என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜூலை 28, 2012

47 பதிவுலக அரசியலும் நானும்.....




பதிவுலகில் இரண்டு வருடங்களை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறேன் நான். என் ஊரை தாண்டி யாருக்கும் பரிட்சயமில்லாத என்னை உலக அளவில் தமிழ் பேசும் நண்பர்களிடம் கொண்டு சேர்த்தது இந்த வலைப்பதிவுதான். முகமறியாத எத்தனையோ நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் எனக்கு தந்ததும் இந்த வலைப்பதிவுதான்.

இன்னொரு விஷயம்.... அரசியலை மட்டும் எழுதும் நீங்கள் ஏன் விளையாட்டை பற்றி ஏதும் எழுதுவதில்லை என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.எனக்கு தெரிந்ததைத்தானே நான் எழுத முடியும்? அரசியல் என்பது எனக்கு பிடித்த ஒரு விஷயம். சின்ன வயசிலிருந்து கவனித்து வரும் ஒன்று. அதனால் அதை எழுத முடிகிறது. ஆனால், விளையாட்டு என்பது நான் அதிகம் அறியாத ஒன்று.. சிறு வயதிலிருந்தே படிப்பது, எழுதுவது, கேட்பது, பார்ப்பது, பேசுவது என்று விளையாட்டை தவிர்த்தே வந்துள்ளேன். அதற்கு காரணம் என்னவென்று எனக்கே தெரியவில்லை. ஆனால், விளையாட்டு எனக்கு பிடிக்காது. அதனால்தான் இதுவரை நான் எழுதிய பதிவுகளில் ஒரு பதிவுகூட விளையாட்டு சம்பந்தப்பட்ட பதிவாக இருக்காது. இனிமேலும் வராது.

எனக்கு பதிவுகளில் அரசியல் எழுதப்பிடிக்குமே தவிர, பதிவுலக அரசியல் பிடிக்காது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். என் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு, திரட்டிகளில் வாக்களித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும் அத்தனை நண்பர்களுக்கும், பதிவுகளை வாசகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திரட்டிகளுக்கும் நன்றி. நன்றி....நன்றி...



Post Comment

இதையும் படிக்கலாமே:


47 கருத்துகள்:

  1. இனிய வாழ்த்துக்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்

      நீக்கு
  2. இந்த பதிவின் மூலம் ...உங்கள் மேல் மரியாதை அதிகரித்து விட்டது .. நானும் சேம் ப்ளட் தான் ..பதிவுலக அரசியல் பண்ண பிடிக்கல முடியல ..ஆனா தான வரும் ஆதரவுகள் தரும் சந்தோசம் ரொம்ப நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையில்லாமல் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ள கூடாது. வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. எங்கள் வழிகாட்டியும் முன்னோடியும் நீதான் கஸாலி.இன்று நான் எல்லாம் இங்கே அறியபடுகிறேன் என்றால் நம் ஊர் பக்கம் இருந்து இணைய பதிவுலகில் நீ முதன்முறையாக வந்து வெற்றி பெற்றதால் உன் அடியொற்றி நாங்கள் இங்கே நுழைந்தோம் .இங்கே நீ பதிந்த ஒரு சிறுகதை குங்குமம் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும்போது மனதெல்லாம் மிக சந்தோசமாக இருக்கு .வாழ்த்துக்கள் கஸாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது அதிகபட்சமான வார்த்தைகள்.... இந்த வார்த்தைகளுக்கு நான் சொந்தக்கரனில்லை என்பது என் கருத்து.

      நீக்கு
  4. வாழ்த்துகள் சகோதரரே இப்பதான் நீங்க ஒலகபதிவளராகி வீட்டிர்களே அப்புறமேன்ன

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பா..தொடர்ந்து தங்கு தடையின்றி பயணிக்க இந்த சிறுவனின் வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  6. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தம்பி.

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      நீக்கு
  9. பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்கு பின் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி சார்....

      நீக்கு
  10. என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. இரண்டாம ஆண்டு நிறைவுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வந்து ஆதரவளிக்கும் உங்களுக்கு நன்றி சார்...

      நீக்கு
  12. "எனக்கு பதிவுகளில் அரசியல் எழுதப்பிடிக்குமே தவிர, பதிவுலக அரசியல் பிடிக்காது"

    நல்ல பாலிசி தோழரே..

    பதிலளிநீக்கு
  13. வாழ்க்கையே ஒரு விளையாட்டா.. போயிட்டு இருக்கும்போது.. விளையாட்டு புடிக்கலேனு சொல்றீங்களே பாஸ்...:-)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதான் சொல்லிட்டீங்கலே வாழ்க்கையே ஒரு விளையாட்டுன்னு.... அப்புறம் எதற்கு இன்னொரு விளையாட்டு?

      நீக்கு
  14. இணையதள 'சோ' அவர்களே. இம்மாதிரி எழுதுவது அரசியல்வாதி ஆவதற்கான தகுதி உள்ளவர்களால் மட்டுமே முடியும். சிராஜை துணை முதல்வராக கொண்டு நீங்கள் ஆட்சிப்பீடம் ஏற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் அண்ணா... மென்மேலும் வளர்ந்து ஆட்சி பிடிக்க மனமார்ந்த வாழ்த்துகள்

    முதல்வர் வாழ்க!

    நாளைய பாரதபிரதமர் வாழ்க!

    வெள்ளை மாளிகையின் அதிபரே வாழ்க வாழ்க

    அஹ்ஹூ அஹ்ஹூ :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க இப்படி பயமுறுத்துறீங்க -

      நீக்கு
    2. சரி தமிழன் அதிபரா வந்தா சந்தோசமுங்க - அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

      நீக்கு
  16. வாழ்த்துக்கள் நண்பரே! தொடர்ந்து கலக்குங்கள்!

    இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  17. இனிய வாழ்த்துக்கள் கஸாலி.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் நண்பா........
    எனக்கு பதிவுகளில் அரசியல் எழுதப்பிடிக்குமே தவிர, பதிவுலக அரசியல் பிடிக்காது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்///////

    நல்லது

    பதிலளிநீக்கு
  19. ஆரம்ப காலங்களில் உங்கள் எழுத்துக்களை பார்த்து
    ரொம்பவும் பிரமிப்பாய் இருக்கும்.
    ஒரு விசயத்தில என்னை அதிகமாவே கவர்ந்துட்டீங்க!
    விளையாட்டுக்கள்!
    பள்ளிக்காலங்களுக்கு பிறகு
    நான் அதிலிருந்து விலகியே விட்டேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.