என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜூன் 01, 2012

13 ஒரே மொக்கை...ஓஹோன்னு ஹிட்டு.....(பொடிமாஸ் 01-06-2012)





ஏற்றிய பெட்ரோல் விலையிலிருந்து ரூ 1.60 ஐ குறைத்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. ஏற்றும்போது மட்டும் யானை அளவிற்கு ஏற்றுகிறார்கள். குறைப்பதாக இருந்தால் பூனையளவு மட்டுமே குறைக்கிறார்கள்.

போராட்டம் செய்தவர்களை இந்த கண்துடைப்பு மூலம் அமைதியாக்கும் தந்திரத்தை மத்திய அரசு நன்றாகவே உணர்ந்திருக்கிறது.

நான் நினைக்கிறேன்.... பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசின் டார்க்கெட் 6 ரூபாயாகத்தான் இருந்திருக்கும். அந்த ஆறு ரூபாயை மட்டும் ஏற்றினால் விலையை குறைக்க சொல்லி மக்கள் போராடுவார்கள். அப்புறம் ஆறு ரூபாயிலிருந்து குறைக்கமுடியாது என்பதால் ஏழு ரூபாய்க்கு மேல் ஏற்றி அதன் பிறகு குறைப்பதாக நாடகம் ஆடியிருக்க வேண்டும். இந்த நாடகத்தை எண்ணை நிறுவனங்களிடமும் சொல்லிவிட்டே செய்திருக்க வேண்டும். ஒருவாராம் விற்றவரை ஆதாயம் என்று அவர்களும் கம்மென்று இருந்துவிட்டார்கள். விலை குறைத்ததுபோலும் ஆச்சு...மக்களை திருப்தி(?) படுத்தியதை போலவும் ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறது மத்திய அரசு.

==============



நாடுமுழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்துசெய்ததன் மூலம் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறது கடந்த வாரம்பெட்ரோல் விலையை ஏற்றி மக்களின் வயிற்றில் அடித்த அதே மத்திய அரசு.

தமிழ் நாட்டில் வாங்கிய சிம்மை வைத்துக்கொண்டு வெளி மாநிலம் போய் பேசமுடியாது. அப்படி வெளி மாநிலம் போயிருப்பவர்களை இங்குள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசவும் முடியாது. அதாவது இன்கம்மிங், அவுட் கோயிங் என்று வந்தாலும் காசு. போனாலும் காசு. அப்படி கொள்ளை அடித்து கொண்டிருந்தனர்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு என்று நாம் தான் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், செல்போன் நிறுவனங்களை பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனித்தனி நாடே...அப்படி நினைத்துத்தான் காசை பிடுங்கிக்கொண்டிருந்தனர். தொடர்ச்சியாக கொஞ்ச நேரம் பேசிவிட்டு வரும் சார்ஜை பார்த்தால், ஃப்ளைட் பிடித்து நேரில் பார்த்து பேசியிருக்கலாமோ என்று நினைக்க தோன்றும் அளவிற்கு காசு எகிறியிருக்கும். இதற்கெல்லாம் ஆப்ப்டித்துள்ளது மத்திய அரசு......இனிமேல் சொல்லிக்கொள்ளலாம் ஒன் இந்தியா என்று....

==============

பாரத் பந்த் என்ற பெயரில் நேற்று நடத்தப்பட்ட பந்தில் தமிழகத்தில் ஒரு பெட்டிக்கடை கூட அடைக்கப்படாமல் பிசுபிசுத்து போய்விட்டது. ஒரு நாள் பந்த் என்று அறிவித்துவிட்டு அத்துடன் விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். ஆனால், மக்கள் ஒவ்வொரு நாலும் உழைத்தாக வேண்டுமே? ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் நமக்கென்ன லாபம் என்று அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்காகத்தான் பந்த் அறிவித்துள்ளார்கள் என்று நீங்கள் நினைத்தால் சாரி....நீங்கள் இன்னும் வளரனும்....

