என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜூன் 25, 2012

12 குமுதம்: ஜால்ராவும், சிண்டுமுடிதலும்- பத்தவச்சிட்டியே பரட்டை....



இந்த வார குமுதத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிவு பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. தலைப்பு என்னவென்றால் அம்மா WIN சாதனைக்கு கிடைத்த வெற்றி. அதைப்படித்ததும் அப்படியே புல்லரித்து விட்டது எனக்கு.....அடேங்கப்பா....ஜால்ராப்போடுவதற்கு ஒரு அளவு வேண்டாம்?. இந்த சாதனை சான்றிதழை வாங்க எத்தனை கோடி சிலவு செய்யப்பட்டது என்று ஆளுங்கட்சிக்குத்தான் வெளிச்சம். அப்படி இருக்கும்போது ஆளுங்கட்சிக்காரர் கூவுவதைப்போல் ஒரு பத்திரிகையான குமுதம் கூவுகிறது.



அதனை தொடர்ந்து எழுதப்பட்ட கட்டுரையில் 1991- ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டுவரை நடைபெற்ற ஐந்து சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அ.தி.மு.க., நான்கில் வெற்றியாம்...இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 1991-ஆம் ஆண்டு அண்ணா.தி.மு.க.,ஜெயித்தது. 1996-இல் அந்தக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. அதன் பின் 2001-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2006-இல் தோல்வி. இப்போது 2011-இல் மீண்டும் ஆட்சி. இப்படி 1991-முதல் 2011 வரை நடந்த ஐந்து சட்ட மன்ற பொதுத்தேர்தல்களில் 3 முறை அண்ணா.தி.மு.க.,ஆட்சியை பிடித்துள்ளது. இரண்டுமுறை தி.மு.க.,ஆட்சியை பிடித்துள்ளது. அப்புறம் எப்படி ஐந்து தேர்தல்களில் நான்கில் அண்ணா.தி.மு.க.,ஜெயித்தது என்று புரியவில்லை. ஒருவேளை பன்னீர் செல்வம் முதல்வரானதையும் கணக்கில் செர்த்து விட்டார்களோ என்னவோ?

அடுத்ததாக, புதுக்கோட்டை அண்ணா.தி.மு.க.,வின் கோட்டை என்று அழுத்தமாக நிருபிக்கப்பட்டுள்ளதாக எழுதியிருக்கிறார்கள். குமுதத்தின் அறியாமையை எங்கே போய் சொல்வது என்று தெரியவில்லை?.....பின்னே என்ன? 2001-ஆம் ஆண்டு தேர்தலில் விஜயபாஸ்கரும், 2006-இல் நெடுஞ்செழியனும் மட்டுமே புதுக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் அண்ணா.தி.மு.க.,சார்பில் வெற்றி பெற்றவர்கள். (இடைத்தேர்தலை விடுங்க.....அது ஆளுங்கட்சி ஜெயிக்கும் ஒரு களம் அவ்வளவே) அதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், தி.மு.க.,வே ஜெயித்துள்ளது.

அடுத்ததாக....தற்போது ஜெயித்த கார்த்திக் தொண்டைமான் மீது குமுதத்திற்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. ஜெயலலிதாகூட ஸ்ரீரங்கத்தில் 41,000 வாக்கு வித்தியாசத்திலும், கலைஞர் கூட திருவாரூரில் 50,000 வாக்கு வித்தியாசத்திலும் தான் ஜெயித்தார்களாம். ஆனால், கார்த்திக் தொண்டைமானோ ஜெயலலிதாவைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்ததால் அமைச்சராகி விடுவீர்கள் என்றெல்லாம் தொண்டர்கள் பாராட்டு மழை பொழிந்ததாக எழுதியுள்ளார்கள். போச்சு....எல்லாம் போச்சு.... அவரை அமைச்சராக்கும் ஐடியாவில் ஜெயா இருந்திருந்தாலும் குமுதத்தின் இந்தக்கட்டுரையை படித்தால் நம்மைவிட பெரியாளா இந்த கார்த்திக் தொண்டைமான் என்று அவரை ஓரங்கட்டிவிடும் அபாயமும் இருக்கிறது. எப்படியோ கார்த்திக் தொண்டைமானுக்கு எதிராக பற்றவைத்துவிட்டது குமுதம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. //போச்சு....எல்லாம் போச்சு.... அவரை அமைச்சராக்கும் ஐடியாவில் ஜெயா இருந்திருந்தாலும் குமுதத்தின் இந்தக்கட்டுரையை படித்தால் நம்மைவிட பெரியாளா இந்த கார்த்திக் தொண்டைமான் என்று அவரை ஓரங்கட்டிவிடும் அபாயமும் இருக்கிறது//

    ஹா..ஹா..ஹா...

    அதான் நடக்க போகுது :-) :-) :-)

    பதிலளிநீக்கு
  2. //அவரை அமைச்சராக்கும் ஐடியாவில் ஜெயா இருந்திருந்தாலும் குமுதத்தின் இந்தக்கட்டுரையை படித்தால் நம்மைவிட பெரியாளா இந்த கார்த்திக் தொண்டைமான் என்று அவரை ஓரங்கட்டிவிடும் அபாயமும் இருக்கிறது
    //

    இது 100% உண்மை

    பதிலளிநீக்கு
  3. கஸாலி,

    குமுதம் ஏற்க்கனவே நொடிச்சுகிட்டு வருது.... ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போட்டு ஏதாவது காரியம் சாதிச்சுக்கலாம்னு நினைச்சு இருப்பாய்ங்க... விட்றா விட்றா சூனா பானானு சொல்லிகிட்டு போக வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    குமுதத்தில் நிர்வாகம் மாறியவுடன், குமுதம் படிப்பதை நிறுத்தி விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. குமுதம்னாலே குசும்பு தானே..தலைப்பும் அப்படி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. குமுதம் ஆளும்கட்சிக்கு ஜால்ரா பத்திரிக்கை...ஆனால் வரலாறு முக்கியம்...அதில் போய் புருடா விடுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  7. இன்றைய பத்திரிக்கை தர்மம் இந்த லட்சணத்தில்தான் உள்ளது.
    இந்த தொழில் "அந்த" தொழிலைவிட கேவலமாகி ரொம்ப ஆண்டு ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. அரசியல்ல இதெல்லாம் சாதாரமப்பா... தங்களை காப்பாற்றி கொள்ள எதையும் செய்யும் மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் சாதாரணம்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.