என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஜூன் 09, 2012

14 துண்டு போட்ட ராசாவும்...மொட்டை போட்ட நேருவும்.....






கடந்த ஒன்றரை வருடங்களாக திகாரில் கொள்ளை கொள்கையை பரப்பிய தி.மு.க.,கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை மண்ணை மிதித்திருக்கிறார்.

அவரை விமான நிலையத்தில் கனிமொழிக்கு கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்டவர்களை விட ஒரு ஆள் கூடுதலாக (அதாவது கனிமொழிக்கு 1002 பேரும், ராசாவுக்கு 1003 பேரும்) கலந்துகொண்டதாக கலைஞர் புள்ளிவிவரம் கொடுத்து தன் நகைச்சுவை உணர்வை காட்டியிருக்கிறார். மேலும், இது அண்ணன் தம்பி உணர்வுடன் நடந்த சந்திப்பு என்று கூறி நெஞ்சை தொட்டுள்ளார். தன் மகள் என்றதும் கனிமொழியை சந்திப்பதற்காகவும், வெளியேக்கொண்டு வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டார் கலைஞர் என்றால் அது மிகையில்லை. ஆனால், ராசாவின் ஜாமீனுக்கு ஏதும் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் ராசாவையையே மறந்து போயிருந்தார் கலைஞர். இதுதான் தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் மரியாதை போல....

========================




 தன் தம்பி ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கைது செய்யும்வரை தாடியை எடுக்க மாட்டேன் என்று சபதம் போட்டு இரண்டு மாதங்களை கடந்து தாடி வளர்த்து வந்த நேரு திடீரென்று தாடியை எடுத்திருக்கிறார்....கூடவே முடியையும் மழித்து மொட்டை போட்டிருக்கிறார். கொலையாளிகள் பிடிபட்டுவிட்டார்களா? அல்லது பிடிபடவே மாட்டார்கள்/ பிடிக்கவே மாட்டார்கள் அரோகராதான் என்று நினைத்து மொட்டை போட்டாரா நேரு என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.

=========================

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு போகும் ஜெயலலிதா அலுங்காமல் குலுங்காமல் போவதற்கு வசதியாக சாலையெங்கும் இருக்கும் வேகத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதாம். வேகத்தடைகள் என்பது பள்ளி, கல்லூரி போன்ற முக்கிய இடங்களில் விபத்து நடக்காமல் இருப்பதற்கு போடப்படுவது. அதைப்போய் எடுக்கலாமா?. ஜெயலலிதா இன்று வருவதோடு சரி....மற்றபடி எழவே விழுந்தாலும் அடுத்த தேர்தல் வரை எட்டிப்பார்க்கமாட்டார். ஒரு ஐந்து நிமிட பயணத்திற்காக இவ்வளவு களேபரமா மற்றவர்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.

=======================


Post Comment

இதையும் படிக்கலாமே:


14 கருத்துகள்:

  1. (அதாவது கனிமொழிக்கு 1002 பேரும், ராசாவுக்கு 1003 பேரும்) //

    hmmmmmmmmmmmmmmm ஒK ஓK இவர் இப்படித்தானாக்கும்

    பதிலளிநீக்கு
  2. ஸலாம் சகோ.கஸாலி,

    //பிரச்சாரத்திற்கு போகும் ஜெயலலிதா அலுங்காமல் குலுங்காமல் போவதற்கு வசதியாக சாலையெங்கும் இருக்கும் வேகத்தடைகள் நீக்கப்பட்டுள்ளதாம்.//

    எங்க ஊர் காரர் ஜி.கே.வாசன் மூப்பனார்...
    மத்திய போக்குவரத்து மந்திரி ஆன உடன்.... என்ன செய்தார் தெரியுமா...?

    இரண்டு பெரிய்ய்ய்ய்ய்ய்ய வேகத்தடைகள் போட்டார்.... தஞ்சை-குடந்தை-விக்கிரவாண்டி (NH45c) தேசிய நெடுஞ்சாலையில்...!

    எங்கே தெரியுமா...?
    அந்த சாலையின் ஓரத்தில் அவரின் வீடு உள்ளது...!வீட்டின் காம்பவுண்டு ஸ்டார்ட் ஆகும் இடத்தில் ஒன்று..... காம்பவுண்டு முடியும் இடத்தில் ஒன்று.... இரண்டு ஸ்பீடு பிரேக்கர்கள் போட்டார்...!

    எதுக்கு..? தன் வீட்டுக்கு எதிரே போகும் - வரும் வாகனங்கள்.... நின்று நிதானமா பிரேக் போட்டு பணிவா மெதுவா அடக்க ஒடுக்கமா மருவாதியா போகனும்னுதானா....? இதெல்லாம் ஒரு பந்தாவா...!

    எனக்கு ஒரு ஆசை என்னன்னா.......
    முதல்வர் ஜெ. புதுக்கோட்டைக்கு (திருச்சி-சென்னை சாலையில் போகாமல்...) குடந்தை-தஞ்சை வழியா அந்த ஸ்பீடு பிரேக்கர் மேலே ஏறி இறங்கி போகணும்..!

