என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜூன் 19, 2012

9 தமிழக அரசியலில் ஒரு அதிசயம் (பொடிமாஸ் 19-06-2012)




ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து கலாம் விலகியதால் செய்வதறியாது விக்கித்துப்போயுள்ளார் தீதீ மம்தா. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது என்றும் தன் வேதனையை கொட்டியுள்ளார். இதற்கிடையில் பா.ஜ.க.,வின் வேட்பாளராக பி.ஏ.சங்மா முன்னிறுத்தபடுவார் என்று தெரிகிறது. சங்மாவிற்காக தீதியிடமும் ஆதரவை கேட்டுவருகிறார்களாம் பா.ஜ.க.,வினர்.

ஆனால், பா.ஜ.க.,வின் தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி ஜனாதிபதிக்கு பிரணாப்தான் பொருத்தமானவர் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதைப்போல் சிவசேனாவும் காங்கிரஸ் வேட்பாளரையே ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அதுவரை ஆளாளுக்கு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். இதற்கு பேசாமல் ஒரு தேர்தல் வைத்து மக்களிடமே முடிவு செய்ய சொல்லிவிடலாம். மக்களிடம் பணமாவது புழங்கும்.

=================



ஜனாதிபதி வேட்பாளார் குழப்பமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்கிடையில் பிரதமர் வேட்பாளர் குழப்பம் வந்துவிட்டது பி.ஜே.பி.,க்கு. 2014-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலின் பி.ஜே.பி., தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி பிரதமர் வேட்பாளரை இப்போதே அறிவிக்க வேண்டும். குறிப்பாக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது, மதச்சார்பற்ற ஒருவர்தான் பிரதம(வேட்பாளராக)ராக வரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ்குமார்.

ஏற்கனவே குஜராத்தின் முன்னாள் முதல்வர் சேசுபாய் பட்டேல் மோடிக்கு எதிராக காய் நகர்த்தி வரும் வேளையில் இப்போது நிதீஷ்குமாரும் மோடிக்கு செக் வைத்துள்ளார். சிவசேனாவும் நிதீஷின் கருத்தை வழிமொழிந்திருக்கிறது. பா.ஜ.க.,தலைவர் நிதின் கட்காரியும் மோடிக்கு எதிராகவே இருக்கிறார். பார்க்கலாம் போகப்போக என்ன ஆகிறது என்று?
ஆனால் ஒன்று........ஜனாதிபதி தேர்தலாகட்டும், பிரதமர் தேர்தலாகட்டும், அல்லது இடைத்தேர்தலாகவே இருக்கட்டும் தேர்தல் என்றால் பரபரப்புதான் போல....

=================



தி.மு.க.,ஆட்சியில் நியமிக்கப்படுபவர்கள் அண்ணா.தி.மு.க.,ஆட்சியிலும், அண்ணா.தி.மு.க.,ஆட்சியில் நியமிக்கப்படுபவர்கள் தி.மு.க.,ஆட்சியிலும் மாறி மாறி மாற்றப்படுவார்கள். ஆனால், இப்போது வழக்கத்திற்கு மாறாக தமிழக அரசியலில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. தமிழக சட்டசபை செயலாளராக கடந்த தி.மு.க.,ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஜமாலுதீனுக்கு பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், ஜெயலலிதா அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்துள்ளார். அதனால்தான் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்கிறதோ என்ன எழவோ....

====================

ஒரு வழியாக புதுக்கோட்டை தேர்தல் முடிவு வந்துவிட்டது. ஆளுங்கட்சி கோடிக்கணக்கில் சிலவு செய்து புதுக்கோட்டை மக்களிடம் நல்லாட்சி சான்றிதழ் பெற்று தன் எம்.எல்.ஏ.,எண்ணிக்கையில் ஒன்றை வரவு வைத்துள்ளது. அதேநேரம் சங்கரன்கோவிலைபோல் ரிசல்டை எதிர்பார்த்து தே.மு.தி.க.,விடம் ஏமாந்துபோயுள்ளது.

வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்து ஆளுங்கட்சி போட்டியிட்டாலும்கூட, எந்த ஒரு எதிர்கட்சியும் டெபாஸிட் பெறக்கூடாது, குறிப்பாக தே.மு.தி.க., டெபாசிட் இழக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அமைச்சர்கள் உள்ளிட்ட பரிவாரங்களை இறக்கி, பல கோடிகளை சிலவு செய்தும்நான் ஏற்கனவே பதிவிட்டபடியே 30,500 வாக்குகளை பெற்று விஜயகாந்த் தன் திராணியை நிருபித்துவிட்டார்.

அதேநேரம் ஆந்திர மாநிலத்தில் நடந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் 15 சட்டமன்றத்தொகுதிகளிலும், ஒரு நாடாளுமன்றத்தொகுதியிலும் வெற்றிபெற்று ஆளும் காங்கிரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி ஜெயிப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பதும், தோற்பதும் வழக்கமான நிகழ்வுதான்.  நல்லவேளையாக, தமிழ் நாட்டின் கலாச்சாரம் மற்ற மாநிலங்களுக்கு இன்னும் பரவவில்லை. அப்படி பரவியிருந்தால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு டெபாசிட்டே கிடைத்திருக்காது. மொத்தத்தில் தமிழ் நாட்டில் தோற்ற ஜனநாயகம், ஆந்திராவில் வென்றுள்ளது.

===================



வீரபாண்டியார், தளபதி போன்ற தி.மு.க., நிர்வாகிகள் கைது செய்யப்படுவது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க, விரைவில் பொதுக்குழு கூட்டப்படும்- கலைஞர் அறிவிப்பு#
அப்படியே ராசா, கனிமொழியை பிடித்து உள்ளே வைத்த மத்திய அரசுக்கு எதிராகவும் ஒரு முடிவெடுங்க

********

பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: ஜி.கே.மணி# பேசாம நீங்களே இன்னொரு கட்சி ஆரம்பித்து பா.ம.க.வோடு கூட்டணி வச்சுக்கங்களேன்..........


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் தொடருங்கள் உங்கள் அரசியல் பதிவுகளை..TM 2

    பதிலளிநீக்கு
  2. நல்லாத்தான் இருக்கு பொடிமாஸ்

    பதிலளிநீக்கு
  3. மேலே இருக்கிற செய்தி அலசல்களை விட.. என் முகப்புத்தகம், ட்வீட்டிலிருந்து........ இந்த தலைப்புக் கீழ இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு...

    பகிர்வுக்கு நன்றி. ரஹீம் கஸாலி சார்...!

    பதிலளிநீக்கு
  4. அருமையான தகவல்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பரபரன்னு இருக்கு எல்லாமே!
    (எனது புதிய பதிவு படித்தீர்களா? நன்றி!)

    பதிலளிநீக்கு
  6. மோடி என்பவனைப்பற்றி குறிப்பிடும்போது தயவுசெய்து "பயங்கரவாதி மோடி" என்று குறிப்பிடவும்..

    பதிலளிநீக்கு
  7. முழுக்க முழுக்க அரசியல் தானா...??? என்ன பெரிய அதிசயம்...

    பதிலளிநீக்கு
  8. /////// இதற்கு பேசாமல் ஒரு தேர்தல் வைத்து மக்களிடமே முடிவு செய்ய சொல்லிவிடலாம். மக்களிடம் பணமாவது புழங்கும்.///////// ஆஹா.... என்ன ஒரு தொலைநோக்குப்பார்வை!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.