான்மையினரின் தேர்வாக இருப்பது S.B.I.எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (STATE BANK OF INDIA) தான்.அதற்கு காரணம், நம்பிக்கையான வங்கி எனப்படுவதோடு, மத்திய அரசு நிறுவனம் என்பதாலும் தான்.ஆனால், சமீபகாலமாக அவர்கள் அலட்சியாகவே நடந்து கொள்கிறார்களோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை படியுங்கள்.


எங்கள் ஊரில் இருக்கும் ஸ்டேட் பேங்கிற்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு விஷயமாக என் நண்பனுடன் சென்றேன்.
இப்ப கைவசம் இல்லை .ஸாரிசார் அடுத்த வாரம் வாங்க என்றார் வங்கியின் மேலாளர்.
அடுத்த வாரமும் சென்றோம். 

சார்....இன்னும் வரல....அடுத்த வாரம் வாங்க...என்றார்.
கடந்த வாரமும் சென்றோம்...அதே புராணம் தான் பாடினார்.
சரி....இந்த வாரமாவது வந்திருக்கும் போய் பார்ப்போம் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சென்றோம்....
சார் மன்னித்துக்கொள்ளுங்கள்...இன்னும் வரல....என்றார்.
வேறு என்ன பன்னலாம்...சொல்லுங்க என்றான் என் நண்பன் கடுப்புடன்......
பக்கத்தில் இருக்கும் அறந்தாங்கி பேங்கிற்க்கு சென்று அதை வாங்கி வாருங்கள் முடித்துவிடலாம் என்றார் கூலாக......

என்ன ஒரே குழப்பமாக இருக்கா? நாங்க எதுக்கு பேங்கிற்கு போனோம்....மேனேஜரு எதுக்காக அடுத்த வாரம், அடுத்த வாரம்ன்னு அலைய விட்டார்னு....சொல்றேன்...
லோன் எடுக்க போயிருப்பீங்க....அதான் இப்படின்னு அங்கே யாரு சார் குரல் கொடுக்கறது?


லோன் எடுக்க போயிருந்தாக்கூட பரவாயில்லை..... நாங்க போனது புதுசா ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்க....அங்கே மேனேஜர் இல்லைன்னு சொன்னது புதிதாக அக்கவுண்ட் ஆரம்பிக்க எழுதி கொடுக்கும்  அப்ளிகேசன் ஃபார்மை....

விளங்கிடும்.....

அக்கவுண்ட் ஆரம்பிக்கவே இந்த பாடுன்னா....லோன் எடுக்க போறவங்க நிலைமையை  நீங்களே யோசிச்சுக்கங்க......

ஒவ்வொரு தனியார் பேங்கிலிருந்தும் நம் வீட்டிற்கே வந்து அக்கவுண்ட் ஆரம்பிங்கன்னு கேட்கிறார்கள்.அல்லது போனில் கேன்வாஸ் செய்கிறார்கள். இவர்கள் என்னடான்னா அக்கவுண்ட் ஆரம்பிக்க பேங்கிற்கே போனவங்களை விரட்டுகிறார்கள். எவ்வளவு அலட்சியம் பாருங்கள்....அந்த அப்ளிகேசன் ஃபார்ம் வாங்க எங்களை அறந்தாங்கிக்கு போக சொன்ன இவர்கள் அதை செய்திருக்கலாமே?

கஸ்டமர் வந்தால் என்ன? வராவிட்டால் இவர்களுக்கு என்ன?.....வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும்  மாதம் முடிந்தால் சம்பளம்......
இதற்காகத்தான் அப்பவே சொன்னார்களோ... கால்காசு உத்தியோகமா இருந்தாலும் கவருமெண்டு உத்தியோகமா இருக்கனும்ன்னு.....
 

படிக்காமல் தவற விட்டவர்களுக்காக....என் முந்தைய பதிவு 
ஒருவருட  நிறைவும்... 



