என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜூன் 14, 2012

2 ஜனாதிபதி தேர்தல்: ஆப்படித்த முலாயமும், செக் வைத்த மம்தாவும்.......




பிரணாப்ஜியின் உலகம் சுற்றும் ஆசைக்கு ஆப்படித்திருக்கிறார்கள் முலாயமும், மம்தாவும் இணைந்து.....
நேற்றுவரை ஜனாதிபதி கனவிலிருந்த பிரணாப்பின் ஆசையை தக்ர்த்து எறிந்துள்ளார்கள் இருவரும். அத்துடன் நில்லாமல்,இன்னும் எத்தனை நாள்தான் தேசிய கட்சியே ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது, இனி நாங்களும் அறிவிப்போம்ல என்று  அப்துல் கலாம், சோம்நாத் சட்டர்ஜி, மன்மோகன் சிங் என்று மூன்று வேட்பாளர்களையும் பரிந்துரைத்துள்ளார்கள்.
அப்துல் கலாம், சோம்நாத் சட்டர்ஜி இருவரையும் காங்கிரஸார் ஏற்றுக்கொண்டார்களோ இல்லையோ....மன்மோகனை மறுத்திருக்கிறார்கள். காரணம், மன்மோகன் போல ஒரு அடிமையை, தலையாட்டி பொம்மையை பிரதமர் பதவியிலிருந்து இழக்க விரும்புமா காங்கிரஸ்?
உடனே நெருப்பை மிதித்தவர்கள் போல பதறி துடித்துவிட்டனர்.

அதுசரி...அவரை ஜனாதிபதி வேட்பளாராக ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு பிரணாப் மீது முலாயமிற்கும், மம்தாவிற்கும் என்ன கோபம்?...உ.பி.,க்கும், மேற்கு வங்காளத்திற்கும் தாரளமாக நிதி வழங்கவில்லையாம். அந்தக்கோபத்தை இப்போது நேரம் பார்த்து தீர்த்துக்கொள்கிறார்கள். இன்னும் என்னன்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ?



Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

  1. சகோ.கஸாலி!பிரணாப் தவிர யார் வந்தாலும் சரியே!

    இப்போதைய நிலையில் என்னுடைய தேர்வு வரிசைப்படி

    டாக்டர் அப்துல் கலாம்

    சோம் நாத் சட்டர்ஜி

    அன்சாரி அவர்கள்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.