    'தேசிய நெடுஞ்சாலையில் போய்... அதுவும் இந்த இடத்தில் போய்... யாரு, எதுக்கு, என்ன காரணத்தின் பேரில்வேகத்தடைகள் போட்டா...'ன்னு கேட்டு... அதை இரண்டையும் தூக்கணும்..!

    எப்பூடி...? கோர்த்து விட்டுட்டோம்ல...!
    இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ...?!?!?!?!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

    பதிலளிநீக்கு
  3. kevalangal!

    neenga vlicham pottathukku-
    paaraattukal!

    பதிலளிநீக்கு
  4. இந்த அரசியல் வியாதிகளே இப்படித்தேன்! என்னத்த சொல்ல? :(

    பதிலளிநீக்கு
  5. பதிவில் கஸாலியின் கருத்தில் ஒன்றும் பின்னூட்டத்தில் சிட்டிசன் கோர்த்து விட்டதும் என் கவனத்தை ஈர்த்தது.அரசியல்வாதிகள் என்னதான் பொற்ப்போக்குகளாய் இருந்தாலும் அவர்களுக்கென்று குடும்பம்,உறவு,பாசம்,நட்பு என்ற நற்குணங்கள் கலந்த மனிதர்களே.எனவே நேருவின் சகோதரர்க்கு தாடி வைச்சதோ,மொட்டை போட்டதோ கேலிக்குரியதாக்க வேண்டாம்.பதிலாக நேருவின் மொட்டையால் யாராவது பலிகடாவாகமல் இருக்கட்டும்.

    சிட்டிசன் கோர்த்துவிட்ட ஜி.கே வாசன் ரோடு பிளாக்கில் ஜெயலலிதா பயண்ம் வருவதை விட யாராவது சட்டபூர்வமாகவே அணுகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேருவின் மொட்டையை கேலியாக சொல்லவில்லை சார்.கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை சொல்லியிருக்கேன்.

      நீக்கு
  6. யோசிப்பதில் மன்னன் நீ கஸாலி.உன்னிடம் நான் பாடம் கற்றுக்கொள்ள வரவா பதிவு எப்படி எழுதுவது என படிக்க .

    பதிலளிநீக்கு
  7. /* வேகத்தடைகள் என்பது பள்ளி, கல்லூரி போன்ற முக்கிய இடங்களில் விபத்து நடக்காமல் இருப்பதற்கு போடப்படுவது. அதைப்போய் எடுக்கலாமா?. */

    ஏன் வேகத்தடைல ஏறி இறங்குனா குறைஞ்சிடுவாங்களாமாம்???? அவ்வ்வ்..

    ஓக்கே ஜோக் அபார்ட்ஸ்.... கஸாலி..

    இது பாதுகாப்பு சம்பந்தப் பட்டது.... வேகத்தடை இருந்தால் அந்த இடம் எதிரிகள் டார்கெட் பண்ண ஏத்த இடம்.... அங்கு வண்டி வேகம் குறையும் என்று முன்னறே தெரியும்... சோ, இது தான் உண்மை காரணம்....

    அப்படி யார் அவருக்கு எதிரின்னு கேட்டா??? அதுக்கு என் பதில் ஹி..ஹி..ஹி.. தான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியல்ல...பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு எல்ல இடத்திலிருந்தும் அச்சுறுத்தல் அதிகம்....பொதுக்கூட்ட மேடையை விட புல்லட் புருஃப் வைத்த காரில் பாதுகாப்பு பிரச்சினை குறைவுதான்.

      நீக்கு
  8. //ஒரு ஐந்து நிமிட பயணத்திற்காக இவ்வளவு களேபரமா மற்றவர்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்.//

    அம்மா இதை எல்லாம் நினைத்தாலும் அதிகாரிகள் விட மாட்டார்கள். :-)

    பதிலளிநீக்கு
  9. நேரு போட்ட மொட்டை ஒன்னரை வருடங்களுக்கு முன்பே ராசாவுக்கு போட்டுடாங்க அது அவருக்கே தெரியும்...அப்ப காலில் விழுறது? அரசியல்ல இதல்லாம் ஜகஜமப்பா......!!!!!

    புதிய வரவுகள்:
    மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்,இறைவன் நாடினால் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  10. அரசர்குளத்தான்! நீண்டநாள் வாசகன்...ஆனாலும் இன்ற் ஏதாவது எழுதனும் போலஇருந்தது....நேரு மொட்டைபோட்டது..கருணாநிதி ராசவுக்கு
    ஆப்பு(ஐஸ்!1002,1003)வைத்ததற்காக இருக்கலாம் தானே? இன்றைக்கு உனக்கு நாளைக்கு என்க்கு....கருணாநிதி டெசோ..அது இது என்று எதை செய்தாலும் ஈழத்தமிழர்கள் அவரை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டர்கள்...(மறுபடியும் முதல்ல இருந்தா...)என்றுதான் திகைப்பார்கள்....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.