Post Comment

இதையும் படிக்கலாமே:


20 கருத்துகள்:

  1. பெயரில்லா30 ஜூலை, 2011, 11:58:00 AM

    முதல் டெபாசிட்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா30 ஜூலை, 2011, 11:59:00 AM

    அக்கவுண்ட் இப்பதான் அரம்பிக்கலாம்னு இருந்தேன்.பெரிய வங்கி ஸ்டேட் பேங்க்தான் இல்ல.?

    பதிலளிநீக்கு
  3. sbi,,,,ind.bank எல்லாம் எப்போதுமே
    இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  4. இந்திய வல்லரசு ஆகும் நாள் ரொம்ப கிட்ட நெருங்கிடுச்சு

    பதிலளிநீக்கு
  5. விடுங்க பாஸ் இவிங்க எப்போதுமே இப்படித்தான்

    பதிலளிநீக்கு
  6. ஸ்டேட் பேங்கு இப்படி அலட்சியமா இருப்பது புதுசா?

    பதிலளிநீக்கு
  7. என்ன வித்தியாசத்தை--புரியவில்லை
    (மா)

    பதிலளிநீக்கு
  8. குக்கிராமங்களில் மட்டும் தான் இப்படியோ ....ஆனா காந்தி கிராமங்களின் வளர்ச்சி தான் முக்கியம் என்று அன்றே சொன்னார் நம்ம எங்கே கேட்டோம்

    பதிலளிநீக்கு
  9. வளர்ந்துவிட்ட வங்கிகள் என்றால் இப்படித்தான்....

    பதிலளிநீக்கு
  10. கஸ்டமர் வந்தால் என்ன? வராவிட்டால் இவர்களுக்கு என்ன?.....வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் மாதம் முடிந்தால் சம்பளம்..இவர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதுமே இப்படித்தான்.நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஸலாம் சகோ.கஸாலி...

    பாரத ஸ்டேட் வங்கியில் வேலைப்பார்ப்பவர்களுக்கும் மற்ற வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசத்தை நான் பார்த்ததுண்டு.

    அதாவது, பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்களுக்கு மட்டும் தலையில் இரண்டு கொம்பு முளைத்து இருக்கும்..!?!

    நல்ல பகிர்வு சகோ.

    பதிலளிநீக்கு
  12. பணம் போட போனோம்ன்னா வாய பொளந்திட்டு நிப்பாங்க .......பணம் எடுக்க போகும்போது இவுங்க குடுக்கிற மரியாதையை பாத்து ஏண்டா இங்க கொண்டு பணத்த போட்டோம்ன்னு ஃபீல் பண்ண வைப்பாங்க ....இதுதான் இன்னிக்கி கவர்மென்ட் பேங்க் ...

    பதிலளிநீக்கு
  13. வங்கிகளில் இப்படியும் நடக்கிறது - என்ன செய்வது .......

    பதிலளிநீக்கு
  14. எல்லா எஸ்.பி.ஐயும் அப்படி இல்லையே பாஸ்..நெட் பேங்கிங் தவிர மற்ற விஷயங்களில் ஓகே தான்..உங்களைப் பார்த்துப் பயந்துட்டாங்களோ?

    பதிலளிநீக்கு
  15. ஓரளவுக்கு எஷ்டாபிலிஷ் ஆன எல்லா வங்கிகளிலும் இதுதான் நிலைமை.

    பதிலளிநீக்கு
  16. இது சகஜம் தானே கசாலி..
    இவனுங்க இதுக்கெல்லாம் கவலைப் படமாட்டாங்க.. எப்படி இருந்தாலும் இவங்களுக்கு சம்பளம் வரும்ல..

    பதிலளிநீக்கு
  17. இந்த பேங்குக்கு தனி மரியாதை உண்டு!.....ஏன்னா இவங்க ரொம்ப நல்லவங்க!.....இங்கு சீட்டு தேச்சே சம்பளம் வாங்குபவர்கள் நெறைய உண்டு....!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.