===============

நேற்று மதியம் பிரபல பதிவர் செங்கோவியிடமிருந்து போன். நான் இன்று வெளிநாடு கிளம்புகிறேன் என்றார். எனக்கோ அதிர்ச்சி. என்ன அதற்கிடையில் என்றேன். அதற்கிடையிலா நான் வந்து ஒருமாசம் முடிந்துவிட்டது என்றார். அடேங்கப்பா எவ்வளவு வேகமாக நாட்கள் போகிறது?.ஏதாவது எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் செங்கோவியிடம் லோக்கல் காலிலேயே பேசி தெளிவு படுத்திக்கொள்வேன். இனி, ஐ.எஸ்.டி.தான் போடனும் என்று கவலையா போச்சு........சரி நமக்கென்ன ஆச்சு..... நம்ம மிஸ்டு கால்தானே கொடுக்கப்போறோம்ன்னு மனசை தேத்திக்கிட்டேன்.

================



கடந்த இரு தினங்களாக பவர் ஸ்டாரை  பற்றி போட்ட பதிவுகளுக்கு மொக்கைகளுக்கு நல்ல வரவேற்பு....சுருக்கமாக சொன்னால் ஒரே மொக்கை ஒஹோன்னு ஹிட்டு....

+++++++++++++++++++++++++++++++++++++



Post Comment

இதையும் படிக்கலாமே:


13 கருத்துகள்:

  1. பெட்ரோல் விலையேற்ற விவகாரத்தில் உங்கள் கருத்து factu... factu...factu...factu...

    பதிலளிநீக்கு
  2. பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு குட்டு என்றால், ரோமிங் கட்டணத்தில் ஷொட்டு... :) ;D

    ஒன் இந்தியா - Same pinch

    பதிலளிநீக்கு
  3. //நீங்கள் இன்னும் வளரணும்...//

    உங்களுக்கு எப்பிடித் தெரியும்...நான் வளரணும்னு...!!

    பதிலளிநீக்கு
  4. //நம்ம மிஸ்டு கால்தானே கொடுக்கப்போறோம்ன்னு மனசை தேத்திக்கிட்டேன்.//

    அட! நம்மாளு... நண்பேன்டா...

    பதிலளிநீக்கு
  5. //ஒரே மொக்கை ஒஹோன்னு ஹிட்டு....//

    நல்லாருங்க... நல்லாருங்க... :D

    பதிலளிநீக்கு
  6. நான் நினைக்கிறேன்.... பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசின் டார்க்கெட் 6 ரூபாயாகத்தான் இருந்திருக்கும்.

    ஹா ஹா ஹா இதையேதான் நானும் நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  7. பெட்ரோல் விலைய ஏத்தி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா மட்டும்அடிக்கல மத்திய அரசு.......

    ஒட்டுமொத்த நடுத்தர வர்க்கத்தோட வயித்துலயும் அடிச்சுருக்கு........

    பதிலளிநீக்கு
  8. பாரத் பந்த் என்ற பெயரில் நேற்று நடத்தப்பட்ட பந்தில் தமிழகத்தில் ஒரு பெட்டிக்கடை கூட அடைக்கப்படாமல் பிசுபிசுத்து போய்விட்டது.
    /////////////
    இல்லை திருப்பூர்ல முழுஅடைப்பு நடந்தது குண்டூசி கூட கிடைக்கல.........ஆனா கோவை இயல்பா இருந்தது!

    பதிலளிநீக்கு
  9. /* பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசின் டார்க்கெட் 6 ரூபாயாகத்தான் இருந்திருக்கும். அந்த ஆறு ரூபாயை மட்டும் ஏற்றினால் விலையை குறைக்க சொல்லி மக்கள் போராடுவார்கள். அப்புறம் ஆறு ரூபாயிலிருந்து குறைக்கமுடியாது என்பதால் ஏழு ரூபாய்க்கு மேல் ஏற்றி அதன் பிறகு குறைப்பதாக நாடகம் ஆடியிருக்க வேண்டும் */

    ஹா..ஹா..ஹா.. கண்டிப்பா அப்படி தான் இருந்து இருக்கும்.... முற்றிலும் உண்மை உண்மை...உண்மை

    பதிலளிநீக்கு
  10. நாளைக்கு(ம்) பவர் ஸ்டார் பத்தி(யும்) பதிவு(ல) போடுவீங்களா?

    பதிலளிநீக்கு
  11. //ஏதாவது எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் செங்கோவியிடம் லோக்கல் காலிலேயே பேசி தெளிவு படுத்திக்கொள்வேன்.//

    ஆமா..........இவரு ஒரு சைண்டிஸ்ட்டு..ஆராய்ச்சில சந்தேகம் வந்து ‘ஐன்ஸ்டீன்’ செங்கோவிகிட்ட கேட்பாராம்..ஏன்யா இப்படி.......

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.