என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜூலை 02, 2012

11 கலாமும் கலகமும் (பொடிமாஸ் 02/07/2012)...




சூப்பர் பல்டி...... 

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் டர்னிங் பாய்ண்ட்ஸ் என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் சில விஷயங்கள் கலகமூட்டுவதாக இருக்கிறது. அதாவது....
2004- தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பல்வேறு தரப்புகளிடமிருந்து சோனியா காந்தி பிரதமராக ஒப்புதல் தரக்கூடாது என்று வலியுறுத்தி மின் அஞ்சல்கள் குவிந்தன. ஆனால் சோனியா காந்தியை ஆட்சி அமைக்க அழைக்கும் கடிதத்தை அனுப்பவும் நான் தயாராக இருந்தேன். சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்து இருந்திருந்தால் நானும் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவர் மன்மோகன்சிங்கை பிரதமராக பரிந்துரைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

2004-ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதோடு காங்கிரசிலேயே சிலர் எதிர்ப்பு குரல் கொடுத்ததுதான் அப்போது பிரதமர் பதவியிலிருந்து சோனியா பின்வாங்கியதற்கு முக்கிய காரணம். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெறும் 148 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. அதேசமயம் பி.ஜே.பி.க்கும் காங்கிரஸ் அளவிற்கு சமமான இடங்களே கிடைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆட்சியமைக்குமளவிற்கு போதிய இடங்கள் கிடைத்ததால் வேறுவழியின்றி அந்தக்கூட்டணியையே ஆட்சியமைக்க கலாம் அழைத்திருப்பார் என்பது என் கருத்து. 

அதே நேரம் கலாம் மீண்டும் ஜனாதிபதியாகக்கூடாது என்று காங்கிரஸ் வரிந்துகட்டுக்கொண்டு இருந்ததற்கு காரணம், அவர் காங்கிரசின் எதிரியாகவே பார்க்கப்பட்டதுதான். இப்போது கலாமின் இந்த புத்தகத்தினால் இனி காங்கிரசார் தெளிவு பெற்று அவரை காங்கிரசின் நண்பனாக பார்ப்பார்கள்.  நல்லவேளையாக இப்போது சொல்கிறார். கடந்த மாதம் இதை சொல்லிருந்தால் ஜனாதிபதி பதவிக்காக காங்கிரசின் கால் பிடிக்கிறார் கலாம் என்று விமர்சனம் கிளம்பியிருக்கும். யார் கண்டா.....ஒருவேளை இந்த ஸ்டேட்மெண்டை போன மாசம் சொல்லிருந்தால் பிரணாப் முகர்ஜிக்கு பதில் இவரே காங்கிரஸ் வேட்பாளராகவும் ஆகியிருக்க கூடும். 

======================


 அது போன மாசம்...இது இந்த மாசம்...

சோனியா இத்தாலிக்காரர் என்று சொல்லியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கடந்த மாதம் சொன்ன கருத்தை வாபஸ் வாங்கிவிட்டு இப்போது  வெளிநாட்டில் பிறந்த யாரும் ஜனாதிபதி, பிரதமர் ஆவதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த எனது கருத்து அன்றும், இன்றும், என்றும் மாறாது என்று மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார் சங்மா. காங்கிரசார் எப்படியும் தன்னை ஜனாதிபதியாக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் முதல் ஸ்டேட்மெண்டையும், அதுமுடியாமல் போனதும் அடுத்த ஸ்டேட்மெண்டையும் விட்டுருக்கிறார் சங்மா. இன்னும் என்னன்ன சொல்வாரோ? சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் கதைதான். 



======================


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும்ன்னு சொன்னது நரிதானே...அதான்

      நீக்கு
  2. ஏற்கனவே திரு கலாம் சொல்லியிருந்தார். நான் முன்பே படித்திருக்கிறேன்.
    மனதில் தோன்றியதை எழுதாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சங்மா அறிக்கையை படித்துவிட்டு இதுபற்றி எழுதலாம் என நினைத்து இருந்தேன் .அதுக்குள்ளே நீ முந்திகிட்டே .

    பதிலளிநீக்கு
  4. ஒரே மாதிரிப் பேச நம்மை மாதிரி
    அவர்கள் சாதாரண மனிதர்களா என்ன?அலசல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கலாம் பாவம் சார். அவரும் பேசாமலேயே இருந்திருக்கலாம் .
    நரி கதை சரியான பொருத்தம்

    பதிலளிநீக்கு
  6. அழகான பதிவு. அப்படியே நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வரலாமே?
    http://skaveetha.blogspot.com/2012/07/blog-post